(Reading time: 20 - 39 minutes)

'ன்னங்க இது, நான் என்ன சின்னக் குழந்தையா, என் கையை பிடித்து,’ என்றாள்

'நீங்க ரெண்டு பேருமே என் ரெண்டு கண்கள், என் லவ் அதான் ரெண்டு பேரையும் இப்படி,’ என்று அவன் சொல்லவும் அவள் கண்கள் கலங்கின, அவன், அவள் கையை எடுத்து தன் வாயில் வைத்து முத்தம் கொடுத்தாள், அவன் அவளை நிமிர்ந்து பார்த்து, கையை எடுத்து அவள் தோளில் போட்டு அவளை தன்னோடு அனைத்துக் கொண்டான், ரூபெஷுக்கு தன் அம்மாவே புதிதாக தெரிந்தாள்,

அவனையும் கூட்டிக் கொண்டு அலைக்கு போனார்கள், 'வாவ் டாட், சுப்பர் வேவ்ஸ், ரொம்ப நல்லா இருக்கு, என்றான் ரூபேஷ், 'ம் பீல் லைக் ஸ்விம்மிங், என்றான், ருத்ரா, சித்ராவிடம் திரும்பி ' சித்து நாளைக்கு நம் மகனையும் கூட்டிக் கொண்டு, மகாபலிபுரம் போகலாமா? அங்கே ரேசார்டில் ஒரு நாள் இருந்துவிட்டு வரலாமா?’ என்று கேட்டான்

அவளும் அவன் ஆசையைக் கெடுக்கக் கூடாது என்று 'சரி போகலாம்,' என்றாள்,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

அவன் அப்போதே மகாபலிபுரம் பீச் ஹோட்டலுக்கு கால் செய்து ஒரு சூட் புக் செய்தான்,' போகும்போது அவனுக்கு ஒரு ஸ்விம் டிரஸ் வாங்கிக் கொண்டு போகலாம்,' என்று கூறி,

'வா ரூப், நாளைக்கு வேறு பீச்சுக்கு போகலாம் அங்கே நீ ஸ்விம் பண்ணலாம் வா,’ என்று கூறி அவனை கூட்டிக் கொண்டு கடைக்குப் போய் ஸ்விம் டிரஸ் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்கள், கற்பகம் காத்துக் கொண்டிருந்தாள், தன் மகன் குடும்பத்தை பார்த்தவுடன் எழுந்து வந்து,'குழந்தைக்கு பசிக்குமே இன்னும் வரலியே என்று நினைத்திருந்தேன், பசிக்குதாடா கண்ணா,' என்று கேட்டாள்

'யா, பாட்டிம்மா,’ என்றான்,

'ரூப் பெரியவங்களோட பேசும்போது, தமிழ்லதான் பேசணும், இங்க்லீஷ் பேசக் கூடாது,'

'சரி மாம்,' ' சரி நீ போய் குளிசுட்டு வா, நாம் சாப்பிடலாம்,’

அவளும் ரூமுக்குப் போய் குளிக்க ரெடி ஆனாள், ருத்ராவும் வந்தான் அங்கே, சரி நீங்க ரெடி ஆகுங்க நான் அப்புறம் குளிக்கிறேன் என்றாள், அவன் அவளை இழுத்து வா ரெண்டு பெரும் ஒண்ணா குளிக்கலாம்,' 'இல்லை வேண்டாம், நான் ரூப் வரச்சே அங்கே இருக்கணும் என்றாள் வெட்கப் பட்டுக் கொண்டே, போகலாம், குளிச்சுட்டு நீயும் நானும் ரெண்டு பேரும்,’

‘ஒன்றாவே போவோம் வா, நீ சொல்லியிருக்கே நான் தான் உன் முதல் மகன் என்று அப்போ நான் கேட்பதை செய்ய மாட்டாயா, ப்ளீஸ் வா,’ என்று அவளைக் கூட்டிக் கொண்டு போய், ஷவரில் இரண்டு பேரும் குளித்தார்கள், வேகமாக குளித்து வெளியே வந்தாள், அவனும் அவள் பின்னாடியே வந்தான், அவளுக்காக அவன் வாங்கி கொடுத்த புடவையைக் கொடுத்தான், இதைக் கட்டிக் கொண்டு வா, அவளும் அதை வாங்கி கட்டிக் கொண்டு, இருவரும் வெளியே வந்தார்கள், அப்போது, ரூபெஷும் வெளியே வந்தான், 'ஹை மாம் அண்ட் டாட், '

'ஹாய் ரூப்,' என்று இருவரும் கோரஸ்ஸாக சொன்னார்கள்

மூவரும் இறங்கி வரும் அழகை பார்த்துக் கொண்டு நின்றாள் கற்பகம், அப்போது சிவேஷும், நீலகண்டன் சிவகாமியும் வந்தார்கள், அவர்களும் இந்த மூவரையும் பார்த்து அவர்கள் அழகை ரசித்தார்கள், அவர்கள் இறங்கி வந்ததும், எல்லோரும் டைனிங் டேபிளில் உட்கார்ந்தார்கள், 'நீங்கள் யாரும் சாப்பிடவில்லையா,' என்று கேட்டான் ருத்ரா,

'இல்லைப்பா, நீங்கள் இல்லாமல், இந்த வீட்டு ராஜா, ரூபேஷ் இல்லாமல் நாங்கள் எப்படி சாப்பிடுவோம்,'என்றார் தாத்தா,

'தாத்தா, கொஞ்சம் வெயிட் பண்ண முடியுமா, நான் பூஜை செய்து விட்டு வறேன்’ என்று அம்மாவைப் பார்த்தான் ‘மறந்துட்டியா மாம்,’ என்று கேட்டான், அவளும், எழுந்து 'சாரி ரூப்,' என்று அவனுடன் போனாள், அவர்களுடன், ருத்ராவும் போனான்,

அவர்கள் பூஜை ரூமில் உட்கார்ந்து சில ஸ்லோகங்களை சொல்லிவிட்டு, நமஸ்காரம் செய்துவிட்டு, அம்மாவும் மகனும் மெதுவாக ஏதோ பேசினார்கள் பிறகு தியானத்தில் உட்கார்ந்தார்கள், ஒரு பத்து நிமிஷத்திற்கு பிறகு, எழுந்து வந்தார்கள்

'சாரி தாத்தா, இது ரெகுலரா, அவனும் நானும் செய்வோம், ஒரு நாள் விட்டால், அந்த பழக்கம் விட்டுப் போய்விடும் அதான்,'என்றாள் சித்ரா

'என்னப் பொண்ணம்மா நீ, நாங்கள் பிரமித்துக் கொண்டிருக்கிறோம், எப்படி, இவ்வளவு அருமையா உன் மகனை வளர்த்து நீயும் எப்படியெல்லாம் அவனுடன் கூடவே எல்லாம் செய்துக் கொண்டிருக்கிறாய், இதெல்லாம் எங்களுக்கு தோனவேயில்லியே, இதை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுகொடுக்காதே,' என்று சொல்லி தட்டை பார்த்தார்கள்,

ரூபெஷும், சித்ராவும்,திரும்பவும் ப்ரே பண்ணார்கள், எல்லோரும் அவர்கள் ப்ரே பண்ணும்வரை கண்களை மூடிக்கொண்டு இருந்தார்கள், அவர்கள் முடித்தவுடன் எல்லோரும் சாப்பிட்டார்கள்,

அப்போது தாத்தா கேட்டார், ‘ஏம்மா சித்ரா, நீ பெங்களுரிலே என்ன பண்ணிடிருந்தே,' அவள் பதில் சொல்ல நிமிர்ந்தாள், அப்போது ரூபேஷ், நிமிர்ந்து பார்த்து சித்ராவிற்கு, ஜாடை காட்டினான், அப்போது ருத்ராதான் சொன்னான் ‘தாத்தா சாப்பிடும் போது பேசக் கூடாது, அதனால் சாப்பிட்டு விட்டு பதில் சொல்லுவாள்,' என்று முடித்தான் ருத்ரா, தாத்தா சிரித்துக் கொண்டே “சரி” என்று தலை ஆட்டினார், ருத்ராவுக்கு கண்களாலேயே நன்றி சொன்னாள், அவனும் சிரித்துக் கொண்டே தலை ஆட்டினான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.