(Reading time: 13 - 25 minutes)

து என்ன வேலை.

“பந்திக்கு முந்துன்னு.. பெரியவங்க சொல்லிருக்காங்க.. வா போவோம்.. உங்க அப்பா ஏற்பாடு பண்ண சமையல் ஆட்கள் தூள். .எல்லா அயிட்டமும் சூப்பர் இருக்கு.. அந்த மன்மத கும்பல் வந்துச்சின்னா நமக்கு மிஞ்சாது.. ‘

“நீ இருக்கியே .. ? போலாம் வா..”

அவர்கள் சாப்பிட்டு வரவும், மற்ற உறவுக்காரர்களை கவனித்துக் கொண்டிருந்த, தன் பெற்றோரை சாப்பிட அனுப்பி விட்டு , அவள் மீதி வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

அன்றே நாள் நன்றாக இருப்பதால் , மணமக்களை அவர்கள் வீட்டிற்கு அழைத்து செல்ல முடிவு செய்திருந்தனர். ஆதி வந்திருந்தால், பிரயுவும், ஆதியும் அவர்களை கொண்டு விட ஏற்பாடு செய்திருந்தனர்.. இப்போது அவர்கள் உறவு முறையில் வேறு ஜோடியை அனுப்பி வைத்தனர்.

பவி, தாரிணியும் புகுந்த வீட்டிற்கு செல்வதை எண்ணி கண் கலங்கினர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

புவனேஸ்வரியின் "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

ப்ரயு அவர்களிடம் “ரெண்டு பேரும் கல்யாணத்திற்கு முன்னாடி நடந்த தேவை இல்லாத விஷயங்களை மறந்து விட வேண்டும்.. இன்றிலிருந்து அது உங்கள் வீடு. அந்த வீட்டின் சந்தோஷம் எந்த வகையிலும் கெட நீங்கள் காரணமாக இருக்க கூடாது.. அதோடு இனிமேல் என்னை பற்றி கவலை கொள்ளாமல் உங்கள் வாழ்க்கையை நீங்கள் பார்த்து கொண்டால்தான் அம்மா, அப்பாவிற்கு பெருமை .. புரிந்ததா ?”

அவர்கள் இருவரும் “சரிக்கா.. “ என இருவரையும் சந்தோஷமாக வழி அனுப்பி வைத்தாள்.

பிரயு மணமக்கள் இருவரையும் அனுப்பி விட்டு, மண்டபத்தை காலி செய்து , வீட்டில் எல்லாவற்றையும் இறக்கி விட்டு hospital கிளம்பினாள்.. இதுவே மாலை 5 மணி போல் ஆகி விட்டது.

அது வரை பிரியாவும் அவளோடு இருந்தாள். அவள் கிளம்பவும், அவள் பெற்றோரும் அவளோடு கிளம்பினர்.

“அம்மா, நீங்க எங்க கிளம்பறீங்க..?”

“நாங்களும் உன்னோட hospital வந்து உன் நாத்தனார், குழந்தையை பார்த்துட்டு வந்துடறோம் ப்ரத்யா..”

“ஏனம்மா.. வீட்டில் நம்ம சொந்தம் எல்லாம் இருக்காங்க.. அவங்கள பார்க்க வேண்டாமா ?”

அதற்குள் அவள் அத்தை, சித்தி எல்லாம் “அம்மா உன்னோடு வரட்டும் டா.. இனிமேல் என்ன நைட் சாப்பாடுதானே.. அதை கூட அப்பா கேட்டரிங் சொல்லிட்டாங்க.. வந்தா பரிமாற வேண்டியது தானே.. அத நாங்க பார்த்துக்கறோம். “

“ஏனம்மா.. நாளைக்கு அவங்க மறுவீடு வருவாங்களே.. “

“நாளைக்கு தானே .. நீ நேற்று full ஆ ஒருத்தியா சமாளிச்சிருக்க.. இப்போ நாங்க உன்னை உங்க வீட்டில் இறக்கி விட்டு hospital போறோம்.. நீ அங்கே கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு .. வா .. நீ வந்தவுடனே நாங்க கிளம்பறோம்..” என்றார்.

அவளுக்கும் அது தேவையாக இருக்கவே, அவர்கள் சொன்ன மாதிரி செய்தாள்.

hospital சென்ற ப்ரயுவின் பெற்றோரிடம் அவள் மாமியார் கல்யாணம் விசாரிக்க, இவர்கள் இப்போ வெறும் கையாக போக வேண்டாம் என்ற எண்ணத்தில் வாங்கி சென்ற சின்ன டிரஸ், பழங்கள் இதேல்லாம் கொடுத்தார்கள்.

பின் “இந்த ஆதி பண்றத பாருங்க.. மத்தியானம் உங்க பொண்ணு கிட்ட பேசியிருக்கான்.. குழந்தை பிறந்த தகவல் தெரிஞ்சு ஒரு வார்த்தை மாப்பிள்ளை கிட்ட பேசியிருக்க வேண்டாமா... ? மாப்பிள்ளை என்ன நினைச்சுக்குவார்.” என,

“நைட் பேசுவாறா இருக்கும்.. சம்பந்தியம்மா.. அங்கே அவர் நிலைமை என்னவோ?’

“என்ன நிலைமை.. பொண்டாட்டி கிட்ட பேச தெரியுது.. இங்கே பேச முடியாதா ?” என்று பொருமினார்.

இதை கேட்டுக் கொண்டே பிரத்யாவும் வந்து விட்டாள். அவர்களுக்கு புரிந்தது மாப்பிள்ளை தன் பெண்ணிடம் பேசியதுதான் பிரச்சினை என்று.. இதில் அவர்கள் என்ன சொல்ல என்று புரியாமல் விழித்தனர்..

ப்ரயு கண்ஜாடை செய்து கிளம்புங்கள் எனவும்

“சரி.. சம்பந்தியம்மா ..நாங்க கிளம்பறோம்.. அங்கே அப்படியே போட்டது போட்டபடி வந்தோம்.. இந்த ரெண்டு நாள் கல்யாண வேலை முடிஞ்சவுடனே என்ன உதவி வேணுமோ வந்து செய்யறோம்.. மாப்பிள்ளை பேசும் போது விசாரிச்சோம் நு சொல்லுங்க.. “ என்று கிளம்பினார்கள்.

ப்ரயு வரும்போதே வீட்டிலிருந்து tiffen செய்து எடுத்து வந்ததினால் அதை சாப்பிட்டு வந்தார் அவள் அத்தை...

ப்ரயு வந்ததிலிருந்து ஒரு வார்த்தை பேச வில்லை.

வித்யாவும் ஒன்றும் பேச வில்லை.

அப்போது ஆதியின் போன் வரவும் முதலில் வித்யாவிடம் பேசுகிறேன் என்றான்

வித்யாவிடம் நலம் விசாரிக்கவும்,

“என்ன அண்ணா நீ.. ? ஒரு போன் பண்ண மாட்டியா ? எங்க மாமியார் என்ன குடையறாங்க... “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.