(Reading time: 16 - 31 minutes)

ண்பர்களுடன் சேர்ந்து எங்காவது சென்றால், நள்ளிரவையும் தாண்டித்தான் வீட்டிற்கு வருவாள்… அவளின் தாமதமான வருகையை குருமூர்த்தி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை… ஏனெனில் மகளின் பேச்சு, உடை, எல்லாம் காலத்திற்கு தகுந்தாற்போல் இருந்தாலும், மகள் வழி தவறி செல்லமாட்டாள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவரிடம் இருந்தது…

நண்பர்களுடன் சேர்ந்துதானே வெளியே சென்று வருகிறாள்… சொல்லிவிட்டு செல்லும் மகளிடம், ஏனோ கோபம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என அவருக்கு தோன்றிவிட, அவரும் மகள் சந்தோஷம் மட்டுமே போதும் என்றிருந்துவிட்டார்…

காவேரிக்கு இந்த விஷயம் அவர் அங்கே அவளைப் பார்க்க வரும் நாட்களில் தெரிய வர, அவர் அவளை அழைத்து சத்தம் போட, அவள் அவரைக் கட்டிக்கொண்டு, கெஞ்சி கொஞ்சி சமாதானப்படுத்தினாள்…

நேரம் கழித்து திரும்பி வர பழகியிருந்த போதிலும், ஆண்களுடனான நட்பில் ஒரு எல்லைக்கோடு வைத்திருந்தாள்… அந்த எல்லைக்கோடும் ஒருவனிடத்தில் உடைய காத்திருந்தது…

அவளது நண்பனின் நண்பன் மூலம் அறிமுகம் ஆனவன் தான் இந்தர்… ஆம்… அவளின் இந்தர்…. அவள் அவனை அப்படித்தான் அழைப்பாள்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

சற்றே கொஞ்சம் பயந்த சுபாவமாய், பேசி பழகவே தயங்கியவனின் பயத்தை முழுதும் அகற்றிய பெருமை கன்யாவையேச் சேரும்…

அவனோ நடுத்தர வர்க்கம்… அப்போது தான் படித்து முடித்து, வேலை தேடிக்கொண்டிருந்தான்… அந்த சமயத்தில் அவளுடனான அறிமுகம் அவனுக்கு…

அவனுக்கோ அவள் ஓரே ஒரு பெண் தோழி… அவள் அவனின் அத்தனை தயக்கத்தையும் உடைத்து ஏறிய, அவள் வகுத்து வைத்திருந்த எல்லைக்கோடும் அவனிடத்தில் உடைய ஆரம்பித்திருந்தது அவளையும் அறியாமல்…

தொடக்கத்தில் நட்பாக, இயல்பாக ஆரம்பித்த அவளின் பழக்கம், நாளாக ஆக, அடுத்த கட்டத்திற்கு சென்றது… அவனுக்குமே அது அதிர்ச்சி தான்…

வினயா….. என அவன் அழைத்ததும் அவள் பாகாய் உருகி விடுவாள்… “சொல்லு இந்தர்………” என்ற குழைவிலேயே அவனையும் தன் பக்கம் இழுத்திடுவாள்…

அவன் மேல் உண்டான தனது நட்பு, வேறு பக்கம் செல்வதை உணர்ந்தவள், நேரே சென்று தெரியப்படுத்தியது காவேரியிடத்தில் தான்…

முதலில் மறுத்த காவேரி, பின் சரி… சீக்கிரம் குருவிடம் பேசுகிறேன்… என்றார்… அவளின் விருப்பத்தினை பெரிதாய் நினைத்து…

எப்படியும் அவள் தவறான ஒருவனை தேர்வு செய்திருக்க மாட்டாள் என்ற நம்பிக்கை அவரின் மனதில் இருந்தது…

காவேரி உடனேயே குருவிடமும் தெரியப்படுத்த, அவர் அதை அலட்சியம் செய்தார்… தன் மகளாவது தன் தகுதி, தராதரத்தை மறப்பதாவது என…

காவேரியிடம், சரி நான் பார்த்துக்கொள்கிறேன்… என ஒப்புக்கு சொல்லிவிட்டு அதை அப்படியே விட்டுவிட்டார்….

இந்நிலையில், அவள் அவனை தனது தந்தையிடம் அறிமுகப்படுத்த அழைத்து வர, அவனும் வந்தான்… பயந்து கொண்டே…

“டாடி… இவர் தான் இந்தர்… நான் கல்யாணம் பண்ணிக்கப்போறவர்…” என குருமூர்த்தியிடம் அவள் அறிமுகப்படுத்த, தூக்கிவாரிப்போட்டவராய் நிமிர்ந்தார் குருமூர்த்தி…

மகளிடம் எதுவும் வெளிப்படுத்தாது அமைதியாய் இருந்தவர், தக்க சமயத்தை எதிர்நோக்கி காத்திருந்த போது, டாடி நீங்க பேசிட்டிருங்க, நான் இப்போ வந்திடுறேன்… என தன் தோழி ஒருத்தியிடம் பேசிக்கொண்டே அவள் செல்ல, அவரின் பார்வை இப்போது எகத்தாளமாய் இந்தரின் மீது பதிந்தது…

ஏற்கனவே பயந்து போயிருந்தவன், அவர் கால் மீது கால் போட்டுக்கொண்டு, நக்கலாய் அவனைப் பார்த்த பார்வையில் அவன் நெளிந்தான்…

அவனை பற்றி அவனிடமே கேட்டு தெரிந்து கொண்டவர்,

“பொங்கல், புளியோதரை சாப்பிட்டு வளர்ந்த உனக்கு, என் பொண்ணு கேட்குதாடா?... அதும் இந்த குருமூர்த்தி பொண்ணா?... எவ்வளவு தைரியம் இருந்தா என் வீட்டு படி ஏறி எங்கிட்டேயே நீ பேச வந்துருப்ப?...” என மிரட்டும் தொனியில் கேட்க, அவன் நடுங்கினான்…

“இல்ல அங்கிள், நானும் வினயாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்… கல்யாணம் பண்ணிக்க ஆ…………..” என சொல்லி முடிக்க கூட இல்லை, அவனின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டார் குருமூர்த்தி…

தரையில் சுருண்டு விழுந்தவனிடம், “மரியாதையா இங்க இருந்து ஓடிப்போயிடு… இல்லை உன் குடும்பத்தையே காலி பண்ணிடுவேன்…” என அவர் எச்சரிக்க,

அவன் தனது பயத்தை வெளிக்காட்டாது, “இங்க பாருங்க அங்கிள், நாங்க மேஜர், நீங்க எங்களைப் பிரிக்க முடியாது… அதும் இல்லாம என் குடும்பத்தை இப்படி செய்வேன் அப்படி செய்வேன்னு எல்லாம் என்னை சும்மா பயமுறுத்தாதீங்க… நான் அதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன்… எனக்கு உங்க பொண்ணை பிடிச்சிருக்கு பொண்ணு கேட்குறேன்… அவளுக்கும் என்னைப் பிடிச்சிருக்கு… அதனால கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறோம் இரண்டு பேரும்… இன்னைக்கு வேணும்னா நான் சாதாரணமானவனா இருக்கலாம்… ஆனா கூடிய சீக்கிரமே என் சொந்த காலில் நான் நிற்பேன் பெரிய மனுஷனா இந்த சமூகத்துல… அந்த நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கு… அது மட்டும் இல்லாம, என்னையோ, என் குடும்பத்தையோ நீங்க எதும் செய்தீங்கன்னா, கண்டிப்பா உங்க பொண்ணு உங்களைதான் சந்தேகப்படுவா… அவளுக்கு உங்களை விட என்னை ரொம்ப பிடிக்கும்… அதனால உங்க மிரட்டல் எல்லாம் எங்கிட்ட வேண்டாம்….” என அவன் துணிந்து பேசிவிட,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.