(Reading time: 16 - 31 minutes)

வள், அவனிடம் குழைந்து, இழைந்தாள்,தங்கள் தேவை முடிந்தவுடன், அவன் அவளிடம் ‘இப்போது நல்லா தூங்கு, உன் ஹோட்டலை பராமரிப்பது என்னோட கடமை, உன்னுடைய தேவை முழுவதும் நான் பூர்த்தி செய்வேன், உன்னை இனி நான் தனியாக விட மாட்டேன், அதனால் என்னை நம்பு உன் ஹோட்டல், அது உன்னிடம் தான் இருக்கும், நல்லா தூங்கு, நாளை நம் ரூப்பை கூட்டிக்கொண்டு மகாபலிபுரம் போகிறோம்,’என்று அவளைக் கட்டிக் கொண்டு முத்தம் கொடுத்து,தன் பக்கத்தில் இருக்கும் லைட்டை ஆப் செய்தான், இருவரும் அப்படியே தூங்கினர்,

காலை ஆறு மணிக்கு இருவரும் குளித்து வெளியே வந்தனர், அப்போது ரூபெஷும் அவன் ரூமிலிருந்து வெளியே வந்தான்

'குட்மார்னிங், மாம், டாட்,' என்று சொல்லிக் கொண்டே அவர்கள் அருகில் வந்தான்

நேரே பூஜை ரூமிற்கு சென்றனர் மூவரும், அங்கு சித்ரா விளகேத்தி வைத்துவிட்டு மகனின் அருகில் உட்காந்தாள், பக்கத்தில் ருத்ராவும் உட்கார்ந்தான், பூஜை செய்தனர், பிறகு தியானம் செய்தனர், இவர்கள் முடிக்கும் நேரம், தாத்தா நீலகண்டனும், சிவகாமி பாட்டியும், கற்பகமும் வந்தனர், காபியுடன், வந்தான் சமையல் காரன், அதை வாங்கி குடித்தான் ருத்ரா, சித்ரா சமயலறைக்கு சென்று தன் மகனுக்கு கஞ்சி போட்டுகொண்டு எடுத்து வந்தாள், தானும் அதையே சாப்பிட்டாள், அவர்கள் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினர் மகாபலிபுரத்துக்கு,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தங்கமணி சுவாமினாதனின் "கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது..." - பெரியவர்களுக்கான மந்திர, மாயாஜாலங்கள் நிறைந்த வரலாற்று கதை...

படிக்க தவறாதீர்கள்...

மகாபலிபுரத்தில் இரண்டு நாள் அவன் தன் மகன், தன் மனைவி அவர்களுடன், வெகுவாக என்ஜாய் செய்தான், அவன் மகனுடன் ஸ்விமிங், அவனுடன் விளையாடுவது என்று பலவிதமாக அவனுடன் நேரம் சிலவு செய்தான் அவர்கள் சூட்டுக்கு வந்தவுடன் அவன் அவர்களுடன், லூடோ, கார்ட்ஸ், செஸ்,என்று பலவிதமாக விளையாடி அவனை அசத்தினான், அதிலிருந்து, அவன் மகன் கொஞ்சம், கொஞ்சமாய் அவனுடன் ஒட்டிக் கொண்டான், அவனுக்கு மிகவும் சந்தோஷம் அதைப் பார்த்த, சித்ராவுக்கும் மிகுந்த சந்தோசம், அவள் இந்த நாளுக்காக ஏங்கிக் கொண்டிருந்தாள், அவர்கள் பேச்சும், அவர்கள் கொஞ்சுவதும், இந்த இரண்டு நாளில் அவள் நெகிழ்ந்து போனாள்,

ரண்டு நாள் கழித்து திரும்பி வரும்போது, ரூபேஷ் கேட்டான், 'அப்பா, எங்களோடுதானே இருப்பீர்கள், மறுபடியும் நீங்கள், வெளிநாட்டிற்கு போயிடுவீங்களா?'

'இல்லைடா, போகமாட்டேன்…. உன்னோடையும் உன் அம்மாவோடையும் தான் இருப்பேன்,'

'அம்மா, நீ என்னம்மா பேசமாட்டேங்கிற, பேசம்மா,'

'பேச ஒன்னுமில்லைடா கண்ணா, நீயும் உங்க அப்பாவும், இவ்வளவு சந்தோஷமாக இருப்பது, எனக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா, இதுக்குத்தானே நான் காத்துக் கொண்டிருந்தேன்’, என்றாள் சித்ரா உணர்ச்சி ததும்ப, ருத்ரா அவள் கையை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டான்,

மெதுவாக, ரூபெஷிடம், 'ரூப், நீ இங்கேயே, சென்னையில் ஸ்கூல் சேர்ந்து விடுகிறாயா, நாம் எல்லோரும் இங்கேயே ஒன்றாக இருக்கலாம், இங்கே கிளப்பில் சேர்த்து விடுகிறேன், நீ எல்லாம் கத்துக் கொள்ளலாம், என்ன சொல்கிறாய்,' என்று கேட்டான்,

'டாட் டோன்ட் டேக் மி ராங், அம்மா என்ன சொன்னாலும் சரி, இத்தனை நாளாய் அம்மாதான் எனக்காக டிசைட் பண்ணுவா, இப்ப நான் டிசைட் பண்ண முடியாது, வாட் மாம் யு டெல் மீ வாட் டு டூ, ஐ டேக் வாட் எவர் யு சே,' என்றான்,

'ஏய், அப்பாதாண்டா நமக்கு முக்கியம், நம்ம ரெண்டு பேருக்கும் அப்பாதான் இனிமே எல்லாம், அவர் தான் முடிவு பண்ணனும், நம்ம ரெண்டு பேருக்குமே, அதனால் அவர் என்ன சொன்னாலும் நம்ம கேட்போம் இல்லையா ரூப், அப்பா கிட்டே சொல்லு பார்க்கலாம்’

'ஏன் அம்மா, யு டோன்ட் டாக் டு டாட், நீ ஏன் என்னை சொல்ல சொல்லுறே,'

ருத்ரா, ‘ரூப், நீயும் அம்மாவும் என்னோட இங்கே, என்னோட இருக்கணும்னு ஆசை, யு டூ டிசைட் வாட் யு வான்ட், ஐ, ரியலி டூ நாட் வான்ட் டு கிவ் யு எனி ஆப்ஷன்ஸ், பட் ஐம் லெப்ட் வித் நோ ஆப்ஷன்ஸ்,ஹஹஹ,’ என்று சிரித்தான்,

‘கண்ணா, ரெண்டு விஷயம், உனக்கு உன் அப்பாவோடு இருக்க ஆசையோ, அதே மாதிரி உன் அம்மாவுக்கு............... என்று அவன் ஆரம்பித்த போதே, அவள் குறுக்கிட்டாள், என்ன உங்க பையன் கிட்டே பேசறீங்க,’ என்று சொன்னாள்

'ஒண்ணுமில்லை, நானும் என் பிள்ளையும் பேசறோம், என்ன ரூப்,' என்று மகனிடம் கேட்கவும் 'மாம், ஒண்ணுமில்லை, ஜஸ்ட் சும்மா பேசறோம் அவ்வளவுதான்,' என்றான் மகன்

அதைக் கேட்ட ருத்ரா, உரக்க சிரித்தான், கூட, சித்ராவும் சிரித்தாள்,

வீடு வந்து சேர்ந்தனர், வித்யா வீட்டிற்கு சென்றனர், வித்யா வீட்டில் அவளுடைய எட்டு வயது மகள், பெயர் வாணி,சித்ராவைக் கவர்ந்தாள், அவள் அழகும், பேச்சும், அப்படியே தன் மகனையும், தன் கணவன், நாத்தனார் வித்யாவை போலவே இருந்தது, எட்டு வயதிற்கு நல்ல முதிர்ச்சி, அழகாக பாவாடை, சொக்கா போட்டுக் கொண்டிருந்தாள், மிகவும் சந்தோஷமாக இருந்தது, சித்ராவுக்கு, முதலில் கொஞ்சம் வெட்கபட்டாலும் ரூபேஷ், கொஞ்ச நேரத்தில், ஸ்கூல் பற்றி பேச்சை ஆரமித்தவுடன், நன்றாக பேச ஆரம்பித்து விட்டான்,

குமார், வனிதா வீட்டிற்கும் சென்றனர், அங்கும், வனிதாவின் மகள், வினிதா, அழகாக பேசி, இவர்களை குளிர்வித்தது,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.