(Reading time: 13 - 25 minutes)

ன்னும் problem இல்லைல.. வித்யாவும், குழந்தையும் நல்ல இருக்காங்கல்ல.. நீ போய் பார்த்தியா ? .. நீதான் இங்கே இருந்திருப்பியே.. எப்போ போறே ? இங்கே வேலை எல்லாம் முடிச்சுட்டு போ.. அங்கதான் அம்மா, வித்யா husband எல்லாம் இருப்பாங்க இல்ல..” என்றான்.

அவன் ப்ரயு அவள் தங்கைகள் கல்யாணத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணினான்..

அவன் எண்ணம் புரிந்த ப்ரயு, விரிவாக இல்லாமல் சுருக்கமாக,

“நான் நம்ம வீட்டில்தான் இருந்தேன் ஆதிப்பா... வித்யா வீட்டில் எல்லோரும் வெளியூர் சென்றிருந்தார்கள்.. நேற்று தான் வர முடிந்தது.. நானும் அத்தையும் பார்த்துக் கொண்டோம்..  வித்யாவும், குழந்தையும் நல்ல இருக்காங்க..”

“அப்போ .. நீ எப்போ கல்யாணத்திற்கு வந்தே ?”

“இன்னிக்கு காலையில் தான் “

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

பிரேமாவின் "கண்ணாமூச்சி ரே ரே.." - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

“நேத்திக்குதான் அவங்க எல்லாரும் வந்துட்டாங்க தானே... நீ நேற்று reception அப்போவது வந்துருக்க வேண்டியது தானே..”

“அது.. வித்யா வீட்டில் எல்லோரும் தீடிர்னு கிளம்பியதால் ரெஸ்ட் வேணும் நு போய்ட்டாங்க.. அத்தைய மட்டும் எப்படி தனியா விடறதுன்னு நானும் அங்கியே இருந்துட்டேன்.. காலையில் கிளம்பி வந்தேன்..”

ஆதி சற்று நேரம் பேசவில்லை.. அவனுக்கு பிரயுவின் சூழ்நிலை புரிந்தது.. அவள் மனம் எத்தனை கஷ்டபட்டிருக்கும் ..ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சினை.. தானும் வர வில்லை.. டெலிவரி, கல்யாணம் எல்லாம் அவளை எவ்வளவு டென்ஷன் ஆக்கியிருக்கும் என்று...

அவன் மெதுவாக,

“சாரி டா.. ப்ரயு.. என்னாலே உனக்கு ரொம்ப கஷ்டம் .. என்னோட பொறுப்பு எல்லாம் நீ பார்த்து, உன் பிறந்த வீட்டிற்கு உன்னாலே எதுவுமே செய்ய முடியல.. எனக்கு ரொம்ப கில்டி யா இருக்கு “

“ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க.. ? நீங்க வேற.. நான் வேறயா.. ? ஒன்னும் பிரச்சினை இல்ல.. இப்போதான் கல்யாணத்திற்கு வந்துட்டேனே.. நீங்க வருத்தப் படாதீங்க..”

“சரி.. அநேகமா இன்னும் கொஞ்ச நேரத்தில் சிக்னல் போய்டும்.. இனிமேல் நைட் கிடைக்கும் நு நினைக்கிறன்.. நான் அப்போ அம்மாவிற்கு பேசுகிறேன்..  நீ இப்போ அவங்க கிட்ட தகவல் மட்டும் சொல்லிடு.. அதே மாதிரி ஒன்னும் பிரச்சினை இல்லைன்ன நீ இப்போ hospital போக வேண்டாம்.. நைட் போய் அம்மாவிற்கு துணையா இருந்துக்கோ .. போதும். ஓகே . யா.. ? டேக் கேர் மா “

“சரிப்பா.. நீங்க எப்போ லைன் கிடைச்சாலும் பேசுங்க.. பத்திரமா இருந்துக்கோங்க.. மற்ற விஷயங்கள் நாம அங்கே புயல் எல்லாம் முடிஞ்சவுடனே பேசிக்கலாம்..டேக் கேர் பா.. பாய் ..”

“பாய்.. “

அவள் சாப்பிட வருவாள் என காத்திருந்த பிரியா, அவள் வராமல் மீண்டும் போன் பேசவும் அவளை முறைத்தாள். அவளிடம் கண்ணால் கெஞ்சிய படி,

“அத்தை.. அவர் பேசினார்.. அவர் பத்திரமா இருக்காராம்,, இன்னும் அங்கே சரியாகவில்லையாம்.”

“சரி.. அவனிடம் வித்யா விஷயத்தை சொன்னியா ..?”

“சொல்லிட்டேன் அத்தை.. ரொம்ப சந்தோஷப்பட்டார்.. நைட் கூப்பிட்றேன்னு சொல்லிருக்கார்..”

“ஏன் இப்போ பேச வேண்டியது தானே.. ? விஷயம் தெரிஞ்ச உடனே மாப்பிள்ளை கிட்ட பேச வேண்டாமா..”

பிரயுவின் குரல் இறங்கியது “ இல்லை அத்தை.. அங்கே சிக்னல் எல்லாம் இன்னும் சரியாய் கிடைக்க வில்லை.. நான் எதச்சையாய் ட்ரை பண்ணி கிடைச்சது,.. அவரா ட்ரை பண்ணனும்னா எப்படியும் நைட் ஆகிடும் நு சொன்னார்..” என்றாள்.

“ஏதோ ஒன்னு சொல்லு.. அவனுக்கு வர வர ஒன்னும் புரிய மாட்டேங்குது.. எது முக்கியம்ன்னு தெரிய மாட்டேங்குது..” என்று வைத்தார்.

பிரயுவிற்கு மிகவும் கஷ்டமாகி விட்டது.. நல்ல மன நிலையில் இருந்தவள் இப்போ டல் ஆகி விட்டாள்.

அவளையே கவனித்துக் கொண்டிருந்த பிரியா, என்ன வென்று வினவ, அவளிடம் கொட்டி விட்டாள்.

“அடி போடி.. உங்க மாமியாருக்கு வேற வேலை இல்லை.. வித்யா முக்கியம் தான்.. தன் பையன் நிலைமையும் யோசிக்கன்னும்... இதெல்லாம் யோசிச்சு நீ மண்டை குழம்பாதே.. சாப்பிட வா “

“ஏய்.. நீ என்னடி என் பின்னாடியே சுத்திட்டு இருக்க.. ? பவி, தாரிணிய பார்த்துக்கோன்னு தானே உன்னை அனுப்பிச்சேன்..”

“ஏண்டி .. உன் மூளை மழுங்கி போச்சா... ? இனிமேல் நாம தேவை இல்லை.. அங்கே பாரு ரெண்டு மன்மதனுங்களும், அவங்க அவங்க ரதிய எப்படி கரெக்ட் பண்ணணுமோ பண்ணிக்கிட்டு இருக்காங்க.. வா.. நாம முக்கியமான வேலைய பார்ப்பம்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.