(Reading time: 10 - 20 minutes)

வித்ரா, தாரிணி .. சாரி.. எங்களால் எங்கள் அம்மாவை சில ஊறின பழக்கங்களில் இருந்து மாற்ற முடியவில்லை.. அது உங்கள் அக்காவை பாதிக்கும் என்று எங்களுக்கு தோன்றியதில்லை.. நாங்கள் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம்.. “

“நீங்கள் எளிதாக சொல்கிறீர்கள்.. நாளை எங்களையும் எதாவது ஒரு விஷயத்திற்கு பேச மாட்டார்கள் என்று என்ன நிச்சயம் ?”

“இல்லடா.. அப்படியெல்லாம் நடக்காது.. நாங்கள் ஏற்கனவே சொன்னது போல், அவர்கள் முதல் தலைமுறை கிராமத்தை விட்டு வெளி வருபவர்கள்.. நாங்க படிப்பிற்காக வரும்போது ஊரில் உள்ள பொறமை பிடித்தவர்கள், நாங்கள் இருவரும் பட்டணம் சென்றால், கெட்டு விடுவோம். மேலும் அம்மா பட்டணத்து வாழ்கை முறை பழகி உறவுகளை மதிக்க மாட்டார்கள் என்று எல்லாம் சொல்லி, அம்மாவை ஒரு மாதிரி பயமுறுத்தி விட்டார்கள்.. அதன் விளைவுதான் யாராவது ஒரு வார்த்தை குறை சொன்னால் கூட தாங்கள் மாட்டர்கள்.

அம்மாவிற்கு உங்களையும், சொல்ல போனால் உங்கள் குடும்பத்தையும் பிடித்துதான் பெண் கேட்டார்கள்.. அவர்களின் எண்ணமெல்லாம் உங்களை எங்கள் கூட்டம் குறை சொல்லி விடக் கூடாது என்று தான், அவர்கள் முந்திக் கொள்கிறார்கள்... மற்ற படி உங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்..” என்ற அரவிந்த்,

“ப்ளீஸ் .. இது எவ்வளவு பெரிய வருத்தம் என்று எங்களுக்கு தெரியும்.. ஆனால் நம் வாழ்வின் புது அத்தியாயத்தை ஆரம்பிக்க போகும் இந்த நாளில் நீங்கள் இருவரும்  சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். இது உங்களுக்காக மட்டுமல்ல, உங்கள் அக்காவிற்காகவும் தான் சொல்கிறேன்.. அவர்கள் இன்று வெளியே கிளம்பியது உங்கள் சந்தோஷத்தை முன்னிட்டு தான்.. இன்று இந்த function நேரில் பார்க்க முடியா விட்டாலும், பின்னால் உங்கள் மாமாவோடு வந்து இந்த photo பார்க்கும் போது நீங்கள் சந்தோஷமாக இருப்பதை பார்த்தால் தான் அவர்கள் செய்ததற்கு பலன்.. அதற்காக உங்களை எல்லாவற்றையும் மறந்து போக சொல்லவில்லை.. தற்சமயம் ரிலாக்ஸ்டாக இருங்கள்.. “ என்று முடித்தான்..

அவன் சொல்வதில் உள்ள உண்மையை உணர்ந்த இருவரும் அதற்கு பின் முழு மனதோடு சிரிக்கா விட்டாலும், வருத்தத்தை முகத்தில் காண்பிக்காமல் இருந்ததர்கள்.

இவர்கள் இருவரும் பேசியது போல், அவர்களின் அம்மா, அங்கே தனியாக, பிரத்யாவின் அம்மாவிடமும், மாமியாரிடமும் தான் பேசியதற்கு மன்னிப்பும், வருத்தமும் தெரிவித்தார்கள்.. மேலும் இவர்கள் கல்யாணத்திற்கு ப்ரத்யா, தன் கணவனோடு வர தான் வேண்டுவதாகவும் கூறினார்.

பிரத்யாவின் பெற்றோருக்கு , இவரை பற்றி என்ன நினைப்பது என்று புரியாமல் சென்றார்கள்.

இத்தனைக்கும் காரணமான வித்யாவின் மாமியார், அடுத்து என்ன திட்டம் தீட்டி கலகம் பண்ணலாம்.. என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

ண்டபத்தை விட்டு வெளியே சென்ற ப்ரத்யா , நேராக தன் இஷ்ட தெய்வமான வடபழனி முருகன் கோவிலுக்கு சென்றாள்.

அவள் மனதில் எத்தனையோ வருத்தம் இருந்தாலும், அவர்கள் நிச்சய நேரத்தில் தான் சிந்தும் ஒரு துளி கண்ணீர் கூட அவர்களை பாதித்து விடக் கூடும் என்று அஞ்சினாள்.

அதனால் முருகன் சந்நிதானத்தில் நின்று சஷ்டி கவசம் சொல்லியவள், பின் சற்று நேரம் கழித்து தங்கள் வீட்டிற்கு சென்றாள்.

அவள் மாமியாரும், வித்யாவும் வந்திருக்க, இருவரிடத்திலும் பேசினாள்.

ப்ரத்யா மாமியார், அந்த அம்மா வந்து பேசியதை சொன்னார். பிறகு

“ப்ரத்யா, நான் சொல்வதை தவறாக எடுத்துக் கொள்ளாதே. இனிமேல் உன் தங்கைகள் திருமணம் முடியுமட்டும் நீ உன் அப்பா வீட்டிற்கு கூட செல்ல வேண்டாம்.. “ என

“நானும் அப்படிதான் நினைக்கிறேன் அத்தை..” என்றவள் பின் வித்யாவின் நெருங்கின மாச நிலையை எண்ணியவளாக , அவர்களை படுக்க சொன்னாள்.

தங்கள் அறைக்கு வந்த ப்ரயு, ஆதியின் போனிற்காக காத்திருந்தாள்.

ப்ரத்யா வீட்டிற்கு வருவதற்கு முன்பாகவே, ஆதியின் அம்மாவும், அவன் மாமனாரும் நடந்ததை அவனிடம் போனில் சொல்லி விட்டனர்.. பிரயுவின் அப்பா மிகவும் வருத்ததோடு மன்னிப்பும் கேட்டார். அவரின் தவறு இதில் என்ன என்று உணர்ந்த ஆதியும் அவரை சமாதனப் படுத்தினான்..

அவள் வெளியே போயிருக்கிறாள் என்று அவன் அம்மா சொல்லியதால், அவன் வழக்கத்தை விடவும் தாமதமாகவே பிரயுவிற்கு போன் செய்தான்..

“ஹலோ ப்ரயு “ என்ற ஆதியின் குரல் கேட்டவுடன்,

ப்ரத்யா அழ ஆரம்பித்து விட்டாள்.

“ஹலோ.. ப்ரயு ... ப்ளீஸ்.. அழாதடா.. “என்று அவளை சமாதனபடுத்த செய்த முயற்சி தோல்வியே ... பிறகு அவள் கொஞ்ச நேரம் அழட்டும் என்று விட்டு விட்டான்.

பத்து நிமிடங்கள் கழித்து ... சற்று அழுகை குறைய,

“ப்ரயு.. இப்போ எதுக்கு அழுத?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.