(Reading time: 16 - 31 minutes)

திரும்பி  வீட்டுக்கு  வரும்போது, ' குழந்தைகள் நன்றாக வளர்ந்திருக்கிறார்கள், வாணி என்ன அழகாக வித்யாவை போலவே இருக்கிறாள், அவளைப் போலவே நிதானமான பேச்சு,வினிதாவும், குமார் போலவே இருக்கு , அதன் பேச்சும் எவ்வளவு அழகு, ரொம்ப சந்தோஷமாக இருக்குங்க, நான் எவ்வளவு மிஸ் செய்திருக்கிறேன் ' என்று சித்ரா, சொல்லிக் கொண்டிருந்தாள்,

அவள் கையை எடுத்து தன் கையில், வைத்துக் கொண்டு, 'பெட்டெர் லேட் தன் நெவெர், இப்போ வந்து என்னோட சேர்ந்தியே, எனக்கு எவ்வளவு  சந்தோஷமா இருக்கு தெரியுமா,’ என்று கூறி, 'சித்து நாளைக்கு, நம்ம கம்பனியையும் ஆபிசையும் போய் பார்க்கலாம், பிறகு நாளை மறுநாள், நாம் பெங்களுரூ போகலாம், என்ன சொல்றே நீ,' என்று கேட்டான், அவளும் 'சரி' என்றாள்,

'நம்ம ஹோட்டலை, சரோஜ், ராகவேந்தர் அவர்களுக்கு பத்து பெர்சென்ட் கமிஷன் கொடுத்து, அவர்களை பார்த்துக் கொள்ளச் சொல்லலாமா, ஆனா பார்ட்னர்ஷிப் ஒன்னும் போடவேண்டாம், நமக்கு வரும் லாபத்தில், அவர்களுக்கு பத்து, பத்து பெர்சென்ட் கொடுக்கலாம் அதற்கு,  தனி அக்ரீமெண்ட் போட்டுக்கலாம், என்ன சொல்றே, நீ சரி சொல்லிவிட்டால் இப்போது போகும் போது பேசி விட்டு, அவர்கள் ஒத்துக் கொண்டால், அக்ரீமெண்ட் இங்கேயே ரெடி பண்ணி விடுகிறேன், அவர்கள் ஓகே சொல்லியாச்சுன்னா நாம, எல்லாம் முடித்து அவர்களிடம் பொறுப்பை ஒப்பைடைப்போம், அவர்களுக்கு சும்மா சம்பளம் கொடுப்பதற்கு பதிலாக, கமிஷன் கொடுத்தால் ஒரு இண்டரஸ்ட் எடுத்து செய்வார்கள், அதான் அப்படி முடிவெடுத்தேன், 'என்றான்,

அவள் சிறிது நேரம் யோசித்து,' நீங்கள் சொல்வதெல்லாம் சரி, ஆனால் சரோஜுக்கும், ராகவேந்தருக்கும், ஆகவே ஆகாது, அவர்கள் எப்படி ஒற்றுமையாக, இதை நடத்தமுடியும்,' என்று அவள் யோசித்துக் கொண்டே கேட்டாள்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நீலாவின் "இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

‘அதனால் தான், அந்த முடிவே, அவர்கள் இருவருக்கும் ஒரே  பெர்சென்டேஜ், ஒரே மாதிரி பவர் கொடுத்து, அவர்களை ஒற்றுமையாக்க வேண்டும், பிறகு வேலையை பகிர வேண்டும், அப்போ அவர்களுக்கு தினம் வரும் வருமானத்தில் தான் குறியாக இருப்பார்கள், அப்போது சண்டை குறைந்துவிடும்,’

'அதுவும் சரிதான், சரி, பேசிப் பாப்போம்,' என்றாள்,

'சரி, நான் எல்லாம் ரெடி பண்ணுகிறேன்,' என்றான் ருத்ரா

அவர்களும் பேசிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தார்கள், அங்கேயே அவர்கள் வீட்டில் சாப்பிட்டு விட்டதால், போய் படுக்க வேண்டியதுதான், இவர்களுக்காக, கற்பகம் காத்துக் கொண்டிருந்தார், உள்ளே நுழையும் போதே, 'என்னம்மா எவ்வளவு முறை சொல்லியிருக்கேன்,எங்களுக்காக காத்திருக்காதே என்று,'

'நான் இந்த கண்ணனுக்காகக் காத்துக்  கொண்டிருந்தேன், என் ராஜா, தூக்கம் வந்துடுத்தா,' என்று கேட்டுக்  கொண்டிருந்தார்,

சித்ராவும், ருத்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்,

சித்ரா அங்கேயே சோபாவில் கற்பகத்தின் பக்கத்தில் உட்கார்ந்தாள், 'ரூப் பாட்டிம்மா பக்கத்தில உட்கார், கொஞ்ச நேரம் பேசிவிட்டு பிறகு போகலாம்,' என்றாள்,

அவன் ஒன்றும் பேசவில்லை, அவனுக்கு பெங்களுரு போல இல்லை, சென்னையில் ஒரே வியர்வை கொட்டிகிறது, சீக்கிரமே டயர்ட் ஆகிவிடுகிறான், என்று மனதில் நினைத்துக் கொண்டு, அம்மா சொன்னால் ஏதாவது காரணம் இருக்கும் என்று பாட்டி பக்கத்தில் உட்கார்ந்தான், ருத்ராவும் சித்ரா பக்கத்தில் உட்கார்ந்தான், அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது, ருத்ரா, சித்ராவின் மடியில் படுத்துக் கொண்டான், சித்ராவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, அவனை அப்படியே இழுத்து அணைக்கவேண்டும் என்ற ஆவலை அடக்கிக் கொண்டாள், அவள் கையை எடுத்து தன் தலையில் வைத்து,’ தடவி விடு’ என்று அவளிடம் சொன்னான், அவள் எப்பவோ சொன்னது அவன் நினைவில் இன்னும் வைத்துக் கொண்டிருக்கிறான் என்று, அவள் அவன் தலையைத் தடவி விட்டாள், அவனுக்கு ஆனந்தமாக இருந்தது, அதே போல் அவளுக்கும் திருப்த்தியாக இருந்தது,

சிறிது நேரம் கழித்து ருத்ராவால் தாங்க முடியவில்லை, தன் மனைவியை அள்ளி அனைத்துக் கொள்ளவேண்டும் என்ற ஆவல், 'சித்து, ரூப் தூங்க வேண்டும் டயர்டாக இருப்பான், வா போகலாம்,’ என்று அவன் கூறுகையில் அவன் குரல் வேறு விதமாக ஒலித்தது, அவளுக்கு புரிந்தது அவள் கணவனுக்கு மூட் வந்து விட்டது என்று, நினைப்பே அவளுக்கு வெட்கத்தைக் கொடுத்தது

'சரிம்மா, தூக்கம் வருகிறது, நான் போய் படுக்கிறேன், நீயும் போம்மா படுக்க,' என்றான், ருத்ரா,

'சரிப்பா, நான் போய் படுக்கிறேன், என்று பேரனிடம், 'குட் நைட் கண்ணா!' என்றாள் கற்பகம்,

ரூப் ஓடி வந்து 'பாட்டிம்மா, குட் நைட்,' என்று சொல்லி அவள் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தான், அவள் அப்படியே உருகி அவனைக் கட்டிக் கொண்டு தானும் பேரனுக்கு ஒரு முத்தம் கொடுத்தாள், கண்கள், கண்ணீர் குளமாகின, 'தாங்க்ஸ் டா செல்லம்,' என்று அவள் சொல்ல சித்ராவுக்கும், ருத்ராவுக்கும், ஒரே ஆச்சர்யம், ருத்ராவும், ரூப்பை இழுத்து அனைத்து முத்தம் கொடுத்தான், குட் நைட் டாட்,' என்று அவனும் சிரித்துக் கொண்டே சொன்னான், ருத்ராவும் சிரித்து கொண்டே, 'குட் நைட் சன்,' என்றான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.