(Reading time: 14 - 28 minutes)

16. அன்பே உந்தன் சஞ்சாரமே - தேவி

Anbe Undhan Sanjaarame

தி பிரயுவிடம் கோபம் கொண்டாலும், அவனால் பிரயுவின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது. தான் இங்கேயிருந்து எதுவும் சொல்லி விடலாம். அங்கே சமாளிக்க வேண்டியவள் அவள்தானே.. தன் அம்மாவிற்கு பிடிக்காததை செய்யும் போது அவருடைய எண்ணங்கள் இன்னும் பிரயுவிற்கு எதிராக திரும்பும்.

அவனுக்கு கோபம் சீக்கிரம் போய் விட்டது தான்.. என்றாலும் தான் வேறு அவளை பேசி தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணிதான் அவளிடம் பேசாமல் இருந்தான்.

குழந்தை பிறந்து பதினைந்து நாட்கள் கழித்து அதற்கு பேர் வைக்கும் நிகழ்ச்சி வைத்திருந்ததன்ர். ஆதி இருக்கும் இடத்தில் இப்போதுதான் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளதால் அவன் தன் ப்ராஜெக்ட் வேலையில் பிஸி ஆகி விட்டான்.

ஆதியை அந்த நாட்டிற்கு அனுப்பும்போது அவனுக்கு அங்கே தலைமை பொறுப்பு கொடுத்து அனுப்பியிருந்ததால், ஏற்கனவே பத்து நாட்கள் வேலை ஒன்றும் நடக்காத நிலையில், தான் அப்படியே விட்டு வருவது சரி ஆகாது என்று எண்ணி அவன் இந்தியா செல்வதை தள்ளி வைத்து விட்டான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

அன்னா ஸ்வீட்டியின் "மனம் கொய்தாய் மனோஹரி" - When U Marry a stranger...

படிக்க தவறாதீர்கள்...

அவன் வருவதாக இல்லை என்றவுடன், வித்யாவிற்கு மிகவும் கஷ்டமாகி விட்டது. அவளே தன் அண்ணனை அழைத்து பேசினாள்.

“ஹலோ” என்ற ஆதியின் குரல் கேட்கவும்,

“அண்ணா “ என்று வருத்தக் குரலில் பேசவும், பதறிய ஆதி,

“என்ன ஆச்சு வித்யா ? யாருக்கும் எதுவுமில்லையே ?”

“எல்லாரும் நல்ல இருக்கோம் அண்ணா.. நீ இப்போ பாப்பா functionக்கு வரலியா?”

“அம்மாகிட்ட சொன்னேன்ம்ம்மா ?”

“இல்லை அண்ணா.. அன்னிக்கு hospitalil வைத்து நான் உங்கிட்ட கோபமா பேசிட்டேன்னு .. உனக்கு கோபமா ? அதான் வரலியா .. சாரி அண்ணா .. அன்னிக்கு ஏதோ ஒரு வேகத்துலே பேசிட்டேன் .. இனிமேல் அப்படி பேச மாட்டேன் .. அண்ணா.. அதுக்காக வராம இருக்காத .. நீ எனக்கு அண்ணன் மட்டுமில்லை .. அப்பா இடத்துலேர்ந்து என்னை பார்த்துக்கிற.. நீ வந்து என் குழந்தைய ஆசீர்வாதம் பண்ணு .. ப்ளீஸ் “

“ஹே.. என்னடா.. சின்ன பொண்ணு மாதிரி ... கலங்கிட்டு .. உன்மேல் கோபம் வந்தா கூட .. உன்னை திட்ட மாட்டேன்.. நிஜமாவே இப்போ நான் வர முடியாத சூழ்நிலைடா.. என் மருமகனுக்கு எப்பவும் என் ஆசீர்வாதம் உண்டு.. அதுக்காக கவலைபடாத.. என் வேலைகள் ஓரளவு செட் ரைட் பண்ணிட்டு என் மருமகன பார்க்க ஓடி வரேன் .. சரியா ?”

தன் அண்ணன் தன்னிடம் தன்மையாக பேசவும், தெளிந்த வித்யா பிறகு அண்ணனிடம் குழந்தையை பற்றி சிறது நேரம் பேசி வைத்து விட்டாள்.

ஆதி வித்யா பேசியவுடன் அன்று ஏதோ அவள் பேசிவிட்டாள்.. இனிமேல் மாறி விடுவாள் என்றுதான் நினைத்தான்.

ஆனால் வித்யாவோ தன் அண்ணனை பற்றி மட்டுமே எண்ணினாள் தவிர, தன் அண்ணியான பிரயுவை பற்றி அவள் கவலைபடவில்லை.. அண்ணனை சமாதனம் செய்தால் போதும் என்று மட்டுமே செய்தாள்.

வித்யா பேசினதும் ஆதிக்கு பிரயுவிடம் பேசி ஒரு வாரத்திற்கு மேலாகி விட்டதால் , அவளிடம் பேச வேண்டும் என்று தோன்றியது.

அன்று இரவு அவளை அழைத்தான்.  அவன் எண் போனில் வரவும், சற்று நேரம் அதை வெறித்து பார்த்த ப்ரயு எடுத்து,

“ஹலோ” என்றாள். அதை சொல்லும்போதே அவள் குரல் தழுதழுத்தது.

“ப்ரயு. .” என்று மென்மையாக அழைத்தவன்,

“உங்க கோபம் போயிடுச்சா?” என்றாள்.

“அது அப்படியேதான் இருக்கு.. ஆனால் என்னால் உன்னை புரிந்து கொள்ள முடியுது கண்ணம்மா.. நீ சொன்னது கரெக்ட் தான் .. எனக்கு என்னால் தான் நீ இத்தனை கஷ்டங்களும் தாங்கி கொள்கிறாய்.. என்று வேதனையாக இருக்கிறது . அதுத்தான் கோபமாக வெளிபடுகிறது ..”

“அதற்காக பேசாமல் இருப்பீர்களா? “

“இல்லை டா.. அது ஒரு நாள் கோபம் தான். அதுக்கு அப்புறம் என்னோடு பேசுவதற்காக வேறு நீ விழித்திருக்க வேண்டாமே என்றுதான் பேசாமல் விட்டேன் .”

ப்ரயு முழுதும் சமாதானம் ஆகவில்லை என்றாலும் , அவளால் பேசாமலும் இருக்க முடியவில்லை. ப்ரயுவாது தான் பழகிய இடத்தில இருக்கிறாள் .ஆதியோ புது இடத்தில முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை முறையில் அங்கே தனியாக தானே கஷ்டபடுகிறான் என்ற பரிதாபம் தோன்றியது ..

அவளின் மனம் சரியாகவில்லை என்று ஆதிக்கும் புரிந்தது.. என்றாலும் அந்த பேச்சை விட்டு அன்று வித்யா அவனிடம் பேசியதை கூறினான்.

மேலும் “வித்யா சரி ஆகி விடுவாள் என்று தோன்றுகிறது பிரயும்மா.. அவள் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி கொண்டால் உன்னோட பர்டன் கொஞ்சம் குறையும் “ என்று சொன்னான்.

ப்ரயுவிற்கு அவன் அளவு நம்பிக்கை இல்லை.. என்றாலும் அவனை மறுத்து எதுவும் கூறவில்லை..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.