(Reading time: 18 - 35 minutes)

பின்னே இவ செங்கல் சைஸுக்கு எதையோ சொன்னா அதுக்கு செங்கோட்டை ரேஞ்சுக்கு பதில் சொன்னா எப்படியாம்?

இதற்குள் “இன்னைக்கு வந்த அவ பார்க்கலாம்னா இந்த வீட்ல பிறந்த நீ பார்க்கிறதுக்கு என்ன?” என பாய்ந்து கொண்டு வந்தார் பாட்டி….

அவர் கண் முன் கதை எப்படியெல்லாம் பிச்சுகிட்டு போகுது…பதறுவார்தானே….. நேஷன் க்ரூப்ஸின் ஒரு சின்ன அங்கம்தான் பயோசி….அதுவே மனோ கைக்கு போயிட கூடாதுன்னு அவர் பயந்துகிட்டு இருக்க….இதுல மொத்த நிறுவனமும் மனோ கையில் என்றால்…..கற்பனையை தாங்க கூட அவருக்கு சக்தி இல்லை….தலை தாறுமாறா சுத்துதே … இன்பாவிடம் எகிறினார்…

“என்ன பாட்டி புரியாம பேசுறீங்க…..மேரேஜுக்கு பிறகுதான் எந்த ப்ராப்பர்டி மேலயும் எனக்கு ரைட் வரும்னு அப்பா எழுதிருக்காங்களே மறந்துட்டீங்களா…?” இன்பாவின் கேள்வியில் அவர் விக்கித்துப் போய் நின்றுவிட்டார்.

இன்பாவின் பதிலில் மனோவை மட்டும் ஒரு முறை நிமிர்ந்து பார்த்துவிட்டு தன் சாப்பாட்டில் கவனம் செலுத்தினான் மித்ரன்.

அதே நேரம் அவனை பார்த்த அவன் அம்மாவும் அவனைப் பின்பற்றி மனோவை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டுமாக இன்பாவிடம் திரும்பி….

“உன் தம்பி இதுக்கு ஒத்துகிட்டான்னா மட்டும் உன் அண்ணாட்ட இதைப் பத்தி பேசலாம்…. முதல்ல அவனும் மனோவும் பேசி முடிவு செய்யட்டும்….. அதுவரைக்கும் இப்ப யாரும் இதப் பத்தி பேச வேண்டாம் ” என்றார்.

அவ்வளவுதான் பாட்டி பஸ்பமாக்க துடிக்கும் பசித்த அக்கினியின் பார்வையுடன் களஞ்சியத்தை எதோ கத்த எத்தனித்தவர்….

“அத்த நீங்க சரியாவே சாப்ட மாதிரி இல்ல….. இந்த பழத்தையாவது சாப்டுங்க….” என உரிமையாய் தன் மாமியாரை உபசரித்துக் கொண்டிருந்த மனோவைப் பார்த்துவிட்டு…..எதையோ வாய்க்குள்ளேயே முனங்கியபடி அங்கிருந்து கிளம்பிப் போனார்.

 களஞ்சியமும் மித்ரனும் அதன் பின்னும் ஒரு வார்த்தை நேருக்கு நேர் பேசிக் கொள்ளவில்லை எனினும்…...அதன்பின் சாப்பாட்டு நேரம் ஒரு வகையில் நன்றாகவே கழிந்தது…..

ஏதோ மனோவுக்குத்தான் மித்ரன் பத்தி எல்லாமே தெரியும் என்பது போல் “மித்ரனுக்கு இது பிடிக்குமா மனோ….?” “இத சாப்டுவானா அவன்? “ என்ற மாதிரியான கேள்விகளுடன் இன்பா ஒவ்வொறு பதார்த்தத்தையும்  இவள் புறம் நகர்த்த…

இவள் மித்ரன் முகம் பார்த்து பார்த்து அவன் சம்மதித்தவற்றைப் பரிமாற….. இப்பொழுது அவனுமே கொஞ்சம் இயல்பாக சாப்பிட… கூடவே அவனும் இவளுக்கு பரிமாற என……ஏதோ வகையில் இவளுக்குள் பரவுகிறது மன நிறைவு….

டுத்ததாய் இருவரையும் மாடியில் ஒரு அறைக்கு அழைத்துப் போன இன்பா….

“நீங்க எப்ப இங்க வந்தாலும் தங்குறதுக்குன்னு அம்மா இந்த ரூமை அரேஞ்ச் செய்ய சொன்னாங்க….” என சொல்லி அந்த அறையில் இவர்கள் இருவருக்குமாய் செய்யப்பட்டிருந்த அனைத்து வசதிகளையும்…..அங்கு இருந்த வாட்ரோபில் மனோவுக்கும் மித்ரனுக்குமாய் வாங்கி வைத்திருந்த உடைகள் வரை அனைத்தையும்… எது எங்கிருக்கிறது என காண்பித்து….

 “சாரீஸ்க்கு மட்டும் ப்லவ்ஸ் ஸ்டிச் பண்ணாம இருக்கு மனோ….அளவு ப்ளவ்ஸ் கொடு நான் எல்லாத்தையும் தச்சு வாங்கி கொடுத்துடுறேன்…” என்பது வரை விலாவாரியாக விளக்கி கடைசியாக

“இது உனக்கான ஸ்பெஷல் கிஃப்ட் மனோ…..அம்மா உன்ட்ட கொடுக்க சொன்னாங்க……” என சொல்லி வாட் ரோபின் அடி தட்டிலிருந்து ஒரு மெகாசைஸ் சூட்கேஸை உருவி அறையிலிருந்த சென்டர் டேபிளில் வைத்தவள்

“ரெண்டு பேருமா பாருங்க….முதல் நாள் கொஞ்ச நேரமாவது நம்ம வீட்ல நீங்க தங்கனும்….நைட்டும் இங்க இருக்க சொல்லிருப்பேன்….ஆனா ஸ்விஸ் போறேன்னுடீங்க…. இப்பவாவது இருங்க…..நான் கொஞ்ச நேரத்துல வரேன்….” என விட்டுவிட்டுப் போனாள்.

லைட் லேவண்டரும் ஆங்காங்கு பர்பிளுமாக பெயிண்ட் செய்யப்பட்டிருந்த அந்த விஸ்தார அறையையும் அதில் இருந்த பொருட்களும் ஒரு அந்நிய உணர்வை தந்தாலும் சொந்தமானவன் அருகாமை அவளை அந்த சூட்கேஸை திறக்க வைத்தது….

திறக்கும் வரைதான் தயக்கம் எல்லாம்….திறந்தபின்னோ நெகிழ்ந்து போனாள்….பின்னே எல்லாம் மித்ரன் பிறந்தப்ப அவனுக்கு பயன்படுத்தின பொருட்களாயிற்றே….

இதுதான் அவனோட முதல் ட்ரெஸ்…… பிறந்ததும் ஹாஸ்பிட்டல்ல குழந்தைக்கு போட்டு கொடுத்தாங்க…

இது அவங்க அப்பா அவனுக்காக அவங்களா வாங்கின முதல் ட்ரெஸ்…..

 பிறந்தப்பவே அவன் கைல நகம் அதிகம், உடனே வெட்ட முடியாதில்லையா, அவன் தன்னை ஸ்கராச் பண்ணிக்க கூடாதுன்னு  இந்த க்ளவ்ஸ் போட்டு வச்சோம்….

இது அவனோட ஃபர்ஸ்ட் டவல்… இதுல வச்சு தான் அவனை அவன் அப்பா கைல குடுத்தாங்களாம்…..அவங்க அப்பாதான் அவனை கைல வாங்கின முதல் ஆள்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.