(Reading time: 14 - 28 minutes)

பிறகு அவன் எப்போ வருகிறான் என்று கேட்ட போது

“தெரியல டா.. இங்கே செட் ரைட் ஆக கொஞ்ச நாள் ஆகும்.. பிறகு சொல்கிறேன் “ என்று வைத்து விட்டான். அன்றைக்கு அவன் whats up இல் அவளுக்கு அனுப்பிய பாடல்

இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ 
இவன் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ 
---
என் வானமெங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ 
என் காதலா உன் காதலால் நான் காணும் கோலமோ 
என் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோ 
பருகாமலே ருசியேருதே இது என்ன ஜாலமோ 
பசியென்பதே ருசியல்லவா அது இன்று தீருமோ 

அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா 
பருவங்களும் நிறம் மாறலாம் நம் பாசம் மாறுமா 
ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடலாகிறேன் 
விதி மாறலாம் உன் பாடலில் சுதி மாறக் கூடுமா 
நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல்  போகுமா 
இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

புவனேஸ்வரியின் "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

இந்த பாடலை கேட்டவள் அவனின் அன்பும், ஏக்கமும் புரிந்து அவன் மேல் உள்ள கோபம் குறைத்தாள்.

அந்த வாரத்தில் குழந்தை பெயர் சூட்டும் விழா நன்றாக நடந்தது. தன்னால் இயன்ற வரை ஆதி இருந்தால் எப்படி ஆசையாய் செய்திருப்பானோ அவ்வளவு செய்திருந்தாள் ப்ரயு.

தன் மாமியாரை கலந்து கொண்டு, குழந்தைக்கு செய்வதிலாகட்டும், வித்யா அவள் கணவர் இருவருக்கும் செய்யும் சீர்  எல்லாம் சிறப்பாக செய்திருந்தாள். ஆதியின் அம்மாவிற்கு பிரயுவின் இந்த திறமையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

ஆதி பணம் தான் என்றாலும், அதை ஒரு கடமையாக ஏனோ தானோ என்று செய்யாமல், ஆசையோடும், பொருத்தமாகவும் ஏற்பாடு செய்திருந்தாள்.

அவ்வளவு ஏன் ? அன்று குழந்தை தொட்டிலில் போடும்போது

        என்ன தவம் செய்தனை.. யசோதா

        ஆயர் பாடி மாளிகையில் தாய் மடியில் ..

இந்த பச்சை கிளிக்கொரு செவ்வந்தி பூவை ..

        அத்தை மடி மெத்தையடி ..ஆடி விளையாடம்மா ..

இது போன்ற தாலாட்டு பாடல்கள் மற்றும் கிருஷ்ணன் பாடல்களாக cd யில் பதிந்து மெலிதாக போட்டு விட்டது .. எல்லோரையுமே சந்தோஷபடுத்தியது.

அவளின் ஆர்வமான செயல்களை பார்த்த ப்ரயு மாமியார், பிரயுவின் அம்மா, அப்பாவை மட்டுமில்லாமல் .. பிரயுவின் தங்கைகள் குடும்பத்தினரையும் சேர்த்து விழாவிற்கு அழைத்து இருந்தார். ப்ரியாவையும் கூட...

வந்திருந்த வித்யாவின் குடும்பத்தினரிடம் கூட எல்லாம் என் மருமகள் ஏற்பாடு என்று பெருமையாக கூறினார். மேலும் வித்யா வீட்டில் அவள் கணவர் ஒரே பையன் என்பதால், குழந்தை தொட்டிலில் போட அத்தை என்று யாருமில்லை.

ப்ரயு மாமியார் , குழந்தையின் தாய் மாமா மனைவி அத்தை தானே என்று அவளை தொட்டிலில் விட சொன்னார். ப்ரயு இதை எதிர் பார்க்கவில்லை.. ஆனால் ஒன்று உண்மை.. அவர் தன் மகன், மருமகளின் செய்முறையை யாரையும் மாற்றி செய்ய விட மாட்டார்.. அந்த விதத்தில் பிரயுவை பிடிக்குமோ, பிடிக்காதோ .. அவளைத்தான் செய்ய சொல்வார்.

ப்ரியா இந்த நிகழ்ச்சி எல்லாம் வீடியோ எடுத்து வைத்தாள். சாப்பாடும் குறை சொல்ல முடியாத படி இருக்க, வித்யா மாமியாருக்கு இந்த முறை எந்த பிரச்சினையும் கிளப்பி விட வாய்ப்பில்லாமல் போய் விட்டது.

எல்லோருமே ஒரு இதமான மனநிலையில் இருந்தனர். பிரயுவிற்கு சில பல கஷ்டங்கள் இருந்தாலும், அவள் பொறுத்துக் கொண்டாள்.

ன்று இரவு பிரியா அனுப்பிய வீடியோ வை .. ஆதிக்கு அனுப்பி விட்டாள். அவன் அதை பார்த்து விட்டு

“ரதி .. ரொம்ப தேங்க்ஸ் டா... எனக்கு ரொம்ப ஹாப்பி ah இருக்கு.. யு ஆர் ரியலி கிரேட்.. “ என்று வித விதமாக பாராட்டியவன் , அவளிடம் ரொம்ப நேரம் காதல் பேச்சுக்கள் பேசிக் கொண்டிருந்தான்.

பிரயுவை ஆதியின் அம்மாவும், ஆதியிடம் பேசும் போது அவளால் தான் function நல்லபடியா நடந்தது என்று பாராட்டியிருந்தார்.

வித்யா குழந்தை வந்த பின்பு, பிரயுவிற்கு மனதில் ஒரு ஏக்கம் ஏற்பட ஆரம்பித்திருந்தது. அதே போல் அந்த function வீடியோ பார்த்த பின் ஆதியின் மனத்திலும் தனக்கும், பிரயுவிற்கும் பிறக்கும் குழந்தை பற்றிய எண்ணம் தோன்றியிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.