(Reading time: 14 - 28 minutes)

 

ப்போதும் அவனால் அவன் அம்மாவை விட்டு கொடுக்க முடியாது. சின்ன வயசிலிருந்து அவர்கள் இருவரையும் எத்தனையோ சிரமங்களுக்கிடையில் யாருடைய துணையும் இல்லாமல் வளர்த்தவர்கள். அதனால் அவரின் தைரியம் அவனுக்கு தெரியும். அவன் படித்து வேலைக்கு போனபோது தன் அம்மாவை எந்த சூழ்நிலையிலும் கை விடக் கூடாது என்ற உறுதி தனக்குள் எடுத்திருந்தான்.

அவன் அதன் பின் என்ன செய்ய என்று யோசித்தவன், எப்படியும் பிரயுவிற்கு நாம் வருவதை சொல்லவில்லை. அதனால் லீவ் கிடைக்க வில்லை என்று சமாளித்து விடலாம் என்று எண்ணி விட்டான்.

ஆனால் அவன் அறியாதது, இந்த பேச்சு முழுக்க அவள் கேட்டு விட்டாள் என்பதோடு, அவள் அவன் வரவை எதிர்பார்த்திருந்தாள் என்பதுவும் .

அன்றைக்கு பிரியா அவள் வீட்டிற்கு பத்திரிகை வைக்க வரப்போவதாக சொல்லியிருந்ததால், சீக்கிரம் வந்து விட்டாள். ஆதி பேசியது தெரியாவிட்டாலும், அவள் மாமியாரின் பதிலில் இருந்து ஆதி அவளுக்காக ஏதோ பேசியிருக்கிறான் என்று புரிந்து கொண்டாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சிவாஜிதாசனின் "அமேலியா" - சர்வதேச காதல் கலந்த குடும்ப தொடர்.... 

படிக்க தவறாதீர்கள்...

அவள் உள்ளே வரவும், அவளிடம் ஏதோ சொல்ல வந்த அவள் மாமியார், பிரியா குடும்பத்தினர் வரவும் சரியாக இருக்கவே அப்படியே விட்டு விட்டார்.

நல்ல வேளை பிரியா அப்போதுதான் வந்திருந்தால் ப்ரயு மாமியார் பேசியதை அவள் கேட்கவில்லை.

பிரியாவும் அவள் பெற்றோரும் பத்திரிகை கொடுத்து விட்டு கிளம்பும் வரை இருவருமே முகத்தில் எதையும் காண்பித்துக் கொள்ளவில்லை.

பிரியா விளையாட்டாக கூறுவது போல் ,

“ஆண்டி.. ப்ரத்யாவை என் கல்யாணத்திற்காவது முதல் நாளே அனுப்பி விடுங்கள்.. “ சிரித்துக் கொண்டே சொல்லவும், பிரயுவின் மாமியாரும்

“நானாம்மா அவளை வேண்டாம் என்று சொல்கிறேன்.. எவ்வளவு நாள் வேண்டுமோ கூட வைத்துக் கொண்டு அனுப்பி விடு” என்று அவரும் சிரித்துக் கொண்டே சொன்னார்.

ப்ரியா யோசனையோடு பிரயுவை பார்த்து என்ன என்று வினவ, அவள் ஒன்றுமில்லை என்று தலையசைத்தாள்.

அவள் கிளம்பிய பின்,

“இதோ பார் ப்ரத்யா .. உனக்கு உன் பிறந்த வீட்டில் தங்க வேண்டுமென்றால் எத்தனை நாள் வேண்டுமானாலும் தங்கி வா.. அதே போல் உன் புருஷனோடு போக வேண்டுமென்றாலும் போ.. எனக்காக நீயும் , உன் புருஷனும் எந்த தியாகமும் செய்ய வேண்டாம். “ என்று கூறி விட்டு உள்ளே சென்று விட்டார்.

ப்ரயு யோசனையோடு உள்ளே சென்றவள், என்ன நடந்திருக்கும் என்று புரிந்தது. ஆனால் ஏனோ அவளுக்கு ஆதியிடம் இது பற்றி பேச விருப்பமில்லை. அவளுக்கு தோன்றியது அவன் அம்மாவிற்கு தான் சப்போர்ட் செய்வான். மிஞ்சி போனால் என்னால் உனக்குத்தான் கஷ்டம் என்ற அதே விஷயத்தை தான் திரும்ப சொல்வான். அதனால் ஒன்றும் பயனில்லை என்று எண்ணினாள்.

அவள் யோசித்து ஒரு முடிவு எடுத்தாள். இதற்கு தீர்வு என்றால், ஆதி இந்தியாவிற்கு நிரந்தரமாக வரவேண்டும்.. அது எவ்வளவு சாத்தியம் என்று அவளுக்கு தெரியவில்லை.

இல்லை அவள் அம்மா வீட்டிற்கு செல்ல வேண்டும். ஆதி வந்த பின் முடிவு எடுக்கலாம். ஆனால் ஆதியோ, அவன் அம்மாவோ சொன்னால் கூட, வயசான அவர்களை தனியாக விட்டு செல்ல அவள் மனசாட்சி இடம் கொடுக்காது. அதனால் ஆதி வரும் வரை இதுதான் வாழ்க்கை என்று உணந்தாள்.

அவள் மறந்தது தன் புத்தி சொல்வதை எல்லாம், மனம் கேட்காது என்றும், அது தன் எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டே செல்லும் என்பதையும்.

இது எதுவும் வித்யா கவனத்திற்கு செல்ல வில்லை. அதனால் அன்று இரவு வழக்கம் போல் வித்யாவிடம் சென்றவளை, அவள் மாமியார் தடுக்க, அவரிடம்

“உங்கள் மகன் வரும் வரை ..அவரிடத்தில் இருந்து உங்களை பார்த்துக் கொள்வேன் என்று சொல்லியிருக்கிறேன். நீங்கள் கண் விழித்து உங்களுக்கு எதாவது வந்தால், நான் தான் பதில் சொல்ல வேண்டும். இது என்னுடைய கடமை.. நான் செய்து கொள்கிறேன்.. நீங்கள் வழக்கம் போல் இருங்கள். “என்று அவரை அனுப்பி வைத்து விட்டாள்

ப்ரயு மாமியாருக்கு கொஞ்சம் உறுத்தத்தான் செய்தது. இருந்தாலும் அவர் உடல் நிலை, மற்றும் அப்போதும் தான் போய் விட்டால், தன் மகளை யார் பார்ப்பார் என்று எண்ணி படுக்க சென்று விட்டார்.

ப்ரயு அவளின் தீர்மானத்தின் படி ஆதியிடம் பேச்சை குறைத்துக் கொண்டாள். சாதாரணமான நல விசாரிப்போடு முடித்துக் கொண்டாள். ஆதியும் குற்ற உணரவில் இருந்ததால் அவளின் மாற்றங்களை கவனிக்கவில்லை. அதோடு அவனும் பிரயுவின் உணர்வுகளோடு தான் விளையாண்டால், அவள் தாக்கு பிடிப்பது கஷ்டம் என்று எண்ணி அவளிடமிருந்து சற்று விலகி இருந்தான்.

தன்னுடைய மனக் கஷ்டங்கள் எதையும் அவள் பெற்றோரிடம் மட்டுமல்ல, ஆதியிடம் கூட காண்பிக்காமல் இருக்க ஆரம்பித்தாள்.

அவளும், அவள் மாமியாரும் அவசியம் ஏற்பட்டால் ஒழிய பேசுவதில்லை. காலையில் அவர்களுக்கு தேவையானதை செய்து விட்டு ஆபீஸ் செல்வாள். மாலையில் வந்து மிச்ச வேலையை முடித்து விட்டு , வித்யாவை கவனிக்க சென்று விடுவாள்.

இனி ..ஆதி .. பிரயுவின் வாழ்க்கை எப்படி போகும் ??

தொடரும்

Episode # 15

Episode # 17

{kunena_discuss:948}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.