(Reading time: 15 - 29 minutes)

20. என் மனதை தொட்டு போனவளே - VJ G

en manathai thottu ponavale

ம்மா, நம்ம vip யை பாருங்க பயந்து நிற்கிறான், எவ்வளவு அழகா பேசுவான் தெரியுமா, என்று அவன் சொன்னதை கேட்டுக் கொண்டே, என் பிள்ளையை இந்த சந்தோஷத்தில் பார்த்து எவ்வளவு வருஷம் ஆகிவிட்டது என்று தன் மகனை இழுத்து அனைத்து, அதை கொடுத்த நீ, என்று அவளை அனைத்து 'என்னம்மா இவ்வளவு இளைத்து விட்டாய், என்று கேட்டது தான், அவள் ஒ என்று கதறினாள், அவளை இழுத்து கற்பகம் அனைத்துக் கொண்டாள், என்னடா கண்ணம்மா, நாங்கலேல்லாம் இருக்கோம் உனக்கு,என்று கூறி தன் பேரனை அணைத்தாள், அவன் பயந்தான், ரூப், பாட்டிம்மா, கிவ் ஹேர் எ ஹக்,’ என்றாள் சித்ரா,

'மாம், யு பர்காட், என்று சொல்லி கற்பகத்தின் காலில் விழுந்தான், அவள் ஆசீர்வாதம் செய்து அவனை அனைத்துக் கொண்டாள்,வா தாத்தா உனக்காக காத்துக் கொண்டிருக்கிறார், என்று கற்பகம் சொன்னாள், அவளோடு, தாத்தாவின் ரூமுக்கு போனாள், தாத்தா என்று அவர் காலில் விழுந்தாள், அவர் காலிலேயே தன் தலையை வைத்து கதறினாள் , தாத்தா என்னை மன்னிச்சுடுங்க, உங்களுக்குநம்பிக்கைக்கு துரோகம் பண்ணிவிட்டேன், ப்ளீஸ் தாத்தா என்னை மன்னிச்சுடுங்க என்று கதறினாள், ருத்ராவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, அவன் வந்து அவள் பக்கத்தில் உட்கார்ந்து, போதும் கண்ணம்மா, நீதான் தனியா இருந்து கஷ்டப் பட்டிருக்கிறாய், அழாதே என்று சொல்லும்போதே அவன் கண்ணிலும் கண்ணீர், அதைப் பார்த்த ரூபெஷும் அழுதான், 'மாம் ஐ ஹவ் நெவெர் ஸீன் யு க்ரையிங், ப்ளீஸ் டோன்ட்,' என்று அவளை கட்டிக் கொண்டான், அதைப் பார்த்த தாத்தா, சின்ன ருத்ராவை பார்த்து அதிர்ச்சி ஆகிவிட்டார்

‘ரூபேஷ், இது எங்க தாத்தா, அப்பாவோட தாத்தா, காலில் விழுந்து ஆசிவாதம் வாங்கு,’ என்றாள்

அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது, ‘சித்ரா, என் கொள்ளுபேரனை பெற்று என் காலில் விழ வைத்து விட்டாய், நான் எவ்வளவு உனக்கு நன்றி சொல்வேன் தெரியவில்லையே,’ என்றார்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சகியின் "சதி என்று சரணடைந்தேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

‘என் பேரனை இவ்வளவு கஷ்டப் படுத்தி விட்டாயே கண்ணம்மா, என் செல்லம் தூங்கினது கம்மி தெரியுமா, எனக்கு தெரியும், இப்போ அவன் முகத்தைப் பாரு உன்னைக் கட்டிக் கொண்டிருக்கிற அழகைப் பார், என் செல்லமே வந்து இந்த கிழவனை பார்த்ததற்கு நன்றி,’ என்றார்

‘என்ன தாத்தா, இப்படியெல்லாம் பேசறீங்க, என் பாசம், உங்க யார் மேலேயும் குறைய வில்லை, உங்களை, இந்த என்னுடைய் குடும்பத்தை ரொம்பவே  மிஸ் பண்ணேன் நான்,’ என்று கூறி அழுதாள்

'மாம் ப்ளீஸ், ஐ டோன்ட் வான்ட் டு ஸீ யு லைக் திஸ்,’

'ஐ அம் ஹாப்பி ஸீயிங், எவரி ஒன் இயர்,’

'இப் யு ஆர் ஹாப்பி, ஒய் டூ யு க்ரை,'

'இல்லடா ரா ஜா உனக்கு புரியாது, இவர்கல்லேல்லாம் எனக்கு எவ்வளவு முக்கியம் என்று உனக்கு தெரியாது,’

‘இந்த தாத்தாவை கட்டிக் கொள், எனக்கும், அப்பாக்கும் இவர் தாத்தா’ என்றாள் பிள்ளையிடம்

'இவனுக்கு என்ன பேர் வச்சிருக்கே,’ என்று கேட்டார்

'பேர் சொல்லு'

'ரூபேஷ் நீலகண்டன்' என்றான் அவருடைய கொள்ளு பேரன்

‘சிவகாமி, பாரு எப்படி பேசறான் நம்ம கொள்ளு பேரன், நம்ம ருத்ரா மாதிரியே இருக்கான், பேசறான், உங்க அப்பாகூட இப்படித்தான் பேசுவான் அவன் சின்ன வயதில்,’

‘அது என்ன ரூபேஷ், என்று பேர்' என்று கேட்டார்,’ தாத்தா

'தாத்தா, நான் சொல்லட்டுமா,' என்று ரூபேஷ் கேட்டான்

'ம்ம், சொல்லுடா என் தங்கம்,'

அது வந்து தாத்தா, என் டாட் பேரு ருத்ரா, அந்த ரூ, அப்புறம் என் தாத்தா பேர் ஷிவேஷ் இல்ல மாம்,’ என்று அம்மாவைக் கேட்டான், அப்போது தான் ஷிவேஷும், கணேஷும் உள்ளே வந்தார்கள் அதை கேட்டுக் கொண்டே,

'அது ரெண்டும் சேர்ந்து ரூபேஷ், நீலகண்டன், என் கொள்ளு தாத்தா பேர், அப்பாவும் ருத்ரா நீலகண்டன், அதான் நானும் ரூபேஷ் நீலகண்டன், ஆனா அம்மா எப்பவும் என்னை ரூப்ன்னுதான் கூப்பிடுவாங்க யு நோ ஒய், எங்க அப்பா அவங்க அப்பா பேரை சொல்ல மாட்டாராம், அதான் அவங்களும் என்னை ரூப் ன்னு தான் கூப்பிடுவாங்க,' என்று எல்லாவற்றையும் சொல்லி முடித்தான் சிறுவன்,

‘ரூப், தாத்தா வந்திருக்கார் பார், அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொள்,' என்றாள்

'ஹல்லோ தாத்தா, ஹௌ ஆர் யு தாத்தா, நீங்கதான் என் டாடோட,டாட்  டா?' என்று கேட்டு அவர் காலில் விழுந்தான்,

‘அந்த தாத்தா காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கு என்று கணேஷை காட்டினாள்,’ அவருக்கும் அப்படியே செய்தான்,

'ஆமாண்டா என் தங்கம், என் மகனை மாதிரியே இருக்கியே,' என்று அவர்  உருகினார்,

'ருத்ரா, நீங்களும் அப்பா, அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குங்க,' என்றார் ஷிவேஷ்,

'இல்லை கொஞ்சம் இருப்பா, சிவகாமி!'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.