(Reading time: 20 - 39 minutes)

21. என் மனதை தொட்டு போனவளே - VJ G

en manathai thottu ponavale

'ம்மா யாரோடையும் இவாளவு க்ளோஸ் ஆக இருந்து அவன் பார்த்ததில்லை, அப்பாவுடன் இவ்வளவு க்ளோஸ் ஆக இருப்பது அவனுக்கு அதிசயமாக இருந்தது, அம்மா தன்னுடன் எப்பவும், ரொம்ப சிரித்துப் பேசியதில்லை, யாரிடமும் சிரித்துப் பேசியதில்லை,

‘என்ன ரூப், அம்மா கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டயா, வெளியே போகலாமா,' என்று கேட்டான் ருத்ரா,

'சாரி டாட், அம்மா சொன்னாங்க, அம்மா எப்படியோ அப்படித்தான் டாட்டும் அதனாலே நீ அவர் கூட்டா, அம்மாவை கேக்கறேன்னு சொல்லக் கூடாதுன்னாங்க, ப்ளீஸ், ஐ அம் சாரி, அப்படி சொன்னதுக்கு,' என்றான் சிறுவன்

அவன் சித்ராவை முறைத்தான், ' சித்து நீயும் வாயேன் எங்களுடன்,’ என்றான் ருத்ரா

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

' இல்லை, நீங்க போயிட்டு வாங்க, இட்ஸ், பாதர் அண்ட் சன்'ஸ் டே அவுட், என்ன ரூப்,'

அவன் நிமிர்ந்து தன் அப்பாவைப் பார்த்தான், ' எஸ் மாம்,'

'ஹவ் எ நைஸ் டைம்,' என்று சொன்னாள்

ருத்ராவிடம் திரும்பி என்ஜாய் வித் யுவர் சன்,' என்றாள்

ரெண்டு பேரும் கடைக்கு போனார்கள் அவனுக்கு வித விதமாக டிரஸ் எடுத்தான் அவன் வெண்டாமென்றதைக் கேட்காமல் அவன் நிறைய வாங்கினான்,

‘அம்மா சொல்லியிருக்காங்க, நிறைய டிரஸ் எல்லாம் வாங்கக் கூடாது என்று, அதனால் ரொம்ப வேண்டாம் ஜஸ்ட் ரெண்டு போரும்,’ என்று சொன்னான்

‘சரி,’ என்று அவனுக்கு ஒரு மூன்று டிரஸ் எடுத்தான் பட் எல்லாம் நல்ல விலை உயர்ந்ததை எடுத்தான்

'டாடி அம்மா இவ்வளவு காஸ்ட்லி டிரஸ் எடுக்க மாட்டாங்க,' என்றான்

'கண்ணா ஐ அம் யுவர் டாட், என் கண்ணுக் குட்டிக்கு அழகான டிரஸ் போட்டு பார்க்கணும்னு அப்பாக்கு ஆசை இருக்கு, அது மட்டுமில்லை, ஆண் பிள்ளைகள் டிரஸ் அப்பாவுக்குத் தெரியுமில்லையா, அதான் நான் வாங்கறேன், சொல்லு உனக்கு எது பிடிச்சிருக்கு,' என்று அங்கிருந்ததை காண்பித்தான், அவன் காண்பித்த டிரஸ்லாம் பாக் பண்ணச் சொன்னான்,

'உனக்கு சைக்கிள் ஓட்ட தெரியுமா,' என்று கேட்டான்

'இல்லை, டாட் எனக்குத் தெரியாது, என் ப்ரண்ட் ஹரி, சைக்கிள்லதான், வருவான், அவன் எனக்கு சொல்லித் தரேன்னு சொன்னான் நான் தான் அம்மா திட்டுவாங்க வேண்டாம் என்றேன்’

அங்கிருந்து நேரே ஒரு சைக்கிள் ஷாப்புக்கு போனான், ஒரு சைக்கிள் ஒன்று ஆர்டர் கொடுத்தான், அதை வீட்டில் டெலிவர் செய்யச் சொன்னான்,அங்கிருந்து கிளம்பி உனக்கு வேறு என்ன வேணும் ராஜா,'

'ஒன்னும் வேண்டாம் டாடி, இதுவே அம்மா திட்டுவாங்க,'

'இல்லடா, திட்ட மாட்டா, நான் அப்பா வாங்கறேனில்ல திட்ட மாட்டா, அதனாலே சொல்லு, உனக்கு இன்னும் வேற  என்ன வேண்டும்?'

'ஒன்னும் வேண்டாம் டாடி, ஏன் டாடி, அம்மா உங்க வீட்டிலே இருக்காங்க, நாம அங்கே போவோமா,'

'ரூப், நீ என் மகன்டா, ஐ  நோ, யு ஆர் வெறி ஸ்மார்ட், என்ன சொன்னாலும் இந்த வயசுலேயே புரிந்துக் கொள்ளக் கூடியவன், என்று எனக்குத் தெரியும், அதனால் நான் சொல்லுவதைக் கேட்கணும், புரிஞ்சுக்கணும், அம்மாவும், அப்பாவும் சரி சமம்…..’

'இரண்டு பேரில் யார் வேண்ணா உனக்கு என்ன வேண்ணா வாங்கித்தரலாம், நீயும் அம்மாவும் இருக்க வேண்டிய வீடுதான் இது, இப்போ என் வீடுன்னு சொன்னியே, அது நம் வீடு, அதனால் அம்மா அங்கே தனியா இல்லை, உன் பாட்டி, தாத்தா, கொள்ளு தாத்தா, பாட்டி, எல்லோரும் இருக்காங்க, சான் பிள்ளையானாலும் ஆண் பிள்ளைன்னு, நீ ரொம்ப பொருப்போட உங்க அம்மாவை, என் மனைவியைப், பார்த்துகிறது, எனக்கு பெருமையா இருக்கிறது, நீயும் உன் அம்மாவும் தனியாக இருந்ததால், உனக்கு இன்னும் உறவை பற்றி தெரியவில்லை, இப்போ வந்து விட்டாய் இல்லையா, போகப் போக எல்லாம் புரியும், உனக்கு உன் அம்மா மேல், எவ்வளவு பொறுப்பும் பாசமும், இருக்கோ அதே போல், எனக்கு, உங்கம்மா, என் சித்து மேலேயும், என் மகன், உன் மேலேயும் அதே பொறுப்பும், பாசமும், இருக்கு, இன்னும் இந்த டாடி, அம்மாவைப் போல எவ்வளவு முக்கியம்னு உனக்குப் புரியும், லெட்'ஸ் பி பிரண்ட்ஸ், என்ன சொல்றே, ஸோ, என்கிட்டே ப்ரீயா பேசு, எல்லாம் டிஸ்கஸ் பண்ணலாம், நான் உன்னுடைய அப்பா, நீ எந்த அளவுக்கு, உன் அம்மாவிடம், உரிமையும் பாசமும் வைத்திருக்கிறாயோ அதே போல் என்னிடமும் இருக்கலாம், என்ன ஓகே வா,' என்று நிதானமாக தன் மகனுக்கு எடுத்துச் சொன்னான்

பேசிக் கொண்டே வீட்டுக் கிட்டே போனார்கள், 'ஹாய், ஐஸ்க்ரீம், சாப்பிடறியா?’ என்று கேட்டான் ருத்ரா தன் மகனிடம்

'இல்லை டாட், வேண்டாம்,' என்றான்

'ஏண்டா கண்ணா, உனக்கு பிடிக்காதா,'

'இல்லை டாடி, நான் சாப்பிட்டதே இல்லை, அம்மா கிட்டே கேக்கமாட்டேன்,'

'ம்ம்,' என்றான், ' சரி வா லெட்'ஸ் டேஸ்ட் இட், கம்,' என்று கூப்பிட்டு கொண்டு போனான்

'டாட் இப் யு டோன்'ட் மைண்ட், மாம் கிட்டே போன் பண்ணி கேக்கறீங்களா நான் ஐஸ் க்ரீம் சாப்பிடலாமா என்று,' என்றான் மகன்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.