(Reading time: 20 - 39 minutes)

ல்லோருமே அதைக் கடைப் பிடித்தனர், யாரும் ஒன்றும் பேசாமல் சாப்பிட்டனர், எல்லோரும் சாப்பிடும் முன்னரே சித்ராவும், ரூபேஷும் சாப்பிட்டு விட்டார்கள், இவர்கள் முடிப்பதுக்காக வெயிட் செய்தார்கள், அப்போது, கற்பகம் கேட்டார்,'என்ன நீ சித்ரா, நீயும், கண்ணாவும் இப்படி கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடறீங்க, அதான் சீக்கிரமா, சாப்பிட்டு முடித்து உட்கார்ந்திருக்கிறீர்கள்,' என்று சொன்னார்,

'பாட்டிம்மா கொஞ்சமாதான் சாப்பிடனும், ஆனா ஹெல்தியா, சாப்பிடனும், அம்மா ஹோட்டல்ல கூட அப்படித்தான், ஹெல்தி புட் தான், தெரியுமா, அதான் நாங்க கொஞ்சமா சாப்பிடறோம், நிறைய சாப்பிட்டால் ரொம்ப குண்டாகிடுவோம், அதான்,' என்றான்,

'ஹோட்டலா அது என்ன,' என்று கேட்டார் தாத்தா,  

'அது பத்தி அப்புறம் பேசாலாம் தாத்தா, இப்ப சாப்பிடுங்க, நானே அதைப் பத்தி சொல்லனும்னு இருந்தேன், டைம் கிடைக்கலை,’ 'சரி', என்றார் தாத்தா

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

தங்கமணி சுவாமினாதனின் "கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது..." - பெரியவர்களுக்கான மந்திர, மாயாஜாலங்கள் நிறைந்த வரலாற்று கதை...

படிக்க தவறாதீர்கள்...

எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும், ‘சித்ரா நீ ருப்பை கூட்டிக் கொண்டு போ அவன் ரூமுக்கு, அவன் தூங்கியவுடன் வா,’ என்று ருத்ரா கூறியவுடன், அவள் ரூபெஷுடன், அவன் ரூமுக்குப் போய்,’ நீ ப்ரஷ் பண்ணிவிட்டு வா!’ என்று சொன்னாள், அவனும் சென்றான்

அவள் தன் கணவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள், என்ன செய்வது, பெங்களூர் போகணும், இங்கு ருத்ராவை விட்டு எப்படி போவது என்று நினைத்துக் கொண்டிருந்தாள், அவளுக்கு அவள் கணவன் தான் முக்கியம், தன் மகனும், அப்பாவின் துணையோடு ஒரு ஆண்மகனாக அதுவும் தன் கணவனைப் போலவே ஒரு ஆண்மகனாக அவன் வளர்ந்து அவனை மாதிரியே தனித்துவத்துடன் இருக்க வேண்டுமென்று, அவளுக்கு ஆசை, என்னதான் தன் ஹோட்டல, யார் பார்பார்கள், என்றாலும், அவளுக்கு தன் மகன், தன் புருஷன் அதான் முக்கியம் என்று தோன்றியது. ஆனால், தன் கணவன் என்ன நினைக்கிறான் என்று தெரியவில்லை, என்று நினைத்துக் கொண்டு உட்கார்ந்தாள்

‘தாத்தா, நான் ரூப்போட, கொஞ்சம் பழகனும் அவனுக்கு இன்னும் நான் அப்பா என்று தோன்றவில்லை,  அதான் அவனைக் கூட்டிக் கொண்டு போனேன், சரி விஷயத்துக்கு வரேன், நம்ம சித்ராவுக்கு ...................,'என்று நடந்தது எல்லாம் சொல்லி முடித்தான், 'அவள் நமக்கோ நம் குடும்பத்துக்கோ ஏதாவது அந்த சுரேந்தரால் ஆகிவிடுமோ என்று பயந்து ஒளிந்து இவ்வளவு வேதனையும் அனுபவித்துக் கொண்டிருந்திருக்கிறாள், அவளைக் காப்பாற்றிய அந்த மீனாட்சியம்மா, இந்த ராஜாவுக்கும் உனக்கும் என்று அந்த பெங்களுரு வீட்டையும், அந்த டிபன் கடை அவள் பிழைத்துக் கொள்ள அவள் பெயரிலே எழுதிக் கொடுத்து விட்டார், இவளுடைய ஹார்ட் வொர்க்கில், இப்போது ஹோட்டலாக மாறி இருக்கிறது, நாம் அதை தொடர்ந்து நடத்த வேண்டும் தாத்தா, அது அவளுடைய கடின உழைப்பு, அதை விட முடியாது, அது எப்படி நடத்த போறோம்னு நான் அவள் கிட்ட பேசறேன், அப்புறம் நீங்களும், நானும் டிசைட் பண்ணலாம்,' என்று  சொன்னான் ருத்ரா..., தாத்தாவும் சிவேஷும்  கஷ்டப் பட்டாலும், பிறகு அவள் தானே ஒரு பெரிய ஹோட்டலை ஆரம்பித்து, அவள் தன்னையும் தன் மகனையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறாள், அதான் ஒரு சந்தோஷம்,

‘பாவம், குழந்தை எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கிறாள், யாருமில்லாமல், குழந்தையைப் பெற்று, அருமையாக வளர்த்து இருக்கிறாள், இனிமேலாவது இந்தக் குழந்தைக்களின் வாழ்வில் சந்தோசம் நிலைத்து  இருக்கணும்,’ என்று கூறினார், சிவேஷ் தன் அப்பாவிடம், நீலகண்டனுக்கே ஆச்சர்யமாக இருந்தது, இதுவரை தன் மகன் சிவா, இவ்வளவு நீளமா, தன்னுடன் இருக்கும்போது பேசியதில்லை, அவரும் தலையாட்டினார், அவர் அங்கிருந்து சென்று தன் மனைவியைப் பார்க்கப் போனார், கற்பகமோ 'அவர்களுக்கு முதல் இரவுக்கு ஏற்பாடு பண்ணவேண்டும்,’ என்று சொல்லவும்,'

அவர் சிரித்துக் கொண்டே, ‘நம் மகனுக்கு பத்து வயதில் மகன் இருக்கிறான், அவனுக்கு முதல் இரவு செய்ய வேண்டும் என்று சொல்லுகிறாய், என்ன ஆச்சு, உனக்கு,' என்றார்,

'இல்லைங்க, அவங்களுக்கு இன்னிக்கு தானே நாம் கல்யாணம் செய்து வைத்தோம் அதான், நமக்கு இன்னொரு பேத்தி வேண்டாமா, என்று அவள் கேட்கவும்,'

'முதலிரவு ஆர்பாட்டம் பண்ணவிட்டாலும் பேத்தியோ, பேரனோ பிறப்பார்கள், இதெல்லாம் செய்து அவர்களை கஷ்டப் படுத்தாதே,'

சித்ரா பையனை படுக்கச் சொல்லிவிட்டு தங்கள் ரூம் எங்கிருக்கிறது என்றும் சொல்லி விட்டு, ‘வீடு நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள், அதனால் புது இடம் என்று தூங்காமல் இருக்காதே இதுவும் நம் வீடு தான், தூங்கு குட் நைட்,' என்று சின்ன லைட்டை போட்டு விட்டு, கதவை மூடிக்கொண்டு தங்கள் ரூமுக்குப் போனாள், அங்கு ருத்ரா ஒரு புக்கை படித்துக் கொண்டிருந்தான், அவள் உள்ளே நுழைவதைப் பார்த்து 'வா என் கண்ணம்மா, உனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கேன், இங்கே வா’ என்று தன் அருகில் உட்காரச் சொன்னான், அவள் உட்கார்ந்ததும்,அவளைக் கட்டி அணைத்தான்,’ என்னடா என்னவோ இந்த மூளையில ஓடிட்டிருக்கு, ஏதாவது என்னிடம் கேட்கணுமா,'

'உங்க மனைவி எங்க,'

'இதோ இங்க, என்று அவளை காட்டினான்

Episode # 20

Episode # 22

தொடரும்

{kunena_discuss:958}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.