“ஏன் உங்களுக்கு தெரியாதா ?”
“எனக்கு என்ன தெரியும் “
“ஹ்ம்ம்.. பொய்.. அப்பாவும், அத்தையும் உங்ககிட்ட பேசாமலா இருந்திருப்பாங்க?’
“அவங்க பேசினது இருக்கட்டும். நீ ஏன் இவ்ளோ நேரம் என்கிட்ட பேசல? உனக்கு இவ்ளோ மனசு வருத்தப்படும்போது என்கிட்டே அப்போவே பேசியிருந்தா இத்தனை நேரம் சமாளிசிருப்பதானே ?”
“அப்போவே உங்ககிட்ட பேசியிருந்தா அழுதிருப்பேன்.. ஆனால் நல்ல நேரத்தில் அழக்கூடாதுன்னு தான் பேசலை..”
“உனக்கே தெரியுது.. அப்புறம் ஏன் இப்போ அழறே..?”
“ஹ்ம்ம்..யார்கிட்டயாவது என் கஷ்டத்தை ஷேர் பண்ணனும்னு தோணிச்சு.. அதான் உங்க கிட்ட அழுதுட்டேன்..”
“இப்போ அழற அளவுக்கு ஒன்னும் இல்லை புரியுதா... ? உங்க அப்பா உன் தங்கைகளின் கல்யாண தேதிய என்னோட schedule பார்த்து வைக்கறேன்னு சொல்லிட்டார்.. அதனால் அவங்க கல்யாணத்திற்கு ரெண்டு பேரும் போய் கலக்கிட்டு வரலாம் சரியா ?”
“ஹ்ம்ம்.. நீங்க எப்போ வர முடியும்? “
“நான் வந்து ஒரு வருஷம் ஆயிடுச்சுன்னா ... விசா ரெடி பண்ணி ... ஒரு பத்து .. பதினைந்து நாள் லீவ்லே வர முடியும்.. அந்த டைம் லே கல்யாணத்த பிளான் பண்ண சொல்லிருக்கேன்.. “
“ஓகே.. அவங்க டேட் முடிவு செய்தப்புறம் நீங்க லீவ் சொல்லிடுங்க.. வந்து ..உங்களுக்கு அப்பா மேலே கோபம் இல்லியே..? “
“ச்சே.. அதெல்லாம் இல்லைமா... அவர் என்ன பண்ணுவார் பாவம்...”
“அப்போ ..என் தங்கைகளின் வுட்பி மேல.. ? “
“ஹ்ம்ம்.. கோபம் இல்லை.. ஆனால் கொஞ்சம் வருத்தம் இருக்கு..”
“ப்ளீஸ் எனக்காக அதை பெரிசு படுத்தாதீங்க... எங்க அப்பாவிற்கு எல்லாமே நீங்க மூணு பேரும்தான்.. உங்களுக்குள்ள வருத்தம் இருந்தா அவர் யாரு பக்கம் பேசுறதுன்னு சங்கடபடுவார்..”
“ஏய்.. அதெல்லாம் ஒன்னும் இல்லைடா.. சொல்ல போனால் அருண், அரவிந்த் ரெண்டு பேரும் என்கிட்டே இன்னிக்கு பேசி வருத்தப்பட்டாங்க.. எந்த பிரச்சினையும் வராது.. okvaa..”
“தேங்க்ஸ் ஆதிப்பா “
“ஷப்பா.. இன்னிக்கு இவ்ளோ நேரம் கழிச்சு மேடம் இப்போதான் formக்கு வந்துருக்கீங்க.. சரி.. இப்போ அம்மா எங்கே இருக்காங்க.. அவங்க ரூம்லேயா? நம்ம ரூம்லேயா?”
“அவங்க ரூம் லே தான் “
“அப்போ உன்னோட வருத்தம் எல்லாம் போக stronga மருந்து தரவா ?” என்று கேட்டவன் .. சிறிது நேரம் அவளிடம் போனில் வம்பு பேசினான்..
அவனின் பேச்சை கேட்ட ப்ரயு முகம் சிவக்க, அவனிடம் பதில் பேசினாள்.
இருவரும் பேசி முடித்த பின் , அன்றைய பிரயுவின் மன நிலைக்கேற்ப சில மெலோடி பாடல்கள் அவளுக்கு அனுப்பி அவளின் தூக்கத்திற்கு வழி வகுத்தான் அவள் கணவன்..
ஆனால் ஆதியோ தன் தூக்கத்தை தொலைத்து நின்றான்.. அந்த அம்மா பேசியதை சொன்னபோது ஆதிக்கு பயங்கர கோபம் வந்தது.. தன் மனைவி பற்றி பேச அவர் யார் என்று எண்ணினான்.. மேலும் அவளின் புரிந்து கொள்ளுதல் பற்றி அவனுக்குதான் தெரியும்..
என்னதான் முதலிலே சொல்லி திருமணம் செய்திருந்தாலும், அவளிடத்தில் வேறு பெண் இருந்திருந்தால் இத்தனை நாளில் அவன் மனதை மாற்றி, ஒன்று அவனை வரவைதிருப்பாள்.. இல்லை அவனோடு அவள் வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்திருப்பாள்..
ஆனால் ப்ரயு ஒருமுறை கூட அந்த மாதிரி சொல்லாதது மட்டுமல்ல,, ஒரு சின்ன மன வருத்தத்தை கூட அவனிடம் காண்பித்ததில்லை.. அவனை தேடுவாளே தவிர , அவனை குறை கூற மாட்டாள்.. அப்படிப்பட்டவள் என்ன பேச்செல்லாம் கேட்க நேர்ந்தது என்று எண்ணி மிகவும் தவித்தான்.
ஆனால் அவன் மாமனார், அந்த மாப்பிள்ளைகள் எல்லோரும் பேசியவுடன் அவனுக்கு கொஞ்சம் கோபம் தணிந்தது.. பிரயுவின் அழுகை அவனுக்கு மிகவும் துன்பமாக இருந்தது.. அவளை கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினான்..
இத்தனை பிரச்சினைக்கும் காரணம் வித்யாவின் மாமியார் என்பதை யாருமே அவனிடம் சொல்லவில்லை,.
அவன் அந்த திருமணத்திற்கு செல்லும்போது முடிந்தவரை எல்லாவற்றையும் சரி செய்ய வேண்டும் என்று எண்ணினான்..
ஆதி எண்ணியது எதுவும் நடக்க போவதில்லை.. தான் திருமணத்திற்கு வருவதாக சொன்னது நடக்க போவதில்லை .. என்று தெரியாமல் திட்டம் போட்டான்.
தொடரும்
{kunena_discuss:948}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.