(Reading time: 15 - 29 minutes)

சித்ராவும், ரூப்பும் பேசாமல் சாப்பிட்டார்கள், ருத்ரா ஏதோ கேட்டான் அவளிடம் பதில் சொல்லாமல் தலையை ஆட்டி பதில் சொன்னாள், அவர்கள் சாப்பிட்டு முடித்து விட்டார்கள்,

நீ எழுந்துக்கோ, வா நான் கூட்டிக் கொண்டு போறேன்,' என்றார் கற்பகம்

'இல்லை பாட்டி டேபிள் மேனர்ஸ், எல்லாரும் எழுந்ததுக்கு பிறகுதான் எழுந்துக்கணும், ரைட் மாம்?' என்று கேட்டான்,

'எஸ், ரூப்,' என்றாள் சித்ரா

ஷிவேஷ் ரொம்ப பெருமையாக பார்த்தார் தன் மருமகளை, என்ன அருமையாக வளர்க்கிறாள்... இது எதுவும் குறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்,’ என்று நினைத்துக் கொண்டார்,

முதலில் தாத்தா எழுந்தார்,பிறகு ஒவ்வொருவராக எழுந்தனர், 'கேன் ஐ மாம்,' என்று கேட்டான் அம்மாவை

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

அவள் சிரித்துக் கொண்டே 'ம்,' என்று தலை ஆட்டினாள்,

ஏன் உன்னை கேட்கிறான், என்று கேட்டான் ருத்ரா

‘எப்பவும் நானும் அவனும் மட்டும்தான், இங்கு நிறைய பேர், அதான் அவனுக்கு குழப்பம் எழுந்துக்கலாமா, கூடாதா என்று,’ என்றாள் சிரித்துக் கொண்டே, ‘இருங்க நான் அவனைக் கவனித்து விட்டு வரேன்,'

'அப்போ நான்,' என்றான் ருத்ரா, 'சொன்னது ஞாபாகம் இருக்கா நீ சொன்னது, நான்தான் முதல் மகனென்று,' அவளுக்கு அப்படியே அவனை அனைத்துக் கொள்ள வேண்டும்போல் இருந்தது, வெட்கப் பட்டுக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள்,

ரூபெஷுக்கு ஒரு டவல் கொடுத்தாள், அவன் துடைத்துக் கொண்டான், மெதுவாக அவள் காதில் 'டூ மெனி பீபள்,' என்றான் சிறுவன்,

'உன் மேல் எவ்வளவு ஆசை பார்த்தியா, இத்தனை நாள் நானும் நீயும் தான் இப்போ பார் நம்ம மேல அன்பு காட்ட எவ்வளவு உறவுகள் பார்த்தியா, தே ஆல் லவ் யு ரூப்,'

'டோன்ட் யு லவ் தெம்,', 'எஸ் மாம் ஐ லவ் தெம் டூ,'

'குட் டாட் கிட்ட போய் உட்கார், ஹி லவ்ஸ் யு ஸோ மச்,'

'சரி மாம்,' என்று டாடி கிட்ட போய் உட்காந்தான்

'வா, இங்க உட்கார்ன்னு,' அவன் மடியைக் காட்டினான்,

'டாட், ஐ அம் எ பிக் பாய், எப்படி உங்க மடியில உட்கார முடியும்,'

'உனக்கு என்ன பிடிக்கும் ரூப் ‘என்று கேட்டான் ருத்ரா

'அதெல்லாம் ஒன்றுமில்லை டாட், எனக்கு எல்லாம் பிடிக்கும், இது வேண்டும், வேண்டாமென்று கிடையாது,'

'வெளியே போகலாம் வரியா, ஐ வில் டேக் யு அவுட்,' என்றான் ருத்ரா

'ஐ வான்ட் மாம் வித் அஸ், கேன் வி டேக் ஹேர்,'

'யு வோன்'ட் கோ வித் மி அலோன்,'

'மாம், கேன் ஐ கோ வித் டாட் அவுட்,'

'இதை ஏன் என்கிட்டே கேக்கிற கண்ணா, டாட் கூட்டா எங்கேவேன்னாலும் போ, ஆனா தொந்தரவு கொடுக்கக் கூடாது, நீ டாட் கிட்டே சொன்னியா, அம்மா கிட்டே கேக்கறேன்னு,'

'எஸ், நீ தானே சொன்னே யார் கூட்டாலும் போகக் கூடாது உன் கிட்டே கேட்டுட்டுதான் போகணும்னு, அப்புறம் யார் கொடுத்தாலும் வாங்கக் கூடாதுன்னு,' என்றான் மகன்

'நோ, தட்ஸ் பாட், டாடி, பாட் டா பீல் பண்ணுவாரு இல்ல, அப்படி சொல்லலாமா, ஸே, சாரி டு டாடி, அப்புறம் டாடி என்ன கேட்டாலும், சொன்னாலும் செய்யணும், அம்மா எப்படியோ அப்படித்தான் டாடியும் புரிஞ்சுதா, வென் டாடி சேஸ் சம்திங், நீ கேக்கணும், நான் சொன்னதெல்லாம் வேறு யாரோ வெளி ஆளுங்களுக்கு, என்று அவ ள் சொல்லிக் கொண்டிருந்த போது, அங்கு வந்தான் குமார், என்ன சொல்றாரு மாஸ்டர், என்று கேட்டான்,

'ஹலோ அங்கிள், ஹௌ ஆர் யு,' என்று கேட்டான் ரூபேஷ்

'வாவ், தட்'ஸ் நைஸ், எப்படிங்க இதெல்லாம் ஸ்கூல்ல சொல்லித்தராங்களா, பையனை இவ்வளவு அழகா வளர்த்திருக்கீங்க,' என்றான்

'தேங்க்ஸ் குமார் எப்படியிருக்கீங்க,' என்று கேட்டாள்

'எங்கே உங்க குழந்தையைக் கூப்பிட்டு வரலை,'

'இல்லைங்க ஸ்கூல் போயிருக்கா, நீங்க இங்கே தானே இருப்பீங்க, அப்புறம் கூப்பிட்டுட்டு  வரேன்,

'என்ன படிக்கிறா, என்ன பேர்,' என்று கேட்டாள்

'அவ பேர் வினிதா, அவள் ரெண்டாவது படிக்கிறா,' என்றான்

'அப்புறம் நீங்க எப்படி இருக்கீங்க, ரொம்ப வருஷம் ஆயிடுத்து, என்றான்

'நான், பரவாயில்லை, ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறது,'

'நான் சந்தோஷமாக இருக்கிறேன், மச்சானை இப்படி பார்க்கிறதுக்கு தான் காத்துக் கொண்டிருந்தேன், ஆனச்ட்லி சிஸ்டர், உங்களை என் சிஸ்டரா தான் நினைத்திருக்கிறேன், அதனால் நீங்கள் இப்போ உங்க குடும்பத்துடன் பாரெவர் ஹாப்பியா இருக்கணும்,'

'தேங்க்ஸ் குமார், இவ்வளவு பிராங்கா நீங்க பேசினது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு,'

அப்போது வித்யா வந்தாள்,'அண்ணி' என்று அவளைக் கட்டிக் கொண்டாள், அப்போ ருத்ராவும் வந்தான் அங்கே, சித்ராவிடம் வந்து அவள் தோளில் கையைப் போட்டுக் கொண்டு, 'என்ன பொண்டாட்டி எப்படியிருக்கே?' என்றான்

அவள் வெட்கத்தில் முகம் சிவந்தாள், ' என்னப்பா எல்லோரும் என் பொண்டாட்டிய கலாய்க்கிறீங்களா,' என்று கேட்டான்

ரூபேஷ், அம்மாவை ரொம்ப மிஸ் செய்தான், அவன் அம்மாவிடம் நெருங்கி நின்றான், அவன் தன் அம்மாவை புதிதாக பார்த்தான்,

Episode # 19

Episode # 21

தொடரும்

{kunena_discuss:958}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.