(Reading time: 10 - 19 minutes)

19. சதி என்று சரணடைந்தேன் - சகி

Sathi endru saranadainthen

யாவரையும் அதிர வைத்தது தொலைக்காட்சியில் யாவரும் கண்ட அச்செய்தி!!!

ஒருவரின் மனமும் இயல்பாக இல்லை!!!

மனம் பதைப்பதைத்து ஒடுங்கினர்.

ரகுவின் நிலை தான் இதிலும் அதீத மோசம்!!!

அவர் இடிந்து போய் அமர்ந்திருந்தார்!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல், நகைச்சுவை கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

"எஸ் சார்!அது உண்மை தான்!அவங்களும் போயிருக்காங்க!"-என் செய்தி அனைவரையும் செயலிழக்க செய்தது.

அது என்ன செய்தி???

'சென்னையிலிருந்து டெல்லி சென்ற விமானம் இயந்திர கோளாறு காரணமாக வெடித்து சிதறியது!'என்ற செய்தி தான் அது!!!

ஆம்!!ஸ்ரேயா காலமாகி போனார்.

நொறுங்கி போனார் ரகு!!

இயற்கையாக அவர் விழிகள் கண்ணீரை கரையவிட்டன.

"ரகு!"-எந்த ஆறுதலும் செவிகளில் விழவில்லை.வைராக்கியமாக கண்ணீரை கட்டுப்படுத்தினார்.

"அவளும் போயிட்டால்ல!நான் என்னடா பாவம் செய்தேன்?ஏன் எனக்கு மட்டும்!!!"

"டேய்!"-நண்பனின் கரம் ஆறுதலாக அணைத்துக்கொண்டது.

"அவளுக்காக நான் எதையும் செய்ததில்லைடா! கடைசி வரைக்கும் அவக்கேட்ட அன்பை என்னால தர முடியலை!"

"அழாதேடா!தைரியமா இரு!"-அவர் முகத்தை மூடிக்கொண்டு அமர்ந்துவிட்டார்.

என்ன சொல்வது???ஸ்ரேயாவின் மீது காதல் இல்லாமல் போனாலும்,பாசம் இருந்தது!அழகான நேசம் இருந்தது!இன்று அந்த நேசத்திற்கு உரியவள் மாண்ட செய்தி செவியை அடைந்ததும்,உயிரை குடிக்கும் வலி இருதயம் தன்னில்!!!

"ஹாஸ்பிட்டல் போகலாம் வா!"

"நான் வரமாட்டேன்!"

"டேய்!ப்ளீஸ்!"

"எனக்கு அவளை அப்படி பார்க்கிற தைரியம் இல்லடா!நான் மனசளவுல ஒடுங்கிட்டேன்.பல வேதனைகள் அடுக்கடுக்காய் என்னை செயலிழக்க செய்தது!எனக்கு இதுக்கு மேலே சக்தி இல்லை!"-நொறுங்கி போன மனவேதனைகள் யாவும் பீறிட்டு வந்தன.

"ராகுல்!"-கண்ணீரோடு முன்நின்ற தாயை அதிர்ச்சியாக பார்த்தான் ராகுல்.

"என்னாசசும்மா?"

"ஸ்...ஸ்ரேயா!உன் அம்மா இறந்துட்டாங்கடா!"-இதழ்கள் சிந்திய இம்மொழிகள் அவன் இதயத்தின் வேர்வரை சென்று பாதித்தன.

"எ..என்ன?"-அவர் விவரத்தை கூறினார்.

என்ன செய்ய போகிறான்??வெறுப்பை ஈன்ற தாயவள் என்றாலும்,அவனையும் ஈன்றவளாயிற்றே!!!

கால்கள் தடுமாறின அவனுக்கு!!!

கண்கள் கண்ணீரை சேகரிக்க தொடங்கின.

பலத்த போராட்டம் முடிவில் தொடங்கியது!!

முன்பே கூறி இருந்தேன்.ஆற்றிய தர்மங்களுக்கு கர்மங்களை அவசியம் மனிதன் ஸ்வீகரிக்க வேண்டும்!!!செய்த பாவங்களுக்கு ஏற்ப நிந்தனையானது நியாயமாக வழங்கப்படும்!!!!

ஆனால்,சில சமயங்களில் அடுத்தவரின் தண்டனை நம்மையும் தண்டிக்கின்றது!!

விருப்பமே இல்லை என்றாலும் பிரியமானவர்களின் நிந்தனை நம்மையும் தண்டக்கும் சக்தி பெற்றது!!!

இக்கணம் இனி ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலையில் தவறிழைத்தவர்களை மன்னித்தருளுங்கள்!!!நீங்கள் அவர் மீது வைத்த சினமே அவர்களுக்கு சாபமாகலாம்!!!அச்சாபத்தின் மூலம் அவர்கள் தண்டனை பெற்றால் வலிகள் வியாபிப்பது நல்லோர்களின் இருதயத்தை மட்டுமே!!!

ஸ்ரேயாவின் உடலுக்கு இறுதி சடங்குகள் நிறைவேற்றப்பட்டன.

முதல்முறையாக தன் கர்வத்தை விட்டு,ஈன்றவளுக்காய் தந்தையோடு சேர்ந்து இறுதி சடங்குகளை செய்தான் ராகுல்.

அனைத்தும் பூர்த்தியானதும்,மனதை வேதனைகள் வியாபிக்க தனிமையில் நின்றிருந்தான் அவன்.

யாரையும் அவனோடு பேச அவன் அனுமதிக்கவில்லை.

சிந்தனைகள் விழிகளில் சூழ நின்றவனின் தோளை தொட்டது ஆறுதலான கரம் ஒன்று!!!

அது சதி!!!அவனது சதி!!

அவன் எவ்வளவு தான் வேதனைகளை அளித்திருந்தாலும்,அவன் வேதனைகளை பங்கிடவே அவள் மனம் துடித்தது.

அவன் திரும்பினான்.

"நடித்தது போதும்!மனசுவிட்டு அழுதுவிடுங்க!"-அவன் சிறிது மௌனம் காத்தான்.

கண்கள் கண்ணீரை திரட்ட,அதன் விளைவாக அவளை அணைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தான்.

இருவருக்கும் இடையேயான மனஸ்தாபங்கள் விலக,அவன் வேண்டிய ஆறுதலை தந்தாள் சதி!!!

இறுக்கமான பிடி!!!அவன் எவ்வளவு வேதனைக்கு உட்பட்டு இருந்தானோ!அந்த அளவிற்கு அவன் பிடி இறுகியது!!!

"இதை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை சதி!!!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.