(Reading time: 20 - 39 minutes)

'கால் பண்ணான், வீட்டில கற்பகம் எடுத்தாள், ‘சித்ராவைக் கூப்பிடும்மா,’ என்றான், சித்ரா வந்தாள் ' என்னங்க,’

‘உன் மகன் எல்லாத்துக்கும் அம்மா அம்மா என்கிறான், அவனுக்கு ஐஸ் கிரீம் வாங்கிக் கொடுக்கவா, அம்மா சரி என்று சொன்னாதான் சாப்பிடுவானாம், நீ அவனிடமே அதை சொல்லு,' என்று போனை மகனிடம் கொடுத்தான்

'ரூப், நான் போகும் போது என்ன சொன்னேன்,டாட் என்ன சொல்கிறாரோ கேள் என்று சொன்னேனா, அம்மாவோட அப்பாதான் முக்கியம் எல்லா டிசிஷன்னுக்கும், புரிஞ்சுதா, எல்லாத்துக்கும் அம்மான்னா, டாட் மனசு கஷ்டப் படும், ஐஸ்க்ரீம் சாப்பிட்டுவா,'

'நீ ஏன் எங்க கூட வரலை மாம், டாட் சைக்கிள், டிரஸ்ஸஸ் நிறைய வாங்கி இருக்காங்க, நான் சொன்னா கேக்கலை,'

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... - 

புவனேஸ்வரியின் "தமிழுக்கு புகழென்று பேர்..." - நட்பும் காதலும் கலந்த தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

'ஸோ வாட் ரூப், ஹி இஸ் யுவர் டாட், ஆசைப் பட்டு வாங்கினா வாங்கிக்க வேண்டியது தானே, வாட்'ஸ் யுவர் ப்ராப்லம்,'என்றாள் கொஞ்சம் கடுமையாக

'மாம், ஆர் யு ஆங்ரி, இஸ் சம்திங் பாதரிங் யு, நீ எப்பவுமே என்கிட்டே இவ்வளவு கோபமா பேசியதில்லை, இங்கே வந்து நீ மாறிட்டே, ஐ மிஸ் யு மாம், ஐ வான்ட் யு,'

'ஓ மை காட், கேன் யு கிவ் தி போன் டு யுவர் டாட்,' அவன் போனை ருத்ராவிடம் கொடுத்தான், போனை வாங்கிய ருத்ரா,

'சித்து, நீ ரெடியா இரு நாம் பீச்சுக்கு போகலாம் ரூப்போட, ஓகே நானும் அவனும் இப்போ வரோம்,' என்று போனை வைத்தான்

'நேரே வீட்டுக்கு வந்தான், ரெண்டு பேரும் உள்ளே போனார்கள், ரூபேஷ், சித்ராவை தேடி கொண்டு போனான், அவளை பார்த்தவுடம் 'மாம்,' என்று ஓடிப் போய் கட்டிக் கொண்டான்

அவளும் அவனைக் கட்டிக் கொண்டு 'இட்'ஸ் ஓகே, ஐ அம் ரியல்லி சாரி, உன்னை  ஒன்றும் சொல்லவில்லை, வி நீட் டு டாக், கேன்வி?' ரூபேஷ் சரி தலை ஆட்டினான், வா, குளித்து டிரஸ் மாத்திண்டு வா, நாம் பீச்சுக்கு போகலாம்,அப்பாவோட…..' என்றாள்,

ருத்ரா, 'சித்து நம் ரூப்புக்கு வித்யா ரூமைக் கொடு,’ என்றான்

சரி என்று தலை ஆட்டிக் கொண்டு தன் மகனுடன் போனாள், அவனும், அவன் ரூமுக்குப் போனான், அவன் குளியலறைக்குப் போய் குளித்து டிரஸ் மாற்றிக் கொண்டிருந்தான், சித்ரா அவன் ரூமுக்கு வந்தாள், ‘சாரிங்க, இவன் இப்படி எப்பவுமே பிஹெவ் பண்ண மாட்டான், எனக்கே ஆச்சர்யமாக இருக்கு,'

அவன் பட்டனை எல்லாம் போட்டுக் கொண்டு, அவளிடம் வந்து அவள் தோள்களை திருப்பி, அவளிடம் சிரித்துக் கொண்டே, 'ஒன்றுமில்லை, இத்தனை வருடம், நீங்கள் உங்கள் சின்ன உலகத்தில் நீங்கள் இருவரும் மட்டுமே, நீ எப்போதும் அவன் அருகில் அவனுக்காக, அவன் உனக்காக, உன்னை மட்டுமே உறவாக, நீயும் அப்படியே அவனை வளர்த்து விட்டாய், இப்போது நான் உன்னை பங்கு போட்டுக் கொள்கிறேன் என்று அவன் மனதில் தோன்றிவிட்டது கொஞ்சம் ஜெலஸ், நீ அவனை கேர் பண்ணமாட்டாய் என்று அவன் நினைக்கிறான், இன்னும் கொஞ்ச நாள் ஆகும் கண்ணம்மா, வி ஹவ் டு வெயிட்,'

'அவனை தப்பா நினைக்க மாட்டீங்களே, என்னையும் தான்,’ என்றாள்,

'என்ன பயித்தியம் மாதிரி பேசறே, அவன் யார், என் மகன், என் ரத்தம், எனக்கு எப்படி கோபம் வரும், நீ யார் என் சித்து, உன் மேல் எனக்கு ஏண்டா கோபம் வரப் போகிறது, அது சரி உன்னிடம் செல் போன் இருக்கிறதா,' என்று கேட்டான்  

அவள் 'இல்லை' என்றாள், 'அப்போ சரி ஒன்னு வாங்கிடுவோம், இந்தா இந்த போனிலிருந்து, உன் ஹோட்டலுக்கு போன் பண்ணி எப்படி போயிண்டிருக்கு என்று கேள்,' என்றான்

'ஏன் செல் போன் வைத்துக் கொள்ளவில்லை,' என்று கேட்டான்

'அவசியமில்லை அதான் வைத்துக் கொள்ளவில்லை, சரி நான் போய் ரூப் என்ன பண்ணறான்னு பார்த்துட்டு வரேன்,' என்று அங்கிருந்து சென்றாள்

'மாம், எங்கே போயிருந்த உனக்காக வெயிட் பண்றேன், நீ எங்கே போனே,' 'இங்கதான் அப்பா ரூமில இருந்தேன், வா போகலாம்,'

'மாம், உனக்கு என் மேல் கோபமா, நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் மாம்,' என்றான் அவளைக் கட்டிக் கொண்டு

'யு நோ வாட், மத்த பிரண்ட்ஸ் எல்லாம் டாடின்னு  சொல்றாங்க, என் டாடி எப்போ வருவார், என்று நீ கேட்டுண்டே இருந்தே இப்போ வந்தவுடன், நீ ஏன் அம்மா அம்மா என்று வரே, டாடி எவ்வளவு நல்ல ஆள் தெரியுமா, ஹி இஸ் எ வொண்டெர்புல் மான்,  நீ ரொம்ப புண்ணியம் செய்திருக்கிறாய், உங்க அப்பாக்கு பிள்ளையாய் பிறந்திருக்கிறாய்,எனக்கு அவர் புருஷன்றத தாண்டி எனக்கு அவர் என் உயிர், எங்க இருவருக்கும் நீ உயிர், அவருக்கு நாம் இருவரும் உயிர், இதை நீ புரிந்துக் கொள்ளனும், அவரிடம் நீ, அம்மா எவ்வளவு முக்கியம் மிஸ் பண்றேன்னு சொல்றியோ அதே மாதிரி அப்பாவிடமும் லவ், பாசத்தோடு இருக்கணும் அதுதான் நீ அம்மாவுக்கு கொடுக்கற மரியாதை, யு அண்டர்ஸ்டான்ட் மீ, டாடி எனக்கும் உனக்கும் முக்கியம், வி ஆர் பாமிலி, உனக்கு இந்த பாமிலி வேண்டுமா வேண்டாமா, வில் யு லவ் ஹிம் ஆர் நாட்,'

'மாம் ஐ லைக் ஹிம், பட் ஐ வான்ட் யு வென் வி கோ அவுட், வி வில் கோ டுகெதர், ஐ மிஸ் யு மாம், டாடி இஸ் நியூ டு மீ, ஸோ கிவ் மீ சம் டைம், ப்ளீஸ்'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.