(Reading time: 21 - 41 minutes)

லது கையை நெற்றியில் வைத்து தலையைக் குனிந்தபடி சோகமாய் அமர்ந்திருந்த மதிவதனியைப் பார்க்க சுசீக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

திடீரென..பெருத்த ஆரவாரம்..விமலாதித்தன் வாழ்க..சோழ இளவரசர் விமலாதித்தன் வாழ்க...என்ற கோஷம்..விண்ணை முட்டியது.இது சோழ நாட்டு இளவரசர் விமலாதித்தனின் வெற்றியைப் பறைசாற்றும் வெற்றி கோஷமல்லவா?மன்னர் அதிவீரன் இருக்கையிலிருந்து எழுந்து கைதட்டி விமலாதித்தனுக்குத் தம் மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவிக்க ராணி ருக்மாவும் மற்ற மந்திரிப்பிரதானிகளும் தத்தம் சந்தோஷத்தைத் தெரியப்படுத்தினர்.மதிவதனி சோகத்தின் உச்சிக்குச் சென்றாள்.அதன் காரணமாக சுசீயும் சுரத்தின்றிப் போனாள்.

மன்னர் அதிவீரன் மேடையை விட்டுக் கீழே இறங்கி போட்டி நடந்த களம் வந்து விமலாதித்தன் கரம் பற்றி தன் மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து தனது மகள் மதிவதனிக்கும் விமலாத்திதனுக்குமான திருமண நிச்சயதார்த்தத்துக்கான நாள் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என அங்கு கூடியிருந்த மக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குறுதி அளித்தார்.இதுதான் அதிவீரன் செய்த பெரும் தவறோ?மகளின் விருப்பம் எதுவென்று கேட்காது அவளின் சம்மதம் பெறாது மகள் மேல் கொண்டிருந்த அதீத நம்பிக்கையினாலும் பாசத்தாலும் அவர் தன்னிச்சையாய் அளித்த வாக்குறுதி அவரை எங்கே கொண்டு நிறுத்தப் போகிறது எனபதை அவர் எவ்வாறு அறிவார்?..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சுச்சியின் "மலையோரம் வீசும் காற்று..." - நட்பால் இணைவோம்... 

படிக்க தவறாதீர்கள்...

திவதனியைப் பார்த்துக்கொண்டும் போட்டிகளைக் கவனித்துக்கொண்டும் இருந்த ஹஸ்தகுப்தனுக்கு விமலாதித்தனின் வெற்றியும் அதன் காரணாமாய் அவனுக்கும் மதிவதனிக்குமான திருமணம் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டதையும் அங்கு நிலவிய சூழல் அவனுக்கு உணர்த்த அப்படியே துவண்டே போனான்.

இனியும் இங்கே இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.இப்படி நடக்கு என்பது அறிந்ததுதானே?போட்டியில் எந்த ஒருவராவது ஜெயிப்பார் அவருக்கு மதிவதனியயை கரம் பற்றும் உரிமை கிடைக்கும் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டதுதானே என்று எண்ணியவனாக அவ்விடம் விட்டு பெரும் பாரமான மனத்தோடு கிளம்பினான்.கடைசியாய் ஒரு முறை மதிவதனியைப் பார்க்க எண்ணியவனின் கண்களில் அவளின் வாடிய முகம் தெரிந்த போது செய்வதறியாது நின்றான்.பின்னர் திரும்பிப்பாராது நடக்கலானான்.

மன்னர் அதி வீரனுக்கு மட்டுமல்ல ராணி ருக்மாவுக்கும் சோழ நாட்டோடு சம்பந்தி உறவு எற்படப்போவது குறித்து மிகுந்த சந்தோஷம்.விமலாதித்தான் அழகு வீரம் அறிவு செறிந்தவன் அவன் தங்கள் மகள் மதிவதனிக்குப் மிகவும் பொருத்தமானவன்..சோழனாட்டு மன்னனின் பெருமையும் சோழனாட்டின் வளமையும் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை அன்னாட்டு மருமகளாக ஆகப்போகும் தங்கள் மகள் மிகவும் பாக்கியசாலி என்றெல்லாம் சொல்லிச் சொல்லிக் கொண்டாடினார்கள்.அதிவீரனும் ருக்மாவும்.சுந்தர பாண்டியனுக்கு அக்காவிற்குத் திருமணம் என்றதும் மிகுந்த சந்தோஷம்.அக்காவின் மனதை அறியும் வயதா அவனுக்கு?.. 

மஞ்சத்தில் குப்புறப்படுத்தபடி கிடந்தாள் மதிவதனி.அழுகிறாள் என்பது அவள் முதுகு குலுங்குவதிலிருந்து தெரிந்தது.அப்பொழுதுதான் மதீ என்று அழைத்தபடி உள்ளே நுழைந்த சுசீ..மதிவதனி அழுகிறாள் என்று புரிந்து போக மதி.. அழுகுறீர்களா என்ன..?என்று கேட்டபடி அவள் அருகில் சென்றாள்.

பதில் வராமல் போகவே..இளவரசி உங்கள் பிரர்ச்சனைதான் என்ன?நான் உங்கள் தோழிதானே?என்னிடம் கூடவா சொல்லமாட்டீர்கள்.?அங்கு உங்கள் தந்தையும் தாயும் நடக்கவிருக்கும் உங்களின் திருமண நிச்சயதார்த்தம் பற்றியும் தொடர்ந்து நடக்கப்போகும் திருமணம் பற்றியும் சோழ நாட்டு மருமகளாய் நீங்கள் வாழப்போகும் மகோன்னத வாழ்க்கை பற்றியும் எப்படியெல்லாம் மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.உங்களைக் காணவும் இங்கு வருவதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

அப்படியிருக்க நீங்கள் இப்படி அழுகொண்டிருப்பதின் காரணம் என்ன?ஏன் இளவரசி உங்களுக்கு இத் திருமணத்தில் விருப்பம் இல்லையா?..

இல்லையடி..இல்லை இல்லை..எனக்கு இத் திருமணத்தில் விருப்பம் சிறிதும் இல்லை...

அதிர்ந்து போனாள் சுசீ மதிவதனியின் சொல்கேட்டு..

என்ன சொல்கிறீர்கள் இளவரசி...

ஆம் சுசீ...நீ ஊர் சென்று நேற்றுதானே திரும்பினாய்.அதனால் இங்கு நடந்தது உனக்கு ஒன்றும் தெரியாது.

சொல்கிறேன் கேள்..என்றபடி ஹஸ்த குப்தன் மதங்கொண்ட யானையை அடக்கியதையும் அவன் பெரும் புகழ்பெற்ற குப்த ராஜ்ஜியத்தின் இளவரசன் என்றும் அவன் பால் தன் மனம் சென்றுவிட்டதையும் இனி அவனின்றி வேறு யாரையும் மனதாலும் நினைக்க முடியாதென்று கூறியபோது சுசீ வியப்பின் உச்சிக்கே சென்றாள்.

இளவரசி...இப்படிச் சொல்வதால் என்னைத் தவறாக எண்ணவேண்டாம்.சந்தித்த நிமிட நேரத்தில் அவர்பால் உங்கள் மனம் சென்றுவிட்டதாகக் கூறுகிறீர்கள்.இது எப்படி சாத்தியம்?அவர் உண்மையாகவே குப்த இளவரசர்தானா என எப்படி நம்புவது?நம் நாட்டை உளவு பார்க்க வந்த ஒற்றனாகக் கூட இருக்கலாமல்லவா?உண்மையாகவே அவர் குப்த நாட்டு இளவரராக இருந்தாலுமே அவர் மனம் உங்களை நாடுகிறதா என எப்படி நீங்கள் அறிவீர்கள்?ஒரு முறை கூட நீங்கள் இருவரும் வாய்விட்டு மனம் விட்டுப் பேசிக்கொள்லவில்லை அப்படியிருக்க அவர் மனதில் உங்கள் மீது காதல் இருக்கிறதா என்பதை எப்படி அறிவது?அவர் இளவரசராய் இல்லாமல் ஒற்றனாய் இருந்துவிட்டால் என்ன செய்வீர்கள்?மதிவதனி நீங்கள் சாதாரண பெண் இல்லை.ஒரு நாட்டின் இளவரசி..எந்த ஒரு முடிவையும் உங்களுக்காக மட்டுமின்றி இந்த நாட்டின் பெருமைக்காகவும் அதன் நன்மைக்காகவும் சேர்த்தே எடுக்க வேண்டும்...எனவே நன்றாக சிந்தித்து செயல் படுவதே நல்லது.. எனக் கூறினாள் சுசீ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.