(Reading time: 16 - 31 minutes)

வனை ஏற இறங்கப் பார்த்தவர், சிறிது நேரத்திற்குப் பிறகு, “கண்டிப்பா, உன்னை எதாவது செஞ்சா, அவ என்னை சந்தேகப்படுவா தான்… ஆனா அவளை எதாவது செஞ்சா?????????????....” என அவர் சிரித்துக்கொண்டே கேட்க,

“அங்கிள்………………” என்று அலறினான் அவன்….

“என்னடா அங்கிள்… அவ நான் பெத்த பொண்ணு… அவ ஆசப்பட்டாங்கிற காரணத்திற்காக சாக்கடையை அள்ளி அவ கையில கொடுக்க முடியுமா?... அதுக்கு அவளை நானே கொன்னு புதைக்கிறது எவ்வளவோ உத்தமம்… உனக்கு அவளை கல்யாணம் பண்ணிக்கொடுக்குறதுக்கு அவளுக்கு என் கையாலயே சாப்பாட்டுல விஷம் வைச்சு கொன்னுடுவேன் நான்…” என்று உறுமினார் அவர்…

அவளது உயிர்… அவன் வினயாவின் உயிர்…. என்றதுமே, அவனுக்கு சர்வமும் பதறியது… தன் குடும்பத்தையே அழித்துவிடுவேன் என்ற போதும், பதறாத அவன் மனம், தன்னை கொன்று விடுவேன் என்ற போதும் பதறாத அவன் மனம், அவளை மண்ணோடு மண்ணாய் சாய்த்துவிடுவேன் என்று சொன்னதும், துடித்தான் அவன்…

அவள் சாவதா?... அதும் அவனால்… என்ற எண்ணம் வர, அவரின் கால்களைப் பிடித்துக்கொண்டான்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

அன்னா ஸ்வீட்டியின் "மனம் கொய்தாய் மனோஹரி" - When U Marry a stranger...

படிக்க தவறாதீர்கள்...

“ப்ளீஸ்… அங்கிள்… வினயாவை எதும் செய்துடாதீங்க… அவளை எனக்கு கொடுத்திடுங்க அங்கிள்… நாங்க எங்கயாவது போய் வாழ்ந்துக்குறோம்… ப்ளீஸ்… அங்கிள்…” என அவன் கெஞ்ச, அவர் அவனை உதைத்து தள்ளினார்…

அவனின் பயந்த சுபாவம், அவருக்கு தோதாய் அமைய, அவர் அதனை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முனைந்தார்…

“ஓ… உனக்கு அவ மேல பாசம் எல்லாம் இருக்கா?... சரி… அவளை எதும் நான் செய்யலை… ஆனா நீ ஒன்னு செய்யணும்….” என அவர் அவனைப் பார்க்க,

“சொல்லுங்க அங்கிள்… என்ன செய்யணும்… என்ன வேணும்னாலும் செய்யுறேன் அங்கிள்… சொல்லுங்க….” என அவனும் தன்னவளின் உயிர் காப்பாற்றப்பட வழி கிடைக்கிறதென்ற சந்தோசத்தில் கேட்க,

“நீ அவ கண்ணுலேயே படக்கூடாது என்னைக்கும்…” என்றார் அவரும் பட்டென்று…

சட்டென அனைத்தும் ஒரு நொடியில் ஸ்தம்பித்து போனது போல் அவன் உணர, அவரிடம் கெஞ்சி மன்றாடினான்… ஹ்ம்ம் ஹூம்… அவர் சற்றும் அசைந்து கொடுத்தாரில்லை…

கடைசியில், தன் கௌரவத்தை காப்பாற்றிக்கொள்ள, பெற்ற பிள்ளையையே கொலை செய்ய துணியும் தந்தையில் இவரும் அடக்கம் என்ற எண்ணம் அவனுக்கு உரைக்க, மனதே இல்லாமல் சரி என்றான் அவரிடத்தில்…

“என்னிடம் விலகிவிடுகிறேன் என சொல்லிவிட்டு, அவள் முன் வந்து நீ நின்றாயோ, அதோடு அவள் உயிர் அவளிடமிருந்து பிரிந்து விடும்…” என அவர் எச்சரிக்க, அவனும் வரமாட்டேன்… அவளை எதும் செய்துவிடாதீர்கள் என்ற வேண்டுகோலோடு அவள் சென்ற திசையையே பார்த்துக்கொண்டு சென்றுவிட்டான் அங்கிருந்து….

அவன் சென்றதும், வந்தவளிடம், “அவன் உன்னை விரும்பவே இல்லையாம்… நீ வற்புறுத்தியதற்காகத்தான் என்னிடம் பேச வந்தானாம்… அவனது தயக்கம், கூச்சத்தை போக்கிய காரணத்திற்காக உனக்கு அவனது வாழ்க்கையில் இடம் கொடுக்க முடியாதாம்… அது மட்டும் இல்லாமல், அவனின் குடும்பத்திற்கு உன் போன்ற பெண் மருமகளாய் வர, அவன் விரும்பவில்லையாம்….” என்று கூற, கோபத்துடன் அவனைத் தேடிச் சென்றாள் அவள்…

ஆனால் அவன் அவள் கண்ணிலேயே படவில்லை… அவளது நண்பர்கள் மூலம் அவனைத் தேடினாள்… யாரிடத்திலும் அவனைப் பற்றிய தகவல் இல்லவே இல்லை…

என்ன செய்ய…. என்று தலையைப் பிய்த்துக்கொண்டவளுக்கு, ஆத்திரமும், கோபமும் வர, வீட்டில் உள்ளதை தூக்கி போட்டு உடைத்தெறிந்தாள் அவள் கண்டபடி…

காவேரி அவளை சமாதானப்படுத்த, அவள் கேட்டாள் இல்லை…

குருமூர்த்தியோ அவள் உடைத்து வைத்த பொருட்களை மறுநாளே வாங்கி அதே இடத்தில் வைக்க, அவள் மீண்டும் அதனை உடைத்தெறிந்தாள்…

இப்படியே மூன்று மாதங்கள் கழிய, கோபமும், வெறியுமாக இருந்தவள் ஒருநாள் திடீரென்று மயங்கி சரிந்தாள்…

தனது மருத்துவமனையில் அவளை அவர் அனுமதிக்க, அவளை பரிசோதித்து பார்த்த மகத், அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என சொல்ல, சுக்கு நூறாய் சிதறி போனார் குருமூர்த்தி…

காவேரியோ, தான் வளர்த்தவள், தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாளே என்ற ஆத்திரத்தில், அவளை வசைபாட தொடங்கினார்… குடும்ப கௌரவத்தை குழி தோண்டி புதைத்து விட்டாளே என்ற கோபத்தில் அவர் அவளை விலக,

அப்போதும் அவள் காவேரியிடத்தில், கோபம் கொள்ளவில்லை… அவரின் பாசத்திற்காகத்தான் ஏங்கினாள்…

“என் இந்தர் வாரிசு பாட்டி… என் இந்தரோட நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் பாட்டி…” என்று பிதற்றியவளை பாவமாக பார்த்தார் காவேரி….

அதை கலைக்க எவ்வளவோ பாடுபட்டார் குருமூர்த்தி… மறுத்தே விட்டாள் கன்யா… என் இந்தர் உயிர்…. அதை நான் கலைக்க மாட்டேன்… என அவள் பொத்தி பொத்தி தன் கர்ப்பத்தை பாதுகாக்க, அவர் மகத்திடம் கெஞ்சினார்… அவருக்கு உதவி செய்ய… அவன் திட்டவட்டமாக மறுக்கவே, வேறு சில டாக்டர்களின் உதவியை நாடினார்… அவர்களும் மருந்து மாத்திரைகளை கொடுத்து உதவ, அதை உண்ண மறுத்தாள் கன்யா…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.