(Reading time: 11 - 21 minutes)

14. கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - தங்கமணி சுவாமினாதன் 

Koncham periya kuzhanthaigalukkana kathai ithu

**பாண்டிய நாட்டில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் இந்நிகழ்வுகள் உண்மையில் நிகழ்ந்தவை அல்ல.கதைக்காகவே புனையப்பட்ட கற்பனை நிகழ்வுகள்.வரலாறு அறிந்தவர்கள் மன்னிக்கவும் நன்றி..

சிங்கபுரி.ராஜா வரகுண பாண்டியனுக்குப் பிறகு பட்டத்திற்கு வந்த அதிவீர பாண்டியனுக்கு இளம் வயதே ஆனாலும் மிகத்திறமையாய் ஆட்சி செய்தார்.அவரின் அரசாங்கத்தில் அவரின் மந்திரிப் பிரதானிகளும், சேனாதிபதியும் ,ராஜ குருவும்,மற்றவர்களும் அவரின் நல்லாட்சிக்கு மிகவும் உறு துணையாய் இருந்தார்கள்.அதனாலேயே அவரால் நல்லாட்சி கொடுக்க முடிந்தது என்று கூடச் சொல்லாம்.விவசாயமும், வியாபாரமும் செழித்திருந்தன.

கோயில்கள் நிறைந்திருந்த பாண்டிய நாட்டில் தானமும், தர்மமும், பக்தியும், கல்வியும், அறமும், நலமும், மருத்துவமும்,கப்பல் மூலம் முத்து ஏற்றுமதியும் பல்கிப் பெருகியிருந்தன.எங்கு பார்த்தாலும் வளமையும், செழிப்பும் கோலோச்சிக் கொண்டிருக்க அண்டை நாடுகளாகிய சேர, சோழர்களுடனும் நல்லுறவே மேம்பட்டிருந்தது.அதிவீர பாண்டியன் காலத்தில் ஆட்சியிலிருந்த சமகாலத்து சேர,சோழ மன்னர்களுக்கும் பாண்டியனைப் போலவே நாடு பிடிக்கும் ஆசையெல்லாம் இல்லாமலிருந்தது.அதன் காரணமாகவே இம் மூன்று நாட்டு மக்களும் தங்களுக்குள் திருமணத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு நாடுகளுக்கிடையே உறவை மேம்படுத்தினர்.

ஏன் இம்மூன்று நாட்டு ராஜ குடும்பத்தினரிடையே கூட திருமண உறவு ஏற்படுத்திக் கொண்டார்கள்.பாண்டிய மன்னர்களால் தமிழும் வளர்ந்தது தமிழனின் பெருமையும் வட இந்தியாவிலும் கூட பரவியது.நாகரீகம் பண்பாடு விருந்தோம்பல் அறிவாற்றல் ஆன்மிகம் வீரம் அனைத்திலும் தமிழன் பிற தேசங்களால் அறியப்பட்டான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

கடல் கடந்து சென்று வணிகம் செய்யும் திறனை தமிழனிடம்தான் கற்க வேண்டும் என யுவான்சுவாங், பாகியான்,மெகஸ்தனிஸ் போன்றவர்கள் எந்த காலகட்டத்தில் சொல்லியிருந்தாலும் அது தமிழனின் வாழ்க்கையில் எல்லா காலத்திற்கும் பொருந்தும்.அப்படியொரு சிறப்புடன் கடல் வணிகம் அதிவீர பாண்டியன் காலத்தில் .நிகரற்று விளங்கியது.தலை நகர் கொற்கை ஒரு துறைமுகப் பட்டினம்.முத்துக்குளித்தல் சிறப்பாக நடந்த அங்கிருந்து கப்பல் மூலம் முத்துக்கள் யானை,தங்க நகைகள் ஏற்றுமதி உலகின் பெரும் பாகங்களுக்கு குறிப்பாக ரோமாபுரிக்கு பெருமளவில் கொண்டு செல்லப் பட்டது.

சேர சோழ பாண்டியர்களின் அரசு பற்றி அசோகர் கால கல்வெட்டுக்களும் அசோகர் நிர்மாணித்த இரும்புத் ஸ்தூபிகளும் சொல்கின்றன.சிங்கதிற்கு ஒப்பான வீரத்துடனும் மாரிக்கு ஒப்பான தயையுடனும் மக்கள் அனைவரையும் தாயின் பாசத்துடனும் காத்து பார் போற்றும் அரசனாக ஆட்சி செய்து வந்த பாண்டியனுக்கு அவன் கேட்காமலேயே சிற்றரசர்கள் பலர் கப்பம் கட்டி வந்தனர்.அரசு கஜானா வருடம் முழுதும் அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் போல் நிரம்பி வழிந்தது.கோயில்கள் கட்டவும் குளங்கள் பல வெட்டவும் ஆதூரசாலைகள் அமைக்கவும் கல்வி சாலைகள் தொடங்கவும் அவன் காலத்தில் பெரும் பொருட் செலவு செய்யப்பட்டது. இல்லையென்பொர் இல்லாமல் இருந்தனர்.இப்படிப் பாண்டிய நாட்டின் பெருமைகளையும் வளங்களையும் அதிவீர பாண்டியனின் ஆட்சியையும் பற்றிப் பெருமையாய் சொல்லிக்கொண்டு வந்த பெரிய மன்னர் ஒரு வழியாய் பாண்டிய நாடு சந்தித்த அவலங்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

சிங்கபுரி அரண்மனை.முக்கியமான விஷயமொன்றை மந்திரிப் பிரதானிகள் சேனாதிபதி ராஜ குரு மற்றும் சில முக்கியஸ்தர்களோடு விவாதித்து விட்டு நிறைமாதக் கர்பிணியான மகாராணி ருக்மா தேவியை சந்திப்பதற்காக அந்தப்புரம் சென்றார் மன்னர் அதிவீர பண்டியன்.

உள்ளே ருக்மாதேவிக்குத் துணையாக இருந்த இரு பணிப் பெண்களும் மன்னர் உள்ளே நுழைவதைக்கண்டு மகா ராணியிடம் விடை பெற்றுக்கொண்டு மன்னரை வணங்கி விட்டு அவ்விடம் விட்டு வெளியேறினர்.

மன்னரைக் கண்டதும் எழுந்திருக்க முயன்றார் ராணி.

ருக்மா..அமருங்கள்...நான்தானே வருகிறேன்..எழுந்திருக்க வேண்டுமா என்ன..?

அப்படி இல்லை அன்பரே..

பின்? நான் இந்த நாட்டுக்கு மன்னனாக இருக்கலாம்..உங்களுக்கு அன்புக் கணவர்தானே?

சிரித்தார் ராணி ருக்மா தேவி..

ராணி..காலையில் கொஞ்சம் சோர்வாக இருப்பதாகச் சொன்னீர்களே?இப்போது எப்படி இருக்கிறது?மிக அக்கரையோடும் வாஞ்சையோடும் கேட்கும் மன்னரை மகிழ்ச்சியோடு பார்த்தார் ராணி ருக்மா தேவி.

இருக்காதா என்ன அக்கறையும் வாஞ்சையும்?பத்து வருடங்களுக்குப் பிறகல்லவா உண்டாகியிருக்கிறார்

ராணி.தவமாய்த் தவமிருந்து கிடைக்கப் போகும் வாரிசையல்லவா ராணி வயிற்றில் சுமக்கிறார்.சாதாரணக் குடிமகனே குழந்தைக்காக ஏங்கும் போது ..நாட்டை ஆளும் மன்னன் தனக்குப் பிறகு நாடாள ஒரு வாரிசுக்காக ஏங்குவது இயற்கைதானே.அப்படித்தான் ஏங்கினார்கள் அதிவீர பாண்டியனும் ருக்மாதேவியும் பத்து ஆண்டுகளாக.மீனாட்சி சுந்தரேஸ்வரரை வேண்டி வேண்டி உருகினார்கள் இருவரும்.மன்னருக்கு நெருக்கமானவர்கள் அவரை குழந்தைக்காக வேறு திருமணம் செய்து கொள்ள வேண்டி வற்புறுத்தினார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.