(Reading time: 16 - 31 minutes)

காவேரி கொடுக்கும் மருந்தை தவிர, வேறெதையும் தொட்டுக்கூட பார்க்கவில்லை அவள்… ஒவ்வொரு மருந்தையும், பார்த்து பார்த்து குடித்தாள்… தண்ணீர் அருந்தினால் கூட பரிசோதித்து அருந்தினாள்…

கடைசியில் பெற்றே எடுத்தாள் குழந்தையை… யாருக்கும் தெரியாமல் அந்த குழந்தையை எடுத்து குருமூர்த்தி ஒரு கோவில் வாசலில் சென்று போட்டு விட, அந்நேரம் அந்த வழியாக வந்த சதாசிவம் அதை பார்த்துவிட்டு, அவர் சென்ற பின் அந்த குழந்தையை எடுத்து தன் வீட்டிற்கு கொண்டு போனார்…

கண் விழித்து பார்த்த போது, அவளின் அருகில் இறந்த குழந்தை ஒன்று இருக்க, அவள் அழுது புரண்டாள்…

காவேரி அவளைத் தேற்ற, குருமூர்த்தியும், அவளை சமாதானம் செய்ய, அவள் சாப்பிடாது, தூங்காது அழுது கரைந்தாள்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

புவனேஸ்வரியின் "நினைத்தாலே இனிக்கும்..." - கல்லூரி காதல் கதை...

படிக்க தவறாதீர்கள்...

இரண்டு நாட்களுக்குப் பிறகு, வெளியூர் சென்றிருந்த மகத் திரும்பி வர, மயங்கி கிடந்தவளை பரிசோதித்தவன், “ரொம்ப வீக்கா இருக்காங்க… இப்படியே விட்டா ரொம்ப கஷ்டம் ஆகிடும்…” என சொல்ல, குருமூர்த்தியோ சிந்தித்தார்…

அழுது கொண்டிருந்த காவேரியிடத்தில், “என் பொண்ணை இந்த நிலையில வைக்கத்தான் வளர்த்தீங்களா?... இப்படி திசைமாறி போய், இப்போ ஒரு குழந்தையை பெத்தெடுத்து, நிக்குறா என் பொண்ணு… இனி அவ வாழ்க்கை என்னாகும்?... யார் அவளை கல்யாணம் செய்துப்பா?...” என புலம்பியவர்,

“எல்லாம் என்னை சொல்லணும்… எல்லாம் தெரிஞ்சிருந்தும் உங்களை போய் வளர்க்க சொன்னேன் பாருங்க… என் புத்தியை எதை கொண்டு அடிச்சிக்கன்னு தெரியலை…” என கோபமாக பார்த்தவர்,

“கடைசியில, உங்களை மாதிரியே ஆக்கிட்டீங்கள்ள என் பொண்ணையும்…..” என சொல்லிவிட்டு சென்றதும், விதிர்த்துப்போன, காவேரியின் கண்களில் நீர் நிறைந்திருந்தது…

அந்த நேரம் மகத்தினைப் பார்த்து பேச வந்தார் சதாசிவம்…

“மதர்… ப்ளீஸ்…. அழாதீங்க…” என அவரின் கண்ணீரினை துடைத்த மகத்தின் கைகளைப் பிடித்துக்கொண்ட காவேரி,

“என்னை மன்னிச்சிடு ராஜா… என்னை மாதிரியே என் பேத்தியையும் நான் ஆக்கிட்டேன்னு சொல்லிட்டு போறான்… என்னால அதை ஏத்துக்கவே முடியலை… உங்கிட்ட பிச்சை கேட்குறேன்னு கூட நினைச்சிக்கோ… கன்யா கழுத்துல தாலி கட்டி அவளை உன் மனைவியா ஏத்துக்கோ ராஜா…” என கெஞ்ச, முடியவே முடியாதென்று மறுத்தான் மகத்…

எவ்வளவோ காவேரி போராடியும், அவன் மறுத்துவிட, “இந்த தாலியை அவ கழுத்துல கட்டு  ராஜா… ப்ளீஸ்…” என அவர் மன்றாட, அவன் சிலையென்ற நின்றான்…

கடைசியில், ஒரு முடிவுடன், பூஜையறைக்கு சென்று, அம்மனின் பாதங்களுக்கு கீழ் இருந்த அந்த மஞ்சள் கயிறை எடுத்து வந்து, ஒரு முடிவுடன் கன்யாவின் கழுத்தினில் அதை கட்டியவர், மகத்தினைப் பார்த்து,

“அவளுக்கு நீ தாலி கட்ட வேணாம்… ஆனா, இந்த ஊரில் அவ உன் மனைவி என்ற உரிமையை மட்டும் அவளுக்கு கொடு ராஜா… உன்னை வளர்த்ததுக்கு தட்சணையா கேட்குறேன்…” என அவனைப் பார்த்து அவர் கும்பிட, சட்டென அவரின் கைகளைப் பிடித்துக்கொண்டவன், “என்ன மதர் இது….” என கேட்க,

‘ப்ளீஸ் ராஜா….” என்றபடி அவர் சரிய, அவரை தாங்கிக்கொண்டபோது, குருமூர்த்தி வர, மகளின் கழுத்தில் இருந்த தாலியை பார்த்து அதிர்ச்சியாகி, மகத்தினைப் பார்க்க, மகத் சொல்ல வாயெடுக்கும் முன்னர்,

“நான் தான் இந்த தாலி எடுத்து கொடுத்து ராஜாவை கட்ட சொன்னேன்… அவனும் என் பேச்சுக்கு மரியாதை கொடுத்து கட்டிட்டான்…” என பட்டென்று குருமூர்த்தியிடம் காவேரி பொய் சொல்ல, அவரும் அதனை நம்பிவிட்டார்…

எந்த நடுத்தர வர்க்கம் அவருக்கு மாப்பிள்ளை ஆக அனுமதி தராது இந்தரை அவர் விரட்டி அடித்தாரோ, அதே நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒருவன், அதுவும், ஊர் பேர் தெரியாத அநாதையின் கைகளினால் தன் செல்ல மகளின் கழுத்தில் தாலி ஏறிய நிகழ்வை நினைத்து நினைத்து அவர் மனம் நோக,

கன்யா கண்விழித்தாள்… “இனி இவன் தான் உன் கணவன்….” என காவேரி அவளிடம் மகத்தினை கைகாட்ட, வெடித்தாள் அவள்….

“யாரைக்கேட்டு இவன் என் கழுத்தில் தாலி கட்டினான் என…” என குதித்தாள்… காளி அவதாரமெடுத்தாள்…

“குடும்ப கௌரவத்தை நாசம் செஞ்சிட்ட… அதை நான் இன்னைக்கு சரி செய்திருக்கேன்… இனியாச்சும் ஒழுங்கா வாழப்பாரு….” என சொல்லிவிட்டு காவேரி அங்கிருந்து சென்றுவிட, அவள் அழுதாள்…

மகத்தும் எதுவும் பேசாமல் சென்றுவிட, அவனின் பின்னேயே சதாசிவமும் சென்றுவிட்டார்…

அழுது ஓய்ந்திருந்த மகளைப் பார்க்க முடியாது திணறிய குருமூர்த்தி, அந்நேரத்தில் காவேரியைப் பற்றி தவறான அபிப்பிராயங்களை அவளின் மனதில் விதைத்தார்…

“அந்த காவேரியினால் தான் உனக்கு ஒரு அநாதை தாலி கட்டினான்… கேவலம் என்னிடம் மாச சம்பளம் வாங்குகிற அவன் என் மாப்பிள்ளையா?... என் பொண்ணுக்கு அவன் புருஷனா?.. என்னால ஏத்துக்கவே முடியலைம்மா….” என அவர் தூபம் போட, அவளுக்குள் மகத் மேல் கோபம் உண்டானது… அந்த கோபத்தை அவர் ஊதிக்கிளற, அது ஆத்திரமாக தீராத பகையாக மாறியது அவளுக்குள்….

தொடரும்

Episode # 34

Episode # 36

{kunena_discuss:907}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.