(Reading time: 10 - 20 minutes)

னால் இப்போதோ அவனுக்கு பிரயுவை பற்றிய எண்ணமே மேலோங்கி இருந்தது. தன் அம்மா, தங்கை இருவரும் தன் மீது இவ்வளவு பொசெசிவாக இருப்பார்கள் என்று எண்ணவில்லை. இப்போது பிரயுவிற்காக இவன் யோசிக்கும் ஒவ்வொரு விஷயமும் அவர்கள் பார்க்கும் விதம் குறித்து ஆதிக்கு வருத்தம் மட்டுமில்லாமல் மிகுந்த குற்றவுணர்ச்சியும் ஏற்பட்டது.

இந்த நிலையில் அவனின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் பிரயுவும் மற்றவர்களை பற்றி யோசிக்கவும், அவனுக்கு அவளிடத்தில் கோபம் ஏற்பட்டது.

பிரயுவிற்கு இது கஷ்டமாக இருந்தாலும், அவன் எப்படியும் விரைவில் நேரில் வரும்போது அவனை சமாதானப் படுத்திக் கொள்ளலாம் என்று விட்டு விட்டாள்.

இதற்கிடையே.. ப்ரியாவிற்கு திருமணம் நிச்சயம் ஆகியது.. அவள் சொன்னவுடன் வாழ்த்து சொல்லியவள் ,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

புவனேஸ்வரியின் "நினைத்தாலே இனிக்கும்..." - கல்லூரி காதல் கதை...

படிக்க தவறாதீர்கள்...

"யாருடி ... உன்கிட்ட மாட்டின அப்பாவி, ?"

"அப்பா பார்த்த மாப்பிள்ளைதான் .. பெண் பார்த்து விட்டு போக வந்தவர்கள் உடனே நிச்சயம் செய்து விட்டார்கள். "

 

"மாப்பிள்ளை பேர் என்ன ? என்ன செய்கிறார் ?

"பிரபாகரன் .. IT யில் தான் வேலை செய்கிறார். "

"நல்ல பேர் .. ஆள் எப்படி ? போட்டோ வைதிருக்கிறையா ?"

"இதோ " என்று காண்பிக்கவும்,

"என்னடி .. கையிலே வச்சுக்கிட்டு இருக்க போலே.. நல்ல இருக்கார்.. நீ பிளாட் ஆயிட்டியா ? என்று வினவினாள்..

"அது எல்லாம் ஒன்னும் இல்லை.. பொண்ணு பார்க்க வந்தப்போ அவங்க பாமிலி லே எல்லாரும் நல்லா பழகுனாங்க .. அவர் ரொம்ப பொறுப்பானவர் அப்படி .. இப்படின்னு எங்கப்பா ஏகப்பட்ட பில்ட் up கொடுத்தார்.. நமக்கோ பொறுப்புக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது... பார்த்தேன்.. சிக்கிட்டாண்டா அடிமைன்னு ஓகே சொல்லிட்டேன்.. "

"உன்னை.. என்ன சொல்ல தெரியல போ " என்றவள் , "எப்போ கல்யாணம் "

"அடுத்த மாதம் இருக்கும் டி.."

"ஹே.. சூப்பர் போ.. ஆதியும் அப்போ வரேன்னு சொல்லியிருக்கார்.. " என்று சந்தோஷப்படவும்

"ஒஹ்.. அப்போ கல்யாணத்துலே மீட் பண்ண வைக்கலாம்.. ஆனால் அவருக்கு ஒரு வருஷம் பெங்களூர் ப்ராஜெக்ட் போகணும்மாம்டி. .உன்னை விட்டு போகத்தான் கஷ்டமா இருக்கு "

"சீ.. லூஸ்.. நீ அவரோட போ . .வேலை கூட முக்கியமில்ல.. கண்டிப்பா வேலைக்கு போகணும் என்றால், அங்கே போய் தேடிக்கோ ...யாருக்காகவும் அவர விட்டு தனியா இருக்கிற தப்ப மட்டும் பண்ணாதே... " என்று சீரியஸ் ஆக சொல்லவும்

"ஏய்.. என்னடி எதுவும் பிரச்சினையா? நீ இவ்ளோ சீரியஸ் ஆ பேச மாட்டியே ?'

"இல்லடி.. சில சமயம் ரொம்ப கஷ்டமா இருக்கு.. இதுக்கு கல்யாணம் ஆகாம அப்பா வீட்டில் இருந்து இருந்தா கூட நிம்மதியா இருந்திருப்பேன்.. எல்லோருக்கும் கஷ்டம் கொடுக்க கூடாதுன்னு என் வருத்தத்தை மறைச்சு வாழ வேண்டி இருந்திருக்காது.. "

"ப்ரத்யா .. என்னடா ? " என்று அவள் வருத்தமாக கேட்கவும்,  மெல்ல சுதாரித்த ப்ரயு,

"சாரி டா. இந்த சந்தோஷ நேரத்துலே உன்ன வருத்தபடுத்திட்டேன்.. நீ பெங்களூர் கிளம்பற வழிய பாரு " என்று ப்ரியாவை ப்ரயு சமாதனம் செய்தாள்.

அதற்கு பிறகு, ப்ரியாவிடம் மனம் விட்டு பேசும் சந்தர்ப்பம் அவளுக்கு கிடைக்க வில்லை.. பிரியா தன் கல்யாண வேளைகளில் பிஸி ஆகி விட , வீட்டிலோ ஆதி அவளிடம் போனில் பேசுவதில்லை. வெறும் மெசேஜ் மட்டுமே..

தன் தங்கைகளிடம் பேசிக் கொண்டிருந்தவள், அவர்களும் குடும்ப சூழலில் சிக்கி விட மெதுவாக அதுவும் குறைந்தது.. எப்போதுமே தன் பெற்றோர்களிடம் தன் வருத்தம் காண்பிக்க மாட்டாள்.

ஆதி வருவதற்காக காத்திருந்த ப்ரயு, தன் மனதில் உள்ளதை அவனோடு நேரில் பேசி சரி செய்து கொள்ளலாம் என்று காத்திருந்தாள்.

தொடரும்

Episode # 14

Episode # 16

{kunena_discuss:948}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.