(Reading time: 13 - 25 minutes)

20. சதி என்று சரணடைந்தேன் - சகி

Sathi endru saranadainthen

விடை தெரியா பயணம்!!!

இரண்டு நாட்களாக சோர்ந்திருந்தான் கௌதம்!!!

ரவிக்குமாரும் எப்படியோ முயற்சித்துப் பார்த்தார் அனுவின் அமைவிடம் தெரியவில்லை.

எங்கிருக்கிறாள் அவள்??

எனக்காக எவ்வளவு வேதனைகளை தாங்குகிறாள்!!!

கரம் பற்றிய பொக்கிஷத்தை தொலைத்து நிற்கின்றேனே!!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gயின் "என் மனதை தொட்டு போனவளே..." - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

நேராக பூஜை அறையில் நின்றான்.

"உங்களை எந்த முறையில் வணங்கணும்னு கூட எனக்கு தெரியாது!முதல்முறையா ஒரு வேண்டுதலை வைக்கிறேன்!என் அனு இருக்கிற இடத்தை எனக்கு தெரியப்படுத்துங்க!அவளை எனக்கு திருப்பி தாங்க!என் காதலுக்கு உயிர் கொடுங்க!"-மன்றாடி வேண்டிய அடுத்தக்கணம் அவன் கைப்பேசி அலறியது.

"ஹலோ!"

"ஹலோ!கௌதம் நான் அக்ஷயா ஃப்ரண்ட் கௌசல்யா பேசுறேன்!"

"சொல்லுங்க!"

"அக்ஷயா!உன் மனைவியை அவ கெஸ்ட் ஹவுஸ்ல இருந்து 20 கி.மீ.தூரத்துல இருக்கிற ஒரு வீட்டில அடைத்து வைத்திருக்கா!"

"நிஜமாகவா?"

"ஆமா கௌதம்!எனக்கு பார்க்கவே கஷ்டமா இருந்தது!சீக்கிரம் போங்க கௌதம்!"

"தேங்க்யூ!தேங்க்யூ ஸோ மச்!"

"பரவாயில்லை!சீக்கிரம் போங்க!"-இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இறைவனை நன்றி கலந்த பார்வையோடு பார்த்தவன் உடனடியாக கிளம்பினான்.

அனுவின் கட்டு அவிழ்க்கப்பட்டது.

"கௌதம் வாழ்க்கையை விட்டு போயிடுறீயா?"

"அவர் என் கௌதம்!நான் அவர் மனைவி!எந்த சூழ்நிலையிலும் அவரை விட்டு போக மாட்டேன்!"என்றாள் உறுதியாக!!

பளாரென்று அறை அவள் கன்னத்தில் விழுந்தது.

"நீ அவன் மனைவியா இருந்தா தானே!"-அக்ஷயா திரும்பி அங்கிருந்த ஒருவனிடம் கண்ஜாடை காட்டிவிட்டு நகர்ந்து கொண்டாள்.

அவன் அனுவை நெறுங்கினான்.அவனை தள்ளிவிட்டு ஓடியவளின் வஸ்திரத்தை இழுத்தான் அவன்.

"அம்மா!"என்று அலறியப்படி விழ சென்றவளை தாங்கியது அவளுக்கு உரியவனின் கரம்!!

மனதில் நம்பிக்கை பிறந்தது அவளுக்கு!!

கௌதம் தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி அவளிடம் தந்தான்.

அதை வாங்கி தன் மானத்தை காத்தவளின் கண்கள் கசிந்தன.

கௌதம் ஓரடி முன்னால் எடுத்து வைத்தான்.எதிரிலிருந்தவன் அவனை தாக்க வர,அவன் கரத்தைப்பற்றி அவனை தள்ளினான் அவன்.

சுதாரித்து அவன் எழுவதற்குள் அவன் சிரத்தை தரையோடு வைத்து மிதித்தான்.

"யார் மேலே கை வைக்கிற?அவ என் மனைவிடா!"-அவனுக்கு மூச்சுமுட்டியது.

திண்டாடினான்.

"என்னங்க!"-அவன் கோபத்தை குறைக்க முற்பட்டாள் அனு!!

"வேணாங்க!"-என்று அவனை விலக்கினான் அவள்.

அவளை அழைத்துக்கொண்டு வந்தவனின் எதிர்ப்பட்டாள் அக்ஷயா!!!அவள் கண்களில் கோபம் கொப்பளித்தது!!!

கௌதம் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

"பொண்ணா நீயெல்லாம்?இதோப்பார்...இவ என் மனைவி! என்னோடைய பொருள்!எனக்கு மட்டும் சொந்தமானவ!இன்னொருமுறை எங்களை பிரிக்க பார்த்த கொன்னுடுவேன் உன்னை!"-என்று அவள் கழுத்தை பிடித்து அழுத்தினான்.

அனு அவர்களை விலக்கினாள்.

"என்னை வேணாம்னு சொல்கிறாயா கௌதம்?"-முதல்முறையாக அவள் கண்களில் சோகம்!!

"ச்சீ..போடி!"-என்று அனுவின் கரத்தைப் பற்றி நடந்தான்.

அவள் மனதில் இருந்த நம்பிக்கை உச்சத்தை தொட்டது.கண்கள் தன்னிச்சையாக கலங்கின...

வீட்டிற்கு வந்தவள் அவனிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை!!

எதையோ சிந்தித்தப்படி தனிமையை நாடி இருந்தாள்.அவள் குழந்தைத்தனம் எல்லாம் தொலைந்துப் போயின....

புன்னகையை தியாகம் செய்திருந்தாள் அவள்!!!

கௌதம் எவ்வளவு முயற்சித்தும் அவள் இயல்புநிலைக்கு திரும்பவில்லை.

விவரம் அறிந்து ஓடிவந்தான் ராகுல்!!

தமையனை கண்டதும் அவன் அணைப்பினுள் சேர்ந்து அழுதாள் அனு.

"அனு!என்னம்மா ஆச்சு?"

"அண்ணா!"-பேச்சு வராமல் தவித்தாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.