(Reading time: 16 - 31 minutes)

ருணதியோ, அவனின் தோள் மீது தான் தான் சாய்ந்தேனா?... என்ற கேள்வியோடு போராட, எப்படி முடிந்தது என்னால்?.... அவனை எனக்கே எனக்கென சொந்தமாக எண்ண எப்படி விழைந்தது என் மனம்?... அவன் வேறொருத்தியின் கணவன்… என் காதலன் அல்ல… அவன் எந்த காலத்திலும் இனி என் சொந்தமாக முடியாது… அப்படி இருக்க எப்படி கிருஷ்ணா இது முடிந்தது உன்னால்?... என தலையைப் பிடித்துக்கொண்டவளுக்கு, அப்போது உறைத்தது…

அவன் தன்னை கிருஷ்ணா என அழைத்ததும்தான் அனைத்தையும் மறந்து அவன் தோள் சாய்ந்தோம் என…

எதற்கடா என்னை அனுமதிக்கிறாய்?... என்னால் உன்னுடன் தான் வாழ கொடுத்து வைக்கவில்லையே… பிறகு ஏன் என்னை அனுமதித்தாய்?... என யோசித்தவளுக்கு,

அந்த நிலையிலும் அவனது விரல்கள் கூட தன்னை ஸ்பரிசிக்கவில்லை என்ற உண்மை புரிய, அவள் மனம் மேலும் வாடியது…

அன்று நீ மௌனம் காத்தது எனக்காக… இன்று மௌனம் காத்து தீண்டாமல் இருந்தது கன்யாவிற்காகவா?... என எண்ணும் போதே அடிமனதில் இல்லை என்ற குரல் கேட்க, அவள் ஓய்ந்து போனாள்…

அந்நேரம் அவளைப் பார்த்த மகத்திற்கு அவள் நிலைமை புரிய, எதற்கடா இன்னும் சோகம்?... உன் மனசுல இன்னும் என்ன தான் இருக்கு?... சொல்லிடேண்டா… உன்னை பிரிஞ்சிருந்தப்போ எல்லாமே பிடிக்காம தான் இருந்தது… கண்ட கனவு கூட கலைஞ்சது போல தான் இருந்தது… கடைசியில் எனக்கு நானே ஆறுதல் சொல்லிகிட்டேன்… என அவன் மனதை சொல்வது போல் அந்த தருணத்தில் அந்த பாட்டும் ஒலித்தது…

சொல்லிவிடு வெள்ளி நிலவேசொல்லுகின்ற செய்திகளையே…”

உறவுகள் கசந்ததம்மாகனவுகள் கலைந்ததம்மா

காதல் என்னும் தீபமே

கண்ணில் நானும் ஏற்றினேன்

காற்றில் காய்ந்து போன பின்

நானே என்னை தேற்றினேன்…”

ஏனடா உன்னை பிரிய நேரிட்டது?... எதுக்குடா விதி நம்மளைப் பிரிச்சது?... சொல்லுடா… இனி நாம சேர முடியாம போனதால உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லன்னு ஆகிடுமா?... இல்ல உன்னை தினம் தினமும் கனவுக்குள்ள பார்த்து கொண்டாடுறேனே… அது தான் கலைந்து போயிடுமா?...

சொல்லிவிடு வெள்ளி நிலவேசொல்லுகின்ற செய்திகளையே

உறவுகள் கசந்திடுமா?... கனவுகள் கலைந்திடுமா?...”

என பாட்டு ஒலித்துக்கொண்டிருக்கும்போது அவள் அவனை நினைத்து கண்மூடினாள்… அவள் மனதை தெரிவிப்பது போல் அந்த பாடலின் வரிகளும் தொடர்ந்தது…

உன்னை ஒரு போதும் உள்ளம் மறவாது நான் தான் வாழ்ந்தேன்

குற்றம் புரியாது துன்பக்கடல் மீது ஏன் நான் வீழ்ந்தேன்…. ….”

உள்ளத்தில் அவனை மறவாது வாழ்ந்து கொண்டிருக்கும் நிலை நிழலாடிக்கொண்டிருக்க, அவள் அவனிடம் கேள்வி கேட்டாள்… எதுக்குடா எனக்கு இந்த கஷ்டம்?... உன்னை வேறொருத்திக்கு சொந்தமாக என்னால் ஏனடா பார்க்க முடியவில்லை… அவளை எவ்வாறு நீ கைப்பிடித்தாய்?... அவள் உன்னை கொத்தாமல் கொத்தி தின்கிறாளே வார்த்தைகளால்…. ஏன்?...

அந்த கதை முடிந்த கதை….

எந்தன் மனம் மறந்த கதை

என்னுடைய விடுகதை போல் என்னுடைய பிறந்த கதை

காலங்கள் தான் போனபின்னும்

காயங்கள் ஆறவில்லை

வேதனை தீரவில்லை…”

அவள் மனதிற்கு சொல்வது போல் அடுத்த வரிகளும் தொடர்ந்தது… அவனும் அவளை பார்த்தான் அந்த வரிகளை உச்சரித்துக்கொண்டே…. சில நொடிகள் கழித்து தான் அவனுக்கே புரிந்தது அவளிடம் இதுநாள் வரை மனதினுள் வைத்திருந்த வார்த்தைகளை பாடலின் மூலம் சொல்லிவிட்டோமோ என்று…

சட்டென்று அடுத்த பாடலை அவன் மாற்ற முனைவதற்குள் அடுத்த வரிகளும் ஒலிக்க ஆரம்பித்திருந்தது… வேறு வழியின்றி அவனும் மனதினுள் அந்த வரிகளை சொல்லினான் அவளுக்கு கேட்கும்படி…

தொட்ட குறையாவும் விட்ட குறையாகும் வேண்டாம் பாடல்…”

உன்னை சந்திக்க மாட்டோமா என ஏங்கி தவித்திருக்கிறேன்… நீயும் வந்தாய் கண் முன்… ஒரு குழந்தைக்கு அன்னையாய்… இன்னொருவரின் மனைவி என்ற அடையாளத்தோடு… அந்த நொடியில் தானா நான் உன்னை சந்திக்க வேண்டும்?...

எந்தன் வழி வேறு உந்தன் வழி வேறு ஏன் தான் கூடல்?... .. …”

காத்திருந்தேன் ஒவ்வொரு நாளும் உன் வருகைக்காகவே அங்கே உனக்காக… உன்னை விட்டு மீண்டும் விலகி செல்லும் நிலை ஏற்பட்டால் மீண்டும் என் வேள்வி தவ வாழ்வை ஏற்க எண்ணியிருந்தேன்… நான் செய்த தவறை மன்னித்து என்னை நீ மறுபடியும் உன்னவளாக ஏற்க ஒருவேளை கடவுள் சித்தம் இருந்தால் இம்மண்ணில் வாழுவேன்… என்று எண்ணியிருந்தேன்…

உன்னுடைய வரவை எண்ணி

உள்ளவரை காத்திருப்பேன்

என்னை விட்டு விலகிச் சென்றால்

மறுபடி தீக்குளிப்பேன்

நான் விரும்பும் காதலனே

நீ என்னை ஏற்றுக்கொண்டால்

நான் பூமியில் வாழ்ந்திருப்பேன்…”

உனக்காகாவே காத்திருந்தேன்… உன்னைப் பார்க்கும் நொடிக்காகவே தவமிருந்தேன் அங்கே… பார்க்கவும் செய்தேன் உன்னை இன்னொருவளின் சொந்தமாக…

என்னால் தாங்க முடியவில்லை சகி… உன்னை இப்படி தாரைவார்க்கத்தானா நான் உன்னை நேசித்தேன் அறியாத வயதிலும் அறிந்த வயதிலும், கனவிலும், மூச்சிலும், நினைவிலும்???…

வலி தான்… வலிக்கிறது தான்… எனினும் உன்னைப் பார்த்துகொண்டே என் கனவு பூமியில் இனிதாக வாழ்ந்திடுவேன் உன்னுடன்…. இனியும்….. என்றவள் விழி மூடி அமர்ந்திருக்க, அவளது இமைகள் நீரை சிந்தின…

சில மணி நேரத்திற்குப் பிறகு,

அருள் இல்லத்திற்கு வந்த விஜய்யிடம்

“எனக்கு ஒரு சந்தேகம் கேட்கலாமா?...” என வந்தாள் பவித்ரா…

“ஹ்ம்ம்… கேளுங்களேன்… தெரிஞ்சா பதில் சொல்லுறேன்…” என அவனும் சொல்ல

“பிரபு அண்ணா அன்னைக்கு உங்களை அவரை மாதிரி சொந்தம் தான் எனக்குன்னு சொன்னார்… அது உண்மையா?...” என கேட்டதும்,

“அதிலென்ன உங்களுக்கு சந்தேகம்?...” என்றான் அவன்…

“இல்ல…. அவர் எனக்கு அண்ணன்… அது போல நீங்களும் எனக்கு அ……” என சொல்ல வந்தவளை சொல்லவிடாது அவள் வாய் மீது கை வைத்து தடுத்தவன்,

“ப்ளீஸ்…. அவனை கூப்பிடுற அதே உறவு முறையை என்னைப் பார்த்து சொல்லிடாத… உனக்கு நான் அப்படி கிடையாது… புரிஞ்சிக்கோ…” என்றதும், அவனிடமிருந்து பட்டென்று விலகியவள், பதற்றத்தோடு அங்கிருந்து ஓடிவிட்டாள்…

“ஹேய்… வித்ரா… நில்லு…. ப்ளீஸ்…” என்ற அவனது குரல் காற்றில் கலந்து கரைந்து போயிற்று என அவன் எண்ணிக்கொண்டிருந்த வேளை, அது மகத்தின் செவிகளை எட்டி அவன் அங்கே வந்தான்…

தொடரும்

Episode # 32

Episode # 34

{kunena_discuss:907}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.