(Reading time: 14 - 28 minutes)

னால் இருவரும் வெளிபடுத்திக் கொள்ளவில்லை. ஆதியோ, பிரயுவோ ஒருவர் அதை வெளிபடுத்தினால் மற்றவர் மனதை கஷ்டபடுத்தக் கூடும் என்று எண்ணினார்.

நாட்கள் வேகமாக, அதே சமயம் எந்த புதிய பிரச்சினை இல்லாமலும் சென்றது.

என்னதான் அவன் வருவதை பற்றி சந்தேகமாக சொன்னாலும், பிரயுவிற்கு ஒரு நம்பிக்கை இருந்தது. இப்போது ஆதி வரமுடியவில்லை என்றாலும், இவர்களின் முதல் திருமண நாளை ஒட்டி அவன் வருவான் என்று காத்திருந்தாள்.

உண்மையில் ஆதியும் அதை மனதில் வைத்து இருந்தான்.. அவன் எண்ணியது முதல் திருமண நாளை ஒட்டி வரும்போது , அவன் அவளோடு ஒரு வாரம் தனியாக எங்காவது சென்று வரலாம் என்று பிளான் செய்திருந்தான். அதோடு வேறு சில வேலைகளும் சேர்த்து, எல்லாவற்றையும் அட்டென்ட் பண்ணி முடிக்கலாம் என்று முடிவு செய்திருந்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சுச்சியின் "மலையோரம் வீசும் காற்று..." - நட்பால் இணைவோம்... 

படிக்க தவறாதீர்கள்...

ப்ரயு அவன் பேசும்போது ப்ரியாவின் திருமணம் பற்றி கூறவும், அதே தேதியில் தன் நண்பன் திருமணம் இருப்பதாக கூறியிருந்தான்.

இன்னும் ஒரு வாரத்தில் அவர்கள் திருமண நாள் என்ற நிலையில், தன் கடமையாக வீட்டிற்கு தினமும் பேசி விடுபவன், அன்றைக்கு தன் அம்மாவிடம்.

“அம்மா, இன்னும் ஒரு வாரத்தில் எனக்கு விசா வந்துவிடும்.. நான் அங்கே ஒரு பதினைந்து நாட்கள் இருப்பேன்” என்றான்.

“ஏண்டா.. இப்போ வர ? “

“ஏன்மா... போன மாசமே வர வேண்டியது... நானும் இங்கே வந்து ஒரு வருடம் ஆக போகிறது ... அதானால் உங்கள் எல்லாரயும் பார்க்க வருகிறேன் “

“நீ இப்போ வந்தால் , திருப்பி எப்போ உன்னால் எப்போ வர முடியும் ..? “

“எப்படியும் ஒரு வருடமாவது ஆகும் நான் மீண்டும் வர ..”

“இல்லை .. வித்யா குழந்தைக்கு பேர் வைக்கும் function முடிந்து விட்டது. அன்றைக்கே வித்யா மாமியார்  தாய் மாமன் நீ இல்லியே என்று கொஞ்சம் மூஞ்சி காட்டினார்.. நான் தான் நீ அவள் குழந்தைக்கு காது குத்தி, மொட்டை போடும் functionக்கு வருவாய் என்று கூறியிருந்தேன். அவர்கள் வீட்டில் குழந்தைக்கு ஆறு மாதம் முடிந்த பின் வைத்து கொள்ளலாம்.. இப்போவே உங்கள் பையனிடம் சொல்லி அதற்கு தகுந்த மாதிரி லீவ் போட சொல்லுங்கள் என்றார்கள் .. உன்னிடம் கேட்டு விட்டு தேதியும் முடிவு செய்ய சொன்னார்கள். ஆனால் நீ இப்படி சொல்கிறாயே ?”

“என்னம்மா .. நீங்கள் நான் கிளம்பும் போது எல்லாம் எதாவது தடை சொல்கிறீர்கள்..? என்னை பற்றி யோசிக்க மாட்டீர்களா ? பிரயுவை பற்றி எண்ண மாட்டீர்களா ? கல்யாணமாகி பதினைந்து நாளில் அவளை விட்டு வந்து விட்டேன்.. வித்யாவ விட இரண்டு வயது பெரியவள். அவள் மனத்திலும் எத்தனையோ ஆசைகள் இருக்கும்...  எனக்காக இந்த ஒரு வருடமாக அவள் அம்மா வீட்டிற்கு கூட போய் தங்கவில்லை. நான் வந்து போனால் அவள் எனக்காக இதேல்லாம் செய்வதற்கு ஒரு அர்த்தம் இருக்கும். அவள் தங்கைகள் கல்யாணத்திற்கு கூட நான் வரமுடியவில்லை. நான் அவளுக்காக எதுவுமே செய்யாமல் எனக்காக நீ செய் என்று அவளிடம் எதிர்பார்க்க முடியும்?”

“ஏன்.. நானா உன்னை வர விடாமல் தடுத்தேன்... ? ஏன் உன் தங்கை வித்யா வளைகாப்பு, பிரசவம், பேர் வைக்கும் வைபவம் எதற்கும் தான் நீ வரவில்லை. அதற்காக என்ன பண்ண முடியும்.? அதோடு நானா உன் பொண்டாட்டியை அவள் அம்மா வீட்டிற்கு போகாதே என்று சொன்னேன். நீயும் அவளுமாக ஏதோ பேசி செய்துவிட்டு என் மீது பழி சொல்கிறாயா? ஏன் நீ என்னையும் , அவளையும் அங்கே வர சொன்னபோது கூட நான் அவளை கூட்டிபோ என்றுதானே சொன்னேன். வேண்டுமென்றால் இனிமேல் நீ வரும்வரை உன் பொண்டாட்டியை அவள் அம்மா வீட்டில் இருக்க சொல்.. நான் தனியாக இருந்து கொள்கிறேன்..எனக்காக நீயோ, உன் மனைவியோ எந்த தியாகமும் செய்ய வேண்டாம். “ என்று ஆதியை பேச விடாமல் வேகமாக பேசியவர்,

“ஆனால் ஒன்று நீ எனக்காக செய்கிறாயோ இல்லியோ, உன் தங்கைக்காக நீ வந்துதான் ஆக வேண்டும்.. வித்யா புகுந்த வீட்டில் அவள் தலை குனியும் படி நேர்ந்தால் அதோடு உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எங்காவது கண் காணாத இடத்திற்கு போய் விடுவேன்” என்று மிரட்டி போனை வைத்து விட்டார்.

ஆதி அப்படியே திகைத்து போய் அமர்ந்து இருந்தான். அவன் தன் அம்மாவிடம் இப்படியொரு பேச்சை எதிர்பார்க்கவில்லை. அவன் இதுவரை நினைத்து இருந்தது தான் ஒரே பையன் என்பதால் மனைவி பின்னால் போய் விடுவேன் என்று பயப்படுகிறார்கள். அப்படி இல்லை என்று நாம் நடந்து கொள்ளும் முறையில் கூடிய சீக்கிரம் தெரிந்து கொள்வார்கள் என்று எண்ணியிருந்தான்.

ஆனால் அவர்களுக்கு தன் பெண் மட்டும் புகுந்த வீட்டில் சந்தோஷத்தோடும், மரியாதையோடும் இருக்க வேண்டும். தன் பெண்னுடைய வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்க கூடாது. தன் பெண்ணிற்கு வாழ்க்கை முழுக்க சீர் செய்யவும், அவளுக்கு மாரல் சப்போர்ட் ஆகவும் தன் மகன் இருக்க வேண்டும். தன் மகனோ, வீட்டிற்கு வந்த மருமகளோ அதற்காக எந்த கஷ்டம் பட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கிறார்கள் என்று அவனுக்கு இப்போதுதான் புரிகின்றது. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.