(Reading time: 11 - 21 minutes)

ராஜ குடும்பங்களில் மன்னர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிமார்கள் இருப்பது சர்வ சாதாரணம் என்றாலும் அதிவீரன் அதனை ஏற்கவில்லை.தனக்கு ருக்மாதேவி மூலம் கட்டாயம் வாரிசு உண்டாகும் என நம்பினார்.அந்த நம்பிக்கை வீண்போகவில்லை.பத்து வருடங்களுக்குப் பிறகு உண்டானார் ருக்மாஇருவரின்  மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை.ஏன் நாடே மகழ்ச்கிக்கடலில் திளைத்தது இவ் விஷயம் அறிந்து.அடுத்து ஒவ்வொரு நாளும் இவர்கள் இருவர் மட்டுமன்றி நாடும் குழந்தையின் வருகைக்காகக் காத்திருந்தது.

ருக்மாவைக் கண்ணின் இமைபோலக் கவனித்தார் பாண்டிய மன்னர்.ஏராளமானக் கற்பனையோடு இருவரும் கனவில் மிதந்தனர்.குழந்தை பிறக்கும் நாளை எதிபார்த்துக் காத்திருந்தனர்.பாண்டிய நாடே காத்திருந்தது.அந்த நாளும் வந்தது.

அன்று காலையிலிருந்தே ராணி ருக்மாதேவிக்கு உடல் நிலை சரியில்லை.அவ்வப் பொழுது அடிவயிற்றில் வலி.அரண்மணை பெண் மருத்துவச்சி வரவழைக்கப்பட்டார்.அவரும் இவ்வலி பிரசவ வலிதான் எப்படியும் இன்று குழந்தை பிறப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் சொல்ல அதிவீரன் ம்னைவி ருக்மாதேவிக்கு தைரியம் சொல்லிவிட்டு ராணி இருந்த அறையைவிட்டு வெளியேறினான். அவ்வறையின் வாசலில் கவலையோடும் அடிக்கடி மீனாட்சீ... சுந்தரேஸ்வரா என்று சொல்லிக்கொண்டும் அமர்ந்திருந்த மன்னர் அதிவீரனுக்கு எதிரில் அரண்மனை ஜோதிடர்கள் இருவர் குழந்தை பிறந்ததும் பிறந்த நேரத்தைக் கொண்டு அக்குழந்தையின் ஜாதகத்தைக் கணித்து அதன் எதிர்காலம் அக்குழந்தையின் பிறப்பால் பாண்டிய நாட்டுக்கு ஏற்படப் போகும் விளைவுகள் அனைத்தையும் துல்லியமாகக் கணிக்கவேண்டி அமர்ந்திருந்தார்கள்.சோழி குலுக்கிப் போட்டுப்பார்த்து அது சொல்லும் பிறந்த பலன் சொல்ல ஒருவரும் தரையில் கட்டம் போட்டு காய்னகர்த்தி பலன் பார்க்க ஒருவரும் அமர்ந்திருக்க... நேரத்தைக் காட்ட மணற்கடிகை ஒன்றும்  அங்கே வைக்கப்பட்டிருந்தது.ஆதவன் நிற்கும் இடம் வைத்து நேரம் சொல்லும் திறமை கொண்ட ஒருவரும் வானில் ஆதவன் நகரும் நகர்வினைக் கவனித்த படி இருந்தார்.இவ்வாறு பிறக்கப் போகும் புதிய வரவிற்காகக் காத்திருந்தனர் அனைவரும்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - உதய் - 26, நந்திதா - 28... சிறகடித்து பறக்குமா இவர்களின் காதல் எனும் பட்டாம்பூச்சி εїз...!

படிக்க தவறாதீர்கள்...

இருப்புக்கொள்ளாமல் தவித்த அதிவீரன் அறையின் வெளியே இங்கும் அங்கும் நடந்து கொண்டிருக்க உள்ளேயிருந்து பணிப்பெண் ஒருத்தி அவசர அவசரமாய் ஓடிவந்து....

மன்னர் அவர்களுக்கு வணக்கம்... குழந்தையின் சிரசு வெளியில் வருகிறது எனச் சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே ஓடினாள்.

அதைக்கேட்ட ஜோதிடர்கள் மணற்கடிகை காட்டும் நேரத்தைப் பார்த்து அதுவே குழந்தை ஜனித்த காலமாக் கொண்டு ஜாதகம் கணிக்கத் தொடங்க ஆதவனைப்பார்த்துக்கொண்டிருந்தவர் அது வானில் சஞ்சரிக்கும் நேரம் கொண்டு குழந்தையின் பிறந்த நேரம் சொல்ல அதுவும் மணற்கடிகை காட்டிய நேரமும் ஒன்றாகவே இருக்க சோழி உருட்டி பலன் பார்ப்பவரும் காய் நகர்த்திப் பலன் சொல்பவரும் தத்தம் பணியைத் தொடங்கினர்.

சில நிமிடங்கள் கடந்து போக வாயெல்லாம் பல்லாக அறைக்குள்ளிருந்து மெல்லிய பட்டுத்துணியில்  குழந்தையை ஏந்தி வெளியே வந்தார் மருத்துவச்சி.

மன்னா..வணங்குகிறேன் மன்னா..நின் புகழ் ஓங்குக..நின் கொற்றம் உயர்க..நின் அரச வமிசம் வாழ்வாங்கு வாழ்க..உங்களுக்கு பூரண நிவையொத்தது போல் பெண்குழந்தை பிறந்திருக்கிறது.நீங்கள் தந்தையாகிவிட்டீர் மன்னர் அவர்களே.சிங்கபுரிக்கு இப்பாண்டிய நாட்டுக்கு இளவரசி பிறந்திருக்கிறார்...

என்றபடியே குழந்தையை மன்னரிடம் நீட்ட தாங்கமுடியாத பூரிப்போடும் மகிழ்ச்சியோடும் மிகுந்த ஆவலோடும் குழந்தையைப் பார்த்தார் மன்னர் அதிவீரன்.ஆஹா..ஆஹா..என் மகள்தான் எத்தனை அழகு..பூரண நிலவு போல்லல்லவா இருக்கிறாள்..? என் செல்வமே..என் உயிரே..தந்தையைப் பாரடி என் கண்ணே..என்னை தந்தையாக்கி என்னை தலை நிமிரச் செய்தவளே..என்னதான் ஒருவன் வீர தீர சூரனாய் இருந்தாலும் பார்போற்றும் புகழ் மிக்கவனாய் இருந்தாலும்..ஒரு நாட்டுக்கு மன்னனே ஆனாலும் அவன் ஒரு குழந்தையை பெறுவதன் மூலம்தான் அவன் ஆண்மை நிரூபிக்கப் படுகிறது..நீ என்னைத் தந்தையாக்கி விட்டாயடி என் செல்லமே என்று வாய்விட்டுப் பலவாறு சொன்னபடி குழந்தையின் தலையை ஆசீர்வாதம் செய்வது போல் தொட்டபின் .அதன் பிஞ்சுக்கைகளையும் பிஞ்சுக் கால்களையும் தொட்டுத் தொட்டுப் பார்த்தார்.அவரது நெஞ்சம் உருகி கண்கள் ஆனந்தக் கண்ணீரால் நிரம்பின.அந்தக் குட்டி இளவரசி தன் தந்தையாகிய அதிவீர பாண்டியனின் உள்ளத்தில் நுழைந்து உயிரில் கலந்தாள்.

இப்படி மன்னர் தன் குழந்தையைக்கண்டு மெய் மறந்த வேளையில் குழந்தையின்.. இளவரசியின் ஜாதகத்தைக் கணித்துக்கொண்டிருந்த ஜோதிடர்கள் ஜாதகக் கட்டங்களில் கிரகங்கள் அமர்ந்திருக்கும் நிலைகளை பார்த்து முதலில் மருண்டனர்.ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.மேற்கொண்டு கிரங்களின் அமைப்பினால் ஜாதகத்திற்கு ஏற்படப்போகும் பலா பலன்களை அதன் பலனாய் நாட்டிற்கு ஏற்படப்போகும் விளைவுகளை அறிந்த போது அப்படியே இடிந்து போயினர்.அவர்களின் உடல் நடுங்கியது.

இவற்றை  மன்னரிடம் எப்படி எடுத்துச் சொல்வது யார் சொல்லுவது என்று எண்ணியபோது  பயமமும் பீதியும் கவலையும் அவர்களை ஆட்கொண்டது.ஒருவரை ஒருவர் பார்த்துக் கண்களாலேயே பேசிக்கொண்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.