(Reading time: 18 - 35 minutes)

ப்ப பயோசிய மூட போறீங்களா? அங்க வேலை செய்ற மத்தவங்க சேஃப்டிக்கு என்ன செய்யப் போறீங்கன்னு கேட்டேன்…....இல்ல எனக்கு மட்டும்தான் ப்ராப்ளமா….அப்ப எங்க போனா எனக்கு ப்ராப்ளம் இல்லைனு சொல்லுங்க…..அங்க போய்டுறேன்….. இந்தா இந்த வீட்ல இருந்தா இது இடிஞ்சி விழலாம்…வெளிய கார்ல போனா ஆக்சிடென்ட் ஆகலாம்…..வெறும் வெட்டாத்தரையில போய் உட்கார்ந்துகிட்டாகூட earth quake வந்து தரை வெடிச்சு நான் உள்ள போய்டலாம்….” பொரிந்தவள்

அவன் இமை கொட்டாது நேராக பார்த்து நின்ற பார்வையில் கொஞ்சம் தணிந்து “ப்ச்.. நீங்க சின்ன வயசிலருந்து உங்களுக்கு  முக்கியமானவங்களைலாம் லாஸ் செய்துட்டதால…… தேவையில்லாம என் விஷயத்துல பயப்படுறீங்கன்னு நினைக்கிறேன் மித்ரன்…..” என்று அவன் செயலை காரணபடுத்தினாள்.

“ஆனா நான் ஒரு டாய் கிடையாது பத்ரமா போட்டு பூட்டி வைக்க….உயிருள்ள மனுஷி….அலவ் மீ டு லிவ் மை லைஃப்…. ப்ளீஸ்”

அந்த நிமிடம் வரை எப்படியாவது அவள் பயோசி போவதை தடுத்துவிட வேண்டும் என நினைத்திருந்த மித்ரனின் மனம் இங்குதான் மாறத் தொடங்கியது….. அவள் எதனால் இப்படி ரியாக்ட் செய்கிறாள் என புரிகிறது தானே…..இதில் இவன் இன்னும் இன்னும் விளக்கம் சொல்ல ட்ரைப் பண்ணா அவளோட கோபத்தோட அளவுதான் பெருசாகும்….கொஞ்ச நாள் போகவும் அவளே ரியலைஸ் செய்துடுவா….

“உங்க ஃப்ரொஃபஷனே எவ்ளவு ரிஸ்கான ஒன்னு…..நீங்க அதை ஹேண்டில் பண்ணிறுவீங்கன்னு நம்பி நான் நிம்மதியா இருக்கலையா…..அது மாதிரி ட்ரஸ்ட் மீ…..” அவள் தொடர….

அவளோட பாதுகாப்பை பலப்படுத்திவிட்டு அவளை அவள் விருப்பப்படி செயல்பட விடுவது என முடிவு செய்தான் அவன்.

“சரி மனு….உன் இஷ்டப்படி நீ சி இ ஓ வா ஜாய்ன் செய்துக்கோ….. பைதவே எனக்கு உன்ட்ட இருந்து ஒரு ஹெல்ப் வேணும் மனு” என அவன் வெகு இயல்பாக சொல்ல….. இப்போது சடென் ப்ரேக் போட்டது போல நின்று போனாள் மனோ.

மெல்ல எனினும் தான் ஏன் இவ்ளவு தூரம் இந்த விஷயத்திற்கு ரியாக்ட் செய்திறுக்கிறோம் என அவளுக்குமே புரிகிறது….ஆனாலும் இதில் பின் வாங்க ஏனோ அவளுக்கு மனமில்லை…. கோபமா பேசுனது வேணா தப்பா இருக்கலாம்… ஆனா பயந்து பயந்து ஒளியுறத எப்டி சரின்னு சொல்ல? என்பது அவளுக்கு….

ஆக அடுத்து “என்ன ஹெல்ப் மித்ரன்? ” என அவள் கேட்கும் போது அதில் கோபம் துளியும் இல்லை ஆனால் முழு தெளிவு இருந்தது அதில்…

“நான் போலீஸ்னு உன் அப்பா வீட்ட தவிர வெளிய யாருக்கும் தெரியாது….இப்போ இங்க இந்த ஆடிட்டர் விஷயமா இன்பாட்ட பேசுறப்ப அவட்டயும் சொல்லிருக்கேன்…..அம்மாட்ட கூட சொல்லாம இருக்கனும்னு அவள சொல்லி வச்சுறுக்கேன்…. நீயும் அதை மெயின்டெய்ன் செய்தா எனக்கு வசதியா இருக்கும்…பயோசி பீபுள்க்கு இது தெரிய வந்தா இன்வெஸ்டிகேஷன்க்கு ப்ரச்சனையாகும்….” அவள் சி இ ஓ வாக ஜாய்ன் செய்த பின் என்ன செய்ய வேண்டும் என அவன் பேசத் தொடங்கிவிட்டதால், அவனும் தன் முடிவில் தெளிவாக இருப்பது புரிகிறது இவளுக்கு.

சம்மதமாக தலையை ஆட்டி வைத்தாள் இவள்.

“இன்னொரு விஷயம்….இது வெறும் இன்ஃபோ ஷேரிங் தான்….இதை கேட்டுட்டு நீ கொஞ்சம் கவனமா இருந்தா எனக்கு சந்தோஷம்…” அவன் சொல்ல விரும்பும் ஒவ்வொன்றையும் கவனமாக வார்த்தை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு முடிவுகளையும் இவளிடமே விட்டு பேசுவது அவளுக்குப் புரிய…..இப்போது கஷ்டமாக இருக்கிறது அவளுக்கு….ரொம்ப காய்ச்சுட்டமோ அவன?

“சொல்லுங்கப்பா என்ன விஷயம்?” என்று இவள் கேட்கும் போது இவள் மனதில் ஓடுவதை கணவனுக்கும் உணர முடிந்தது.

“அப்பா உயில்படி .5 இயர்ஸ்குள்ள டிவோர்ஸ் ஆனா ப்ராபர்டி திரும்பி போய்டும்…… இதுக்கு இடையில  குழந்தை பிறந்திருந்தா அப்டி எதுவும் ஆகாதுன்னு இருக்கு…….அதுமட்டுமில்லாம அந்த ஆடிட்டர் மாசிரன் தன் பொண்ணு தார்கிகாவ எனக்கு மேரேஜ் செய்துடனும்னு ப்ளான் செய்துறுக்கான்….அம்மாவுக்கும் அந்தப் பொண்ண எனக்கு செய்யனும்னு எண்ணம் இருந்திருக்கு…. மாசிரன்ட்ட அம்மா சம்மதமும் சொல்லி இருந்திருக்காங்க….. இதனாலதான் அந்த ஆள்  அவ்ளவுதூரம் நீயா விலகிப் போய்டனும்னு ப்ளான் செய்தது…. இப்பவும் அவன மட்டும் தான் அரெஸ்ட் செய்துறுக்கு….அவன் பொண்ணுல இருந்து எல்லோரும் வெளியதான் இருக்காங்க…..யார் என்ன செய்வாங்கன்னு சொல்ல முடியாது…..” அவன் சொல்ல இன்பாவுக்கு திருமணமாகமலிருப்பதற்கும்…..வர்ஷன் விஜிலா பிரிந்ததற்கும் இதுதான் காரணமாக இருக்குமோ என தோன்றத் தொடங்குகிறது இவளுக்கு….

Episode # 17

Episode # 19

தொடரும்!

{kunena_discuss:928}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.