(Reading time: 21 - 42 minutes)

08. என்னுள் நிறைந்தவனே - ஸ்ரீ

Ennul nirainthavane

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே

என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது ஏன்னென்று அறியேனடி (2)
ஓர பார்வை பார்க்கும் போது உயிரில் பாதி இல்லை
மீதி பார்வை பார்க்கும் துணிவு பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கே

உயிரே உயிரே உடம்பில் சிறந்தது எதுவென்று தவித்திருந்தேன்
அதை இன்று தான் கண்டு பிடித்தேன்
கண்ணே உன்னை காட்டியதால் என் கண்ணே சிறந்ததடி
உன் கண்களை கண்டதும் இன்னொரு கிரகம் கண்முன் பிறந்ததடி

காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் தொடுக்கின்றது
அது காலத்தை தட்டுகின்றது
என் மனம் என்னும் கோப்பையில் இன்று உன் உயிர் நிறைகின்றது"

ரவு உணவை முடித்துவிட்டு இளையவர்கள் நால்வரும் மாடிக்குச் செல்ல பெரிய ஹாலில் அமர்ந்து வெகுநேரம் கதை பேசிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் பொழுதை போக்கிவிட்டு உறங்க ச் செல்லும் போது மணி 12ஐ தொட்டிருந்தது..ராமும் பரணியும் ராமின் அறையிலும் தன்வியோடு மகியும் தங்குவதாய் ஏற்பாடு..காலையில் வந்த தொலைபேசி அழைப்பினால் எழுந்த ராம் பேசிவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்தான்..மறுபடியும் தூக்கம் வரும் என்று தோன்றவில்லை பரணியோ நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தான் அவனை எழுப்ப மனமின்றி போனை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான்..சிறிது நேரம் அதை நோண்டியவன் அலுத்துப் போகவே சுற்றும் முற்றும் கண்களை சுழற்றினான்..தன்வியின் அறை திறந்திருந்தது,.வேலை செய்கிறாளோ இல்லையோ ஆனால் காலையிலேயே எழுந்துவிடும் பழக்கம் உடையவள் தன்விகா..கீழே யோகா செய்து கொண்டிருப்பாள்..மனம் தானாகவே கணக்கு போட கால்கள் அதுவாகவே அறையின் வாயிலை அடைந்திருந்தன..கதவு லேசாக திறந்துதான் இருந்தது..உள்ளே மகி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்,கதவை திறந்து வைத்துவிட்டு உள்ளே நுழைந்தவன் தன்னவளின் அருகில் அமர்ந்தான்..எந்த சலனமுமின்றி உறங்கும் குழந்தையாய் அவள்..பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு..காற்றினால் இரு முடி கற்றைகள் அவளின் முன்னெற்றியில் தவழ ரசனையோடு ஒரு விரலால் அதை ஒதுக்கிவிட்டான்..லேசாக சிலிர்த்தது பெண்ணவளின் முகம்..எழுந்துவிடுவாளோ என்று அவன் அறையைவிட்டு வெளியேற இரண்டடி எடுத்து வைக்க மகியோ தூக்கம் கலைந்து எழுந்துவிட்டாள்..

வாங்க ராம்..சாரி புது இடம்ங்கிறதால நைட் லேட்டாதான் தூங்கினேன்..அதான் எழுந்துக்க டைம் ஆயிட்டுச்சு..ரொம்ப லேட் ஆயிடுச்சா என்றபடி வேகமாக எழுந்தாள்..

ஹே குட்டிமா குட் மார்னிங்…அதெல்லாம் ஒன்னுமில்லை நா தான் சீக்கிரம் எழுந்துட்டேன்..டென்ஷன் ஆகாத உக்காரு..அம்மாவே இப்போதான் எழுந்துருப்பாங்க..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "சதி என்று சரணடைந்தேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

புன்னகையை பதிலளித்தவள் சற்று இடைவெளிவிட்டு கட்டிலில் அமர்ந்தாள்..கலைந்த கூந்தலை சேர்த்து ஒரு கிளிப்பை போட்டாள்..அவளையே ராம் பார்த்து கொண்டிருக்க என்னவென்று கண்ணாலயே கேட்டாள்..

அழகுடா நீ என்றான் மனதில் நினைப்பதை மறைக்காமல்..

காலைலேயே ஆரம்பிச்சுட்டீங்களா..

ஹே இதுக்கே இப்படி சொன்னா எப்படி..கல்யாணத்துக்கு அப்பறம் நீ வந்து எழுப்பினா மட்டும்தான் நா எழுந்துப்பேன்..அதுவும் பெட் காபியோட..

அய்யே ப்ரெஷ் பண்ணாம காபியா நா மாட்டேன்ப்பா,..

ஓ..அப்போ சரி காபி தான் வேணும்கிறதில்ல என்ன வேணா குடுத்து எழுப்பலாம் என்றவாறு கன்னத்தையும் உதடுகளையும் சுட்டிக் காட்டினான்..

ச்சச்ச பேட் பாய் ஆய்டீங்க ராம் நீங்க..என்று சிணுங்கினாள்..

ம்ம் என்னடா பண்றது எவ்ளோ நாள் தான் நானும் நல்லவனாவே இருக்குறது..அதுலையும் நீ இந்த டோன்ல பேசினா இருக்குற கொஞ்ச நல்லவனும் என்னவிட்டு ஓடிருவான்..என்று கூறி கண்ணடித்தான்…

பாரேன்..உங்களை போய் சாமியார்நு சொல்றாங்களே எல்லாரும் என்று பொய்யாக ஆச்சரியப்பட்டாள்..

ஹேய் யாரு சொன்னா நா சாமியார்நு எங்களுக்குள்ள இருக்குற காதல் மன்னன் வர வேண்டிய நேரத்துல கரெக்ட்டா வெளிய வருவாரு..

ஹா ஹா பார்க்கலாம் என்றவாறு எழுந்தவளை கை பற்றி நிறுத்தினான்..இப்போ சின்ன ஸ்சம்பில் பாக்குறியா என்றான் ஒரு  மார்க்கமாய்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.