(Reading time: 16 - 31 minutes)

22. என் மனதை தொட்டு போனவளே - VJ G

en manathai thottu ponavale

'விளையாடாதீங்க, உங்களுக்கு கல்யாணம் ஆயிடுத்து என்று சொன்னீங்க என் கிட்ட,'

'ஆமாம் காருல, உனக்கு நான் தாலி கட்டி கல்யாணம் பண்ணிக்கல, நீ என் மனைவின்னு சொல்லல, அப்புறம் என்ன நீ என் மனைவி தானே,'

'அப்போ நீங்க வேற கல்யாணம், பண்ணிக்கலையா,'

'உனக்கு என்ன பயித்தியமா, நீ என் பெண்டாட்டி இருக்கும்போது, நான் வேறு ஒரு கல்யாணம் பண்ணிக்கலையான்னு கேட்கிற, இந்த ஜென்மத்தில மட்டுமில்ல, அடுத்து வர ஜென்மத்திலும் நீதான் என் மனைவி,' என்றான் அவளை இழுத்து கட்டிக் கொண்டு, அவளும் கண்ணீருடன் அவனைக் கட்டிக் கொண்டாள், முகம் பூராவும் முத்தம் கொடுத்தாள், அவனே அதிசயப் படும் அளவுக்கு அவன் மேல் பிரியம் காட்டினாள், அவளே அவன் கேட்காமல் எல்லாம் கொடுத்தாள், அவனை திணற வைத்தாள், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள்,  அவர்கள் நிதானத்துக்கு வந்தவுடன் 'என்ன இப்போ கொஞ்சம் பேசலாமா,' என்று அவளை தன் கை அணைப்பிலேயே வைத்துக் கொண்டு கேட்டான்,

'ஹ்ம்ம்,'

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

'சரி நாம ஒன்னு சேர்ந்துட்டோம், அப்புறம் என்ன, நீ இங்கேயே இருந்துடரியா, இங்கே ஒரு நல்ல ஸ்கூல்ல ரூப்ப சேர்த்துடலாம், என்ன சொல்றே,'

'இல்ல அது சரி வராது, நான் அங்கே ஹோடல விட்டு வர முடியாது,'

'அப்ப நம்ம லைப், அதனாலே ஹோட்டலுக்கு வேறு ஏற்பாடு பண்ணுவோம், என்ன சொல்றே'

'என்ன ஏற்பாடு,'

'நாம ஒன்னு லீசுக்கு கொடுக்கலாம், இல்லை நாம வைத்துக் கொண்டு மேனேஜ் பண்ண ஆளை வைத்துக் கொள்ளலாம், நானோ நீயோ இல்லை, இரண்டு பேருமோ, அப்பப்போ போய் பார்த்துக்கலாம், என்ன சொல்றே,'

'நாம அங்கேயே மூவ் பண்ணா என்ன, எனக்கு தெரியும் உங்களுக்கு இங்கே பிஸ்னெஸ் இருக்குன்னு பட் அங்கேயிருந்து நீங்க செய்ய முடியாதா, இல்லை நீங்க அப்பப்போ வந்து போக முடியாதா,'

'அது எப்படி என்னாலே உன்னை விட்டு தனியா இருக்க முடியும், இனி உன்னையும் ரூப்பையும் விட்டு விட்டு, என்னால் தனியாக இருக்க முடியாது, நீ இருந்து விடுவாயா, என்னை விட்டு உன்னால் இருக்க முடியுமா, அது மட்டுமில்லை எனக்கு இன்னொரு குழந்தை வேண்டும்,’

என்று பேச்சை நிறுத்தினான், அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்,

'என்ன சொல்கிறீர்கள், நம் மகனுக்கு பத்து வயதாகிறது, இப்போது, இன்னொரு குழந்தையா,' என்று அவள் கேட்க,

'நீயும் நானும் இன்னும் வாழவே ஆரம்பிக்கவில்லை, என் மகன் பிறந்து அவனுடைய குழந்தைப் பருவத்தை நான் பார்க்கவில்லை, இன்னொரு குழந்தை பெற்று, அதையெல்லாம் நான் அனுபவிக்க வேண்டாமா, அதுமட்டுமில்லை, நமக்கு ஒரு குழந்தை போதுமா, இன்னும் ரெண்டோ இல்லை, ஒன்றோ தேவையில்லையா, கண்டிப்பாக எனக்குத் தேவை,'

அவளால் பதில் பேச முடியவில்லை, என்ன நீங்கள், என்னை குத்தம் சொல்கிரா மாதிரி இருக்கு, என்னங்க கண்டிப்பா இன்னொரு குழந்தை வேண்டுமா,'

'ஒன்றா, ரெண்டோ மூன்றோ என்று பிளான் பண்ணிக் கொண்டிருக்கிறேன், நீ நிதானமா இன்னொன்னு வேண்டுமா என்று கேட்கிறாய்,'

'ஐயோ, ஆள் என்னென்னோவோ, பெரிய ப்லன்ல இருக்கீங்க போல, நம்மால, முடியாதுப்பா, எனக்கு வயதாகி விட்டது, என் பெரிய மகனுக்கு முப்பத்தைந்து வயது, என் அடுத்த மகனுக்கு பத்து வயது, அதனால் என்னால் இன்னொரு குழந்தையெல்லாம் பெத்துக் கொள்ள முடியாது,'

‘ம்ம், இப்பதான் உன் முதல் மகனைப் பற்றி தெரிந்ததா, இத்தனை நாளா கவலைப் படவில்லை இப்போ என்ன புதுசா,'

'புதுசா ஒன்றுமில்லை, பழசுதான்,’

'என்ன பழசுதான், விட்டு விட்டு, சொல்லாமல் போவதா,'

'அவள் கண்கள் குளமாகின, என்ன நீங்க, சீரியசா, பேசறீங்க, அவ்வளவும் சொன்னதுக்குப் பிறகும், நீங்க பழைய விஷயத்தை சொல்லிக் காண்பிக்கிறீங்க,'

'அவ்வளவு வேதனையாக இருக்கு, என் குழந்தையை நீ தனியா, பெத்து வளர்த்திருக்கே, அந்த காலங்கள் எல்லாம் எனக்கு திரும்பி வருமா, அவனுடைய குழந்தை பருவத்தை நான் அனுபவிக்க முடியுமா, அவனுக்கு இப்போ நான் மூன்றாவது மனிதனாகத் தெரியக் காரணம் நீதானே,அவன் என்னை யாரோ மாதிரி பார்கிறான், அம்மா என்னை தனியா விட்டேன்றான், எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்தது தெரியுமா, உங்களுடைய சின்ன உலகத்தில் அப்பாவை, உன் புருஷனை நீ மறந்துவிட்டாய், செத்துப் போன, உன் அம்மாவுக்கு கொடுத்த வாக்கு முக்கியம் தான்,அதற்காக உயிரோடிருக்கும், என்னை மறந்து விட்டாயே, நான் என்ன பண்ணேன், எனக்கு ஏன் இந்த பனிஷ்மெண்ட், என்னால் இதை ஜீரணிக்க முடியவில்லை, உன் மேல் கோவமில்லை, வருத்தம்தான் இருக்கு, அது போகணும்னா, இன்னொரு குழந்தை நமக்குப் பொறந்து, அது வளருவதை என் கண்குளிர பார்த்து அனுபவித்தப் பிறகு ஒரு வேளை, அந்த ஆதங்கம் குறையலாம், அதனால்……’ என்று கூறியபடி அவளை இழுத்து அனைத்துக் கொண்டான்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.