(Reading time: 13 - 25 minutes)

14. அன்பே உந்தன் சஞ்சாரமே - தேவி

Anbe Undhan Sanjaarame

ன் தங்கைகளின் திருமணமும், வித்யாவின் டெலிவரியும்  நல்ல படியாக முடிந்தது பிரயுவிற்கு மிகபெரிய releif என்றுதான் சொல்ல வேண்டும்.. இவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் மெல்ல வடிய ஆரம்பிக்க, அவள் தலை சுற்ற ஆரம்பித்தது.

எல்லோரும் திருமணத்திற்கு பிறகான சடங்குகளில் நின்றிருக்க, ப்ரயு மெதுவாக வெளியே வந்திருந்தாள். பிரியா மட்டும் அவளை கவனித்திருக்க , அவளை நோக்கி வேகமாக போனாள்.

நல்லவேளை .. மணமகள் அறை அருகே ப்ரயு விழ ஆரம்பிக்கவும், பிரியா வேகமாக வந்து அவளை உள்ளே அழைத்து சென்று விட்டாள்.

யாரின் கவனமும் கலையாத வகையில் அவளை அறையில் படுக்க வைத்து விட்டு, முகத்தில் தண்ணீர் தெளித்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

அன்னா ஸ்வீட்டியின் "மனம் கொய்தாய் மனோஹரி" - When U Marry a stranger...

படிக்க தவறாதீர்கள்...

அங்கே முகூர்த்தம் முடிந்து எல்லோருக்கும் ஜூஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதை வாங்கி முதலில் பிரயுவிற்கு கொடுத்தாள்.

அதை குடித்த பின் சற்று நேரம் அமைதியாக இருந்த பிரயுவை முறைத்தபடி பிரியா நின்றிருந்தாள்.

“ப்ரத்யா .. என்னடி ஆச்சு? சாப்பிட்டாயா இல்லயா?”

பிரயுவிற்கு அப்போதுதான் நினைவு வந்தது வித்யாவை hospital சேர்த்த அன்று இரவு சாப்பிட்டது.. பிறகு நேற்று இரண்டு வேளை காபி தான் குடித்தாள். குழந்தை பிறக்கும் வரை அவளுக்கும் வேறு நினைவு இல்லை.. பிறகு கான்டீன் போய் பார்த்த போது சாப்பாடு முடிந்து இருந்தது. அதனால் அவளுக்கும், அவள் மாமியாருக்கும் சப்பாத்தியாக வாங்கி வந்திருந்தாள்.

அதையும் வித்யா மாமியார் காரில் வந்த அலுப்பும், பசியும் சேர அவர் கேட்டு வாங்கி சாப்பிட்டு விட்டார்.

இரவு அவள் மாமியாருக்கு வாங்கி கொடுத்தவள், கல்யாணம் பற்றிய எண்ணமும், ஆதியின் நிலைமையும் சேர அவளுக்கு பசியும் தெரியவில்லை.. தூக்கமும் வரவில்லை.

காலையில் திருமணத்திற்கு வரும் அவசரத்தில் ஒன்றும் சாப்பிடவில்லை.. இப்போ பிரியா கேட்டதும் தான் நினைவு வந்தது.

அவள் முகத்தை பார்த்த பிரியா, இவள் கண்டிப்பாக சாப்பிட்டிருக்க மாட்டாள் என்று எண்ணி அவளை நேராக dining ஹால் க்கு அழைத்து சென்றாள்.

அப்போதும் ப்ரயு  “ப்ரியா எல்லோரும் வரட்டும் டா... இன்னும் மாப்பிள்ளை வீட்டில் யாரும் சாப்பிட வரவில்லை போல் இருக்கிறது.. எதாவது நினைச்சுக்க போறாங்க..”

“கொஞ்சம் அடங்கரியா.. அந்த கும்பல் எல்லாம் காலையிலேயே tiffen வெட்டிட்டாங்க.. நீ தான் சோமாலியா லே பஞ்சத்துலே அடிபட்ட மாதிரி இருக்க.. ஆமாம்.. நீ எப்போ சாப்பிட்ட..?”

சொன்னால் திட்டுவாள் என்று நினைத்த ப்ரயு “அத விடு... “ என்று சாப்பிட அமர்ந்தவள் , அப்போதும் தன் மாமியாரை அழைத்து hosipital நிலவரம் கேட்டாள். பின் அப்படியே ஆதிக்கு முயற்சி செய்ய... அதிர்ஷ்டவசமாக லைன் கிடைத்தது..

அவன் எடுத்ததும்

“ஆதிப்பா..” என்று கண்ணீரோடு அழைக்க.

“ப்ரயு.. சொல்லுடா.. உனக்கு நியூஸ் கிடைச்சுதா.. “ என்று அவன் கேட்க, அவள் சற்று சுதாரித்து,

“ஆமாம்.. பா.. நேத்திக்கு நெட் லே பார்த்து தெரிஞ்சிகிட்டேன்.. அதோட உங்க ஆபீஸ் லேர்ந்தும் மெயில் வந்துது.. உங்களுக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே..? அங்கே எல்லாம் சரியாயிடுச்சா?”

“இல்ல மா... இன்னும் சரி ஆகல... இன்னைக்கு கொஞ்சம் பரவால்ல... அதனாலே... கொஞ்ச நேரம் மட்டும் சிக்னல், பவர் எல்லாம் கொடுத்துருக்காங்க... எப்போ வேணா கட் ஆகலாம்.. “

“ஒஹ்.. நீங்க சாப்பாட்டுக்கு என்ன பண்றீங்க..? ஊருக்கு கிளம்பனும் நு.. fridge லே எல்லாம் காலி பண்ணிட்டேன்ன்னு சொன்னீங்களே.. “

“நியூஸ் கிடச்ச உடனே.. என் friends ரெண்டு பேர் எனக்கும் சேர்த்து சில food items வாங்கி கொடுத்துட்டாங்க.. நானும் சமாளிச்சுட்டு இருக்கேன்..”

“ஓகே.. கேர் full ஆ இருங்க ஆதிப்பா ..”

“சரி டா.. கல்யாணம் நல்லா முடிஞ்சுதா? நீ மண்டபத்துலே தானே இருக்க... ? அம்மா, வித்யா எல்லாம் வந்துருக்கங்களா? சாரி மா.. நீ சொன்னத நான் கேட்ருக்கணும் .. லாஸ்ட் வீக் நான் கிளம்பிருந்தா கல்யாணம் அட்டென்ட் பண்ணிருக்கலாம்.. ஒன்ன அந்த அம்மா ஒன்னும் சொல்லலேயே .. உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கா? “ என்று வரிசையாக கேள்விகள் கேட்டான்..

“கல்ய்ணாம் முடிஞ்சுது... அப்புறம் ஒரு குட் நியூஸ் .. உங்களுக்கு மருமகன் பிறந்திருக்கான் “ என,

“ஹே.. எப்போ ? சொல்லவே இல்ல.. “

“நேத்துதான் பா.. “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.