(Reading time: 21 - 41 minutes)

16. கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - தங்கமணி சுவாமினாதன் 

Koncham periya kuzhanthaigalukkana kathai ithu

குப்த வமிசத்து இளவரன் ஹஸ்த குப்தன் தன்னைப்பற்றி இவ்வாறு கூறுவதாக அந்தணர் கூறியதைகேட்ட மன்னர் அதிவீரன் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தார்.பின்னர் இயல்பு நிலக்குத் திரும்பியவர் அந்தணரே இவ்வாலிபரின் தன்னைப் பற்றிக் கூறிய விளக்கம் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.இவர் நம் நாட்டு விருந்தினர் ஆவார்.அத்தோடு கூட மதம் கொண்ட யானையை அடக்கியதன் மூலம் நமக்கு பேருதவி செய்திருக்கிறார்.இவருக்கு நம் நாடு கடமைப் பட்டிருக்கிறது.எனவே இவருக்கு நான் ஏதாவது செய்தாகவேண்டும் என விரும்புகிறேன்.இவர் நம் நாட்டு விருந்தினராக எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தங்கியிருக்கலாமென்றும் இவர் தனது நாடு செல்ல விரும்புகையில் பாண்டிய நாட்டின் நல் முத்துக்களும்,யானைகளும் வேண்டிய அளவு இவரோடு கப்பலில் அனுப்பிவைக்கப்படும் என்று இவரிடம் கூறுவீராக என்றார்.

மன்னரின் கூற்று அப்படியே ஹஸ்த குப்தனிடம் சொல்லப்பட அவன் மிகப் பணிவோடு வேண்டாமெனச் சொல்வது போல் தலை அசைத்தான்.எங்கள் நாட்டில் முத்துக்களுக்கும் யானைகளுக்கும் பஞ்சமே இல்லை நானும் இங்கே தங்குவதற்காக வரவில்லை.எனேவே மன்னரின் விருப்பத்தை நான் ஏற்க முடியாத நிலையில் உள்ளேன்.அதற்காக வருந்துகிறேன் என்பதை உம்மன்னரிடம் தெரிவிப்பீராக..ஆனால்..எனக்கு ஓர் விருப்பம் உள்ளது என்றான் ஹஸ்த குப்தன்.

ஹஸ்தகுப்தனின் கூற்று அப்படியே மன்னரிடம் சொல்லப்பட அவனின் விருப்பம் என்னவென்று கேட்கப்பட்டது.

இங்கே நடக்கும் போட்டிகள் எதற்காக நடத்தப்படுகின்றன என்பதை நானறியேன்..ஆயினும் இப்போட்டிகளில் நானும் கலந்து கொள்ள விரும்புகிறேன்..அதற்கு மன்னரின் அனுமதியை வேண்டுகிறேன் என்றான் ஹஸ்த குப்தன் மிகப் பணிவாக.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை மன்னர் அதிவீரனுக்கு.அவருக்கு ஹஸ்த குப்தனை  போட்டிகளில் கலந்து கொளள அனுமதிப்பதில் விருப்பமில்லை.காரணம் அன்னிய தேசத்தவனான இவரை இவரும் குப்த தேசத்து இளவரசரே ஆயினும் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதித்தால் ஒருவேளை இவ்வாலிபர் போட்டிகளில் வெற்றி பெற்று விட்டால் இளவரசி மதிவதனியை இவருக்குத் திருமணம் செய்து கொடுக்க நேரிடும் அவ்வறு நேரிடுமாயின் மகளை வெகு தூரத்திற்கு அனுப்ப நேரிடும்.மேலும் மொழி,இனம்,கலாச்சாரம், பண்பாடு அனைத்திலும் சமமாய் இருக்கும் அக்கம்பக்கத்து நாடுகளில் இளவரசர்கள் பலர் இருக்கையில் அவர்களில் ஒருவரைத் தேந்தெடுக்காமல் எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லாத அன்னிய நாட்டுக்காரரை மதிவதனியை மணக்கும் வரனாய்த் தேர்ந்தெடுத்தால் சேர சோழ மன்னர்கள் உட்பட மற்ற நாட்டு மன்னர்களின் பகைமையையும் சம்பாதிக்க நேரிடும்.அதனால் நாட்டின் அமைதி கெடும்.அதற்கு எவ்விதத்திலும் இடம் கொடுத்தல் ஆகாது என்ற எண்ணம் தோன்றியது அதிவீரனுக்கு.எனவே ..நாட்டின் விருந்தினரான ஹஸ்த குப்தனின் மனம் வருந்தாதவாறு இவ்வறு கூறினார்..

பெருமைகள் பல கொண்ட குப்த ராஜ்ஜியத்தின் இளவலே..உமக்கு எமது வாழ்த்துக்கள்....போட்டிகளில் கலந்து கொள்ள எண்ணும் உங்களின் எண்ணமும் விருப்பமும் நியாயமானதே..ஆயினும் இப்போட்டிகள் வெறும் பொழுது போக்கிற்காக நடத்தப் படுபவை அல்ல.என் மகள் இளவரசி மதிவதனியின் திருமணம் சம்பந்தப் பட்டது.எனவே இப்போட்டிகளில் கலந்து கொள்ள எங்கள் தென் புலத்து நாடுகளின் இளவல்களுக்கே தகுதி உண்டு.அதன் காரணமாய் தங்களை இப்போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதி அளிக்க இயலாது என்பதை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கிறேன் என்றார் அதிவீர பாண்டிய மன்னர்.

என் மகள் இளவரசி மதிவதனியின் திருமணம் சம்பந்தப்பட்டது இப்போட்டிகள் என்று அதிவீரன் சொன்ன அதே நிமிடம் மெள்ளத் தலையைத்திருப்பி மதிவதனியைப் பார்த்தான் ஹஸ்த குப்தன்.நொடிக்கும் குறைவான நேரமே பார்த்த அந்த வேளையில் இருவர் கண்களும் சந்தித்துப் பிரிந்தன.அவனின் அந்த நொடிக்கும் குறைவான நேரப் பார்வையில் அவன் பார்வை பட்ட மதிவதனிக்கு நாணம் மிகுந்து கன்னங்கள் சிவந்தன.

ஏற்கனேவே அவன்பால் காதல் மலர்ந்திருந்த அவள் இதயம் சிலிர்த்து அவளின் பெண்மை லேசாய் விழித்துக் கொண்டது.சட்டென தன் பார்வையை அவளிடமிருந்து விலக்கிக் கொண்டான் ஹஸ்தன்.

 நொடிக்கும் குறைவான நேரமே அவன் கண்கள் மதிவதனியைப் பார்த்திருந்தாலும் அவன் கண்கள் அவளின் அழகை அப்படியே உள்வாங்கி நெஞ்சு முழுதும் நிரப்பியது.உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது.

இவள்தான் எத்தனை அழகு...தமிழ் நாட்டுப் பெண்களின் அழகை பலர் சொல்லிக் கேட்டதுண்டு..நானே கூட தென்னாடுகளில் பயணம் செய்யும் போது தமிழ்ப்பெண்களின் அழகையும் அவர் முகங்களில் வீசும் தெய்வீகத்தையும் அறிவையும் மிடுக்கையும் கண்டு வியந்ததுண்டு.ஆனால் இவ்விளவரசியோ அதீத அழகும் அறிவும் தெய்வீகமும் மிடுக்கும் கலந்த கலவையாய் காணப்படுகிறாரே..அதோடு கூட இவரிடம்  வீரமும் கூட குடி கொண்டிருப்பது தெரிகிறதே..மீண்டும் ஒரு முறை இளவரசியைப் பார்க்க விழைகிறதே மனது..இந்த ஆவலை எப்படி அடக்குவேன்..பகைவர்களை எளிதாய் அடக்கும் எனக்கு இளவரசியைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை அடக்க முடியவில்லையே..இது என்ன விந்தை..என்று எண்ணியவனாய் மிகவும் சிரமத்தோடு மனதை அடக்கிக் கண்களைத் திருப்பி மன்னரைப் பார்த்தான் ஹஸ்தன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.