(Reading time: 10 - 19 minutes)

"னசை தளரவிடாதீங்க!நீங்களே நொறுங்கிட்டா,அப்பாக்கு ஆறுதல் சொல்ல யாரும் இல்லை!"அவன் கேள்வியை பார்வையால் அவளிடத்தில் சேர்த்தான்.

"போதும்!இத்தனை வருஷம் நடந்தது எல்லாம் போதும்!எல்லாத்துக்கும் முடிவு இருக்கே!இந்த கஷ்டத்தை உங்க அன்பால் தான் நிவர்த்தி செய்ய முடியும்!மனசு இறங்கி வாங்க!ப்ளீஸ்!!"-அவளது ஆறுதல் மொழிகள் நிச்சயம் அவன் இதயத்தை தொட்டிருக்க வேண்டும்,அவன் மீண்டும் அவள் ஆறுதலை நாடி அவள் அணைப்பினுள் சேர்ந்தான்.

உலகில் தாய்க்கு பின் தாரம் என்பதன் காரணம் அறிவீர்களா??தாய்க்கு பின் ஒரு மனிதனின் இறுதிவரை துணை நிற்கிறாளே அதனால் அவள் தாரம் எனப்பட்டாளா??தாய் என்னும் சொல்லுக்கு தாங்குபவள் என்பது உத்தமமான பொருளாகும்!!பிறப்பினில் கடும்வலியினை தாங்க பிள்ளையின் புகழை ஆபரணமாய் சூடுகிறாள் மாதா!!

வளரும் போதும்,வாழ்ந்த பின்னும் தாய்க்கு குழந்தையின் மேல் பாசமானது குறைவதில்லை!!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்...

தாரம் ஏன் தாய்க்கு நிகராக்கப்பட்டாள்???திருமணத்திற்கு முன்புவரை வெவ்வேறாய் இருந்த இரு இதயங்கள் விவாஹத்தில் இணைகின்றன.சம்பந்தமே இல்லாத புதிய உறவை மதித்து பதியின் கரம் பற்றி,அக்கரத்தினை எந்நிலையிலும் தியாகிக்காது மரணத்திலும் அவன் மடி சேர விரும்பும் சதியே பத்தினி என்று அழைக்கப்படுகிறாள்.கருவை கிழித்து ஒரு தாய் அனுபவிக்கும் வலிக்கு நிகர் அகிலத்தில் இல்லை.ஆனால்,அவ்வலிக்கு அடுத்த ஸ்தானத்தை பெற்றது ஒருவனது வேதனையை அறிந்து ஒரு ஸ்திரியின் மனவேதனையாகும்!!அதன் மூலமாக அவள் சிந்தும் துளி கண்ணீர் போதும் அப்பந்தத்தை பறைசாற்றுவதற்கு!!!!

இரண்டு மாதங்கள் கழித்து....

"நான் டெல்லிக்கு கிளம்புறேன் ஆதி!"

"ரகு...ஏன்டா?"

"ஒண்ணுமில்லை....கொஞ்சம் ரிலாக்ஸ்சேஷன் தேவைப்படுது!"

"நீ எங்கேயும் போக வேண்டாம்!"

"எனக்கு எதுவும் ஆகாதுடா!இன்னும் எனக்கான தண்டனை நிறைய இருக்கு!அதை அனுபவிக்கணும்!அதுக்காகவே உயிரோட இருப்பேன்!"

"டேய் ஏன்டா இப்படி பேசுற?"

"நான் கிளம்புறேன்!"

"சரி..கிளம்பு!ஆனா,ராகுல்கிட்ட சொல்லிட்டு அவன் சம்மதத்தோட கிளம்பு!"

"என்ன பேச மாட்டோம்னு நம்பிக்கையா?அவனுக்கு தான் என் மேலே பகை!எனக்கில்லை!அது மட்டுமில்லை நான் விலகுறேன்னா சந்தோஷப்படுற முதல் நாள் என் பையனாக தான் இருப்பான்!"-என்று அவ்விடம் நீங்கினார்.

நேராக ராகுல் இருக்கும் இடத்திற்கு சென்றார்.மாடியில் நின்று எதையோ சிந்தித்துக்கொண்டிருந்தான் அவன்.

அவனருகே சென்றார்.அவன் விலகவோ,விலக்கவோ இல்லை!!

"ஊருக்கு கிளம்புறேன்!சொல்லிட்டு போக தான் வந்தேன்!"

"..........."

"உனக்கு தர கூடாத கஷ்டத்தை எல்லாம் தந்துட்டேன்!ஒரு அப்பாவா உனக்கு எதையும் செய்யலை!மன்னிச்சிடு!"-அவர் திரும்ப அவரை தடுத்து நிறுத்தியது உறுதியான அவன் கரம்!!!கேள்வியாக திரும்பியவரை கண்ணீரோடு அணைத்துக்கொண்டான் ரகுநந்தன்.

"என்னை மன்னிச்சிடுப்பா!"-'அப்பா!'இந்த வார்த்தைக்காக தானே இந்த வருட தவம்!!காத்திருந்த விடியல் தோன்றிவிட்டது.

திடீரென்று நிகழ்ந்த இம்மாற்றத்தைக் குறித்து அவர் அறியவில்லை.மாற்றம் நிகழ்ந்தது அதுவே அவருக்கு போதுமானதாக இருந்தது.

"நான் உனக்கு நிறைய கஷ்டம் கொடுத்துட்டேன் தானே!"

"ராகுல்..."-பேச வார்த்தை இன்றி தவித்துப்போனார் அவர்.

மெல்ல கருமேகத்தை கிழித்து சூரிய கதிர் மண்ணை அடைந்தது.

என்ன நடக்கிறது என்பதை காண மாடிக்கு வந்த சரண் நடந்ததை கண்டு திகைத்துப்போனார்.

"என்னங்க பண்றீங்க இங்கே?"

"உஷ்!சத்தம் போடாதே!"

"ஏன்?"

"அங்கே பார்!"-அவர் காட்டிய திசை திரும்பிய விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.

"இதுக்கு தானே அம்மூ இத்தனை வருஷம் காத்திருந்தோம்!"

"ம்..."

"நம்ம வேண்டுதல் வீண் பேகலை!"-இருவர் கண்களும் துளிர்த்தன.

"ஐ...அப்பாவும்,அண்ணனும் பேசிட்டாங்க!"-மாடியில் ஒரு அறையில் இருந்து வெளிப்பட்ட ஆர்யா கூவினான்.

ஆனந்தம் அந்த இல்லத்தில் மீண்டும் குடிக்கொண்டது.

"மா!சந்தோஷத்தை கொண்டாட ஸ்வீட் வேணும்!"

"கீழே வாங்க!செய்து தரேன்!"

-அனைவரும் சென்றப்பின்னும் ராகுல் நின்றிருந்தான்.அவன்முன் எதிர்ப்பட்டான் அர்ஜூன்.

"ஸாரிண்ணா!"-அவன் மொழிகளுக்கு விளக்கம் தெரியாமல் குழம்பியவனின் குழப்பத்தை தீர்த்தது அவன் கரத்தில் இருந்த அவன் டைரி!!!

"நீ உன் அப்பாவை மதிக்காம இருந்தீயேன்னு தான் எனக்கு கோபம்!!நானும் அப்படி தான் இருந்தேன்.ஆரம்பத்துல உன்னைவிட நான் மோசம் இல்லைன்னு தோணுச்சு!அன்னிக்கு இதை தவறுதலா ஹால்ல விட்டுட்டு போயிட்ட!இதை படித்ததும் தான் தெரியுது!நீதான் பெஸ்ட்!இனி என் அப்பாம்மாக்கு நல்ல மகனா இருக்க முயற்சி பண்றேன்!ஸாரிண்ணா!"-ராகுல் அவன் தோள் மீது கரத்தை போட்டுக்கொண்டு நடந்தான்.அவர்கள் சென்றதும் மறைவிலிருந்து வெளிப்பட்டாள் சதி!!!அளித்த வாக்கை நிறைவேற்றிய ஆனந்தம் அவள் இதயத்துள்!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.