(Reading time: 10 - 20 minutes)

"ம்மா.. உங்களுக்கு பகலில் வேலை சரியாக இருப்பதால் இரவுகளில் ரெஸ்ட் எடுத்துக் கொள்கிறீர்கள்.. ப்ரத்யா என்ன செய்வாள்.. ? காலையில் எல்லா வேலையும் முடித்து விட்டு, ஆபீஸ்க்கு சென்று , பிறகு இரவுகளில் முழித்தால்.. அவளுக்கும் ரெஸ்ட் வேண்டாமா? நீங்கள் உதவிக்கு ஆள் வைத்துக் கொண்டால் .. சமையல் மற்ற வேலை எல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.. ப்ரத்யா. .காலையில் நீங்கள் வந்த பின் கொஞ்சம் தூங்கி எழுந்து ஆபீஸ் போவாள் இல்லையா ?" என்றான்.

"ஆக , உன் பொண்டாட்டி கஷ்டப்படக் கூடாது என்பது தான் இந்த யோசனைக்கு காரணம் இல்லையா?"

"ஏன்மா.. எதை சொன்னாலும் இப்படியே பேசுகிறீர்கள்.. நீங்கள் கஷ்டபட்டால் நான் பார்த்துக் கொண்டிருப்பேனா? அது மாதிரி தானே அவளும்.. இத்தனைக்கும் அவள் என்னிடம் எதுவும் சொல்லவதில்லை... நானாக கேட்டுத் தெரிந்து கொண்டேன்.. "

"நீ கல்யாணம் முடித்த பின் மிகவும் மாறி விட்டாய்.. எதற்கும் பணம் பற்றி யோசிக்க மாட்டேன் என்கிறாய்... நீ சொன்ன மாதிரி ஆள் போட்டால் எப்படியும் மாதம் மூவாயிரம் வரை கொடுக்க வேண்டும்.. "

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

தங்கமணி சுவாமினாதனின் "கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது..." - பெரியவர்களுக்கான மந்திர, மாயாஜாலங்கள் நிறைந்த வரலாற்று கதை...

படிக்க தவறாதீர்கள்...

"அம்மா.. நான் யோசிக்காமல் சொல்லவில்லை.. முன்பு நாம் மூவர்தான்.. எங்கள் வேலையை நாங்களே செய்து விடுவதால் உங்களுக்கு அதிக வேலை இருக்காது. ஆனால் இப்போது குழந்தை பிறந்த வீட்டில் அதை கவனிக்கவே ஒருவர் தனியாக வேண்டும்.. அதனால் தான் சொல்கிறேன்,,"

"என்னவோ போ.. நீயே முடிவு செய்து கொள் " என்று வைத்து விட்டார்.

அடுத்து பிரத்யாவிடம் பேசிய ஆதி, முதலில் அவனுடைய ஐடியா என்று வேலைக்கு ஆள் வைப்பது பற்றி கூறினான்.

"நல்ல ஐடியா தான் ஆதிப்பா.. அதே போல் ஆள் வைத்துக் கொண்டால்.. அட்லீஸ்ட் காலையில் நான் கொஞ்சம் தூங்கி எழுந்துக்கலாம்.. மேலும் பகலில் அத்தைக்கும் கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும்.. இல்லை என்றால் குழந்தை தூங்கும் நேரம் அவர்கள் மற்ற வேலையெல்லாம் பார்க்க வேண்டி அவர்களுக்கு ரெஸ்ட் இல்லாமல் போய் விடுகிறது, இதை முதலில் அத்தையிடம் சொல்லி ஏற்பாடு செய்யுங்கள்.."

ஆதி ஏற்கனவே தன் அன்னையிடம் பேசியதாக கூறியவுடன், அத்தை ஒத்துக் கொண்டார்களா என்று கேட்டாள்.

அவன் தாயின் அரைகுறை சம்மதம் பற்றி சொன்னவுடன் , "

"இந்த ஐடியா ட்ராப் பண்ணி விடுங்கள்.."

"ஏன் ப்ரயு.. "

"அவர்கள் முழு சம்மதம் இல்லாமல் செய்தால் .. அது நன்றாக இருக்காது. மேலும் என் மேல் இன்னும் அவர்களுக்கு கசப்பு வரக் கூடும்.."

"இதோ பார் .. நீ எல்லோருக்கும் யோசிக்காதே.. உன் உடம்பை பார்.. நாளைக்கு நீ படுத்துக் கொண்டால் யாருக்கு கஷ்டம் ?"

"நீங்கள் சொல்வது சரிதான்.. அவர்கள் இஷ்டம் இல்லாமல் செய்வதால், வருபவர்களை எதாவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள் .. அது சரியாக வராது.. "

"அப்படியெல்லாம் நடக்காது .. ப்ரயு.. நான் சொல்வதைக் கேள்.. "

"இல்லை ஆதிப்பா .. உங்களுக்கு புரியவில்லை.. இஷ்டம் இல்லாமல் ஒருவரை வைத்துக் கொண்டு அவர்களுக்கு நாம் கஷ்டம் கொடுக்கக் கூடாது. ப்ளீஸ் விட்டு விடுங்கள்.."

"நான் ஒவ்வொரு விஷயத்திலும் உனக்காக யோசித்து சொல்கிறேன்.. ஆனால் நீ எதாவது சொல்லி அதை தடுத்து விடு.. இனிமேல் உனக்கு நான் எதற்கும் சப்போர்ட் செய்ய போவதில்லை.. " என்று கோபமாக வைத்து விட்டான்.

கல்யாணமாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் நெருங்கிய இத்தனை நாட்களில் ஆதி பிரயுவிடம் கோபப்படுவது முதல் முறை.. முதலில் ஒரு முறை கூட வருத்ததோடுதான் வைத்தானே ஒழிய, கோபப்படவில்லை. இந்த முறை அவனால் கட்டுபடுத்த முடியாமல் திட்டி விட்டான் .

ஏற்கனவே வித்யா டெலிவெரிக்குப் பிறகு .. இருவரும் அதிகமாக பேச முடியவில்லை.. வேலை அதிகம் பிரயுவிற்கு.. மேலும் ப்ரயு மாமியாருக்கு இரவுகளில் ரெஸ்ட் தேவை என்பதால் , அவர் ப்ரயு ரூமில் படுத்துக் கொண்டார்.. அதனால் வேறு அவளால் அவனிடம் நெருக்கமாக பேச முடியவில்லை..

இந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு ஆதி, பிரயுவிடம் போனில் பேசுவதை விட்டு விட்டான். மறுநாள் காலையில் அவளுக்கு இனிமேல் அவனுக்கு வேலை அதிகம் இருப்பதால் இரவுகளில் போன் பேச முடியாதென்றும், நேரம் கிடைக்கும் போது மெசேஜ் செய்வதாகவும் கூறினான். அதன் படி தினமும் அவளிடம் whats up இல் விசாரிப்பவன்.. அவள் பதில் அனுப்பும் வரை விடாமல் மெசேஜ் செய்வான்.. அவள் அனுப்பிய பின் வேலையை பார்க்க போய் விடுவான்.

ஆதியை பொறுத்த வரை அவன் கல்யாணம் பற்றிய எண்ணம் இல்லாமல் இருக்கும்போது பிரயுவோடு திருமணம் நடந்தது. அவன் அம்மா, தங்கை இவர்கள் இருவருக்கும் இப்படி ஒரு முகம் இருக்கும் என்பது அவன் எதிர் பாராதது. அவளை விட்டு வரும்போது அவன் மனதில் ப்ரயு அவர்களிடம் அட்ஜஸ்ட் செய்ய வேண்டுமே என்ற எண்ணம் தான் இருந்தது. அவளோடு இருந்த பதினைந்து நாட்களில் அவளின் குணம் புரிந்தாலும், ஒரு சிறு பயம் இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.