(Reading time: 20 - 39 minutes)

'ன்ன ஆச்சு, இன்னுமா ரெடியாகல,' என்று உள்ளே வந்தான், அவன் கொஞ்சம் முன்னாடியே வந்தான் அம்மா, மகன் பேச்சில் நடுவில் போக வேண்டாம் திரும்பி போகலாம், என்றுதான் நினைத்தான், பிறகு இது தன் பாமிலி தானே வெயிட் பண்ணிவிட்டு பிறகு போகலாமென்று நினைத்தான், ஆனால் அவர்கள் முடிக்கிறா மாதிரி இல்லை அதான் உள்ளே வந்து விட்டான்,

'ரூப் ஆர் யு ரெடி, ஷால் வி கோ டு பீச், ஐ'ல் டெல் யு  எ ஸ்டோரி அபௌட் மீ அண்ட் யுவர் மாம், கம் லெட்'ஸ் கோ,'

‘மாம் யு ஹவ் எ ஸ்டோரி, யு டிட் நாட் டெல் மீ,' அவள் சிரித்துக் கொண்டே நகர்ந்தாள், அவள் கையை இழுத்து, இந்தா போன் பேசிண்டே வா,' என்று தன் போனைக் கொடுத்து ‘வா ரூப் போகலாம்,' என்று அவனைக் கூப்பிட்டு கொண்டு போனான்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல், நகைச்சுவை கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

கீழே இறங்கிப் போனவுடன், அம்மா கற்பகம் வந்தாள், 'என்னம்மா விது, வணி போயிட்டாங்களா என்று கேட்டு நாங்கள் பீச்சுக்கு போயிட்டு வந்துடறோம், அப்படியே வெளியே சாப்பிடறோம்,' என்றான்

அதற்குள், சித்ரா, 'இல்லை நாம் வீட்டிலேயே சாப்பிடலாம், எனக்கு வீட்டிலே தான் சாப்பாடு வேண்டும், நம் வீட்டு சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப வருஷம் ஆயிடுத்து,’ என்று சொன்னாள்

'சரிம்மா சாப்பிட வந்துடறோம், என்றான், 'தாத்தா கிட்டே சொல்லிடும்மா, நாங்க வரோம்,' என்றான்

'ரூப், பாட்டிம்மா கிட்டே போயிட்டு வரேன்னு சொல்லு,' என்றாள்

'பாட்டிம்மா போயிட்டு வரோம்' என்று சொன்னான்

'சரி கண்ணா போயிட்டு வாங்க,' என்று சந்தோஷத்துடன் சொன்னாள்

அவர்கள் குடும்பத்துடன் போவதை சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்

ஷிவேஷ் வந்தார், ‘என்ன ரொம்ப சந்தோஷத்துடன் இருக்கிறாய்,' என்று கேட்டார்

'எல்லாம், நம் மகன் தான், அவன் குடும்பத்துடன் போவதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது, இத்தனை நாளாய், சித்ரா கிடைத்தால், நம் மகன் கல்யாணம் பண்ணிக் கொள்வான், பிறகு குடும்பம் என்று நினைத்தோம், ஆனால் இப்போதோ அவன் குடும்பத்தோடு போகிறான் வெளியே, ரொம்ப சந்தோஷமாக இருக்கு,’ என்றாள் சந்தோஷத்தோடு

சிவேஷும் அதே சொன்னார், ‘என்ன அருமையா வளர்திக்கிறாள் நம் மருமகள், நம் பேரனை பார்க்க எனக்கு எத்தனை பெருமையா இருக்கு தெரியுமா,' என்று சொல்லிக் கொண்டிருந்தார்,

காரில் ஏறியவுடன், ரூப்பை பின்னாடி உட்கார வைத்து, அதற்கு பின் ,சிதராவை முன்னாடி உட்கார வைத்தான், தான் தன் டிரைவர் சீட்டில் உட்கார்ந்தான்  

சித்ராவின் கையை எடுத்து முத்தமிட்டான், காரைக் கிளப்பினான், 'ரூப் நாம இப்ப பீச்சுக்கு போறோம், நீ பார்த்ததில்லை இல்லையா, நானும் அம்மாவும், டெய்லி பீச்சுக்கு போவோம், அங்கே கொஞ்ச நேரம் பேசுவோம், பேசிவிட்டு பிறகு நாங்க அவங்கவங்க வீட்டுக்குப் போவோம்,’ என்று சொன்னான்

‘என்னங்க நீங்க, சின்ன பையன் கிட்ட போய்,' என்றாள் சித்ரா

‘அவன் நம்ம பையண்டி, அதனாலே அவன் நம்ம லவ்வை, தெரிஞ்சுக்கணும்,’ என்றான் ருத்ரா

‘நீ உன் ஹோட்டலுக்கு கால் பண்ணியா,'

'இதோ பண்றேன்,' அவள் போன் செய்தாள், தன் ஹோட்டலுக்கு,’

அங்கே சரோஜ் போனை எடுத்தாள், பிறகு கன்னடத்தில்தான் விஷயம் பேசினாள், இந்த போன் நம்பர் ருத்ராவிடம் கேட்டு சரோஜிடம் சொன்னாள்,

‘இதை ரகவேந்தரிடமும் கொடுத்து விடு, சரோஜ் ரொம்ப தேங்க்ஸ் எனக்கு வந்து ஹெல்ப் பண்றதுக்கு,’என்று சொல்லி போனை ஆப் செய்து போனை அவனிடம் கொடுத்தாள், 'தேங்க்ஸ், சரோஜ் வந்திருக்கிறாள், ராகவேந்தர் ப்ரீயா இருப்பான், இல்லை காஷ்ஷில இருந்தா கிட்சென் சுபெர்வைசிங் கஷ்டமா இருக்கும், இப்போ பரவாயில்லை, சரோ வந்துட்டா,' என்றாள்

'இந்த சரோஜ் ரொம்ப க்ளோஸ் பிரண்டா, சித்து,'

'ஆமாங்க, என்னைவிட மூன்று வயது பெரியவள், எங்களோட டிபன் கடையில் வேலை செய்தவள், பிறகு கல்யாணமாகி போய்விட்டாள், நம்ம ரூப் பொறந்தவுடன் அவள் தான் கூட இருந்து டிபன் கடையில் ஹெல்ப் செய்தாள், ரூப்பையும் கடையிலேயே வைத்துக் கொண்டு நானும் அவளும் ரெண்டு பேருமே அவனையும் பார்த்துக் கொண்டு கடையையும் பார்த்துக் கொண்டோம், அதற்கு பிறகு அவளுக்கு கல்யாணம் என்று அவள் விட்டு போய்விட்டாள், எப்பவாவது எனக்கு ஹெல்ப் வேணும்னா கூப்பிடுவேன், அவள் முடிந்தால் வந்து ஹெல்ப் பண்ணுவாள், அவளுக்கு அம்மா கூடவே இருக்காங்க, அதனாலே எப்போ நான் கூட்டாலும் வந்து ஹெல்ப் பண்ணுவாள்,' என்று அவள் கூறி முடித்தாள்,

பீச் கிட்டே வந்து விட்டார்கள் 'ரூப் பாரு பீச் கிட்டே வந்து விட்டோம்,' என்று ருத்ரா, ரூபேஷிடம்  சொன்னான்,

ரூபேஷ் எட்டி பார்த்தான், 'வாவ்! டாட், இட்'ஸ் பியுடிபுல், ரொம்ப நல்லாயிருக்கு, மாம், நாம பாத்ததேயில்லை இல்லம்மா,'என்றான்

அவளும் 'ஆமாம் கண்ணா, பார்த்ததேயில்லை,' என்றாள், ருத்ரா, அவளை நிமிர்ந்து பார்த்தான், அவள், அவனுக்கு ஜாடைக் காட்டினாள், அவன் லேசாக சிரித்துக் கொண்டு திரும்பினான், பார்க்கிங் இடம் பார்த்து காரை பார்க் செய்து, சித்ராவுக்கு கார் கதவை திறந்து விட்டான், அவள் இறங்கிய உடன் தன் மகனுக்காகக் கதவை திறந்தான், பிறகு ரெண்டு போரையும், ரெண்டு கையால் பிடித்துக் கொண்டு, நடந்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.