(Reading time: 21 - 42 minutes)

நிறைவாய் புன்னகைத்தார் விஜி..அப்பா அம்மாவ பாத்து பேசனுமே மாப்ள சாய்ந்திரம் ஊருக்கு கிளம்பிடுவேன்..

நானே சொல்லனும்நு நெனைச்சேன் ஆன்ட்டி இப்போவே பாக்கலாம் ...என்று கல்யாணத்தை சீக்கிரமாக வைக்க வேண்டும் என்பதை கூறினான்..

ஓ டெல்லி போனுமா நீங்க??ஆனா சீக்கிரமாநா எப்படிப்பா..அதுகுள்ள கல்யாண வேலையெல்லாம் என்னால முடிக்க முடியுமாநு தெரியலையே..

ஆன்ட்டி எங்களை ஆசீர்வாதம் பண்றது மட்டும் தான் உங்க வேலை மத்ததெல்லாம் நாங்க பாத்துப்போம்..அதனால கவலையே படாதீங்க..என தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்..ராஜசேகரும் ராஜியும் அவரை இன்முகத்தோடு வரவேற்றனர்..விஜிக்கோ தன் மகள் நல்ல இடத்தில்தான் இருக்கபோகிறாள் என்ற நிறைவு...

அனைவரும் பேசி முடித்து குடும்ப ஜோசியரை வைத்து தேதி குறித்தனர்..அன்றிலிருந்து சரியாக 30நாட்களில் திருமணம் நேரம் கம்மியாக இருப்பதால் முந்தைய நாளே நிச்சயதார்த்தத்தை வைத்து கொள்ளலாம் என முடிவெடுத்தனர்..விஜி ஊருக்குச் சென்று அலுவலகத்தில் ஒருமாத விடுப்புக்கு எழுதி கொடுத்துவிட்டு வருவதாய் ஏற்பாடு..அந்த கொஞ்ச நேரத்திலேயே ராமின் பெற்றோரை அண்ணா அண்ணி என்று அழைக்கும் அளவிற்கு நெருக்கம் ஏற்பட்டிருந்தது அவர்களுக்குள்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

எவ்வளவோ கூறியும் ராமே விஜியை காரில் கோயம்பேட்டிற்கு கொண்டு விடுவதாக கூறி காரை கிளப்பினான் மகியோடு..

அவரை பஸ் ஏற்றிவிட்டு பஸ் கண்ணிலிருந்து மறையும் வரை நின்று பார்த்துவிட்டு இருவரும் கிளம்பினர்..அதுவரை எதுவும் தெரியாத மகிக்கு அப்போதுதான் உரைத்தது ராம் அவளிடம் பேசவேயில்லை என்பது,.அம்மா இருந்ததால் அப்படி இருந்தான் என்று எண்ணியவளுக்கு இப்போதும் அவன் பேசாதது என்னாச்சு இவருக்கு என்று யோசிக்க வைத்தது..

ராம் ஏன் ஒண்ணுமே பேசமாட்றீங்க என்னாச்சு??உடம்புக்கு எதுவும் முடிலயா?

அவள் கேட்டது அவன் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை காரில் வந்து அமர்ந்தவன் காரை கிளப்பினான்..மகிக்கோ ஒன்றும் புரியவில்லை..ஏதேதோ கேட்டுக் கொண்டே வந்தாள்,ஒரு கட்டத்தில் பொறுக்கமாட்டாதவனாய் ஆள்நடமாட்டம் குறைவாகயிருந்த சாலையோரமாய் நிறுத்தினான்,மகியோ,ராம் இப்போ நீங்க என்னனு சொல்லல நா இங்கயே இறங்கிடுவேன்..என்று முடிப்பதற்குள் ராமின் பிடிக்குள் இருந்தாள்..என்ன நடக்கிறது என்று உணர்வதற்குள் ராமின் அணைப்பு இறுகிக் கொண்டேயிருந்தது..அதில் காதலை தவிர வேறெதுவுமில்லை..நீ எனக்கானவள் என்ற உரிமையிருந்ததேயன்றி உரிமை மீறல் இல்லை..எவ்வளவு முயன்றும் மகியால் தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை..ராம் ப்ளீஸ்..என்று மெதுவாக முனகினாள்..தன்னினைவிற்கு வந்தவன் சட்டென அவளை விடுவித்தான்..தன்னை சரி படுத்திக் கொண்டவளுக்கு அவனை ஏறிட்டு பார்க்கவும் தோன்றவில்லை..ராமோ வெளியிலிருந்து பார்வையை அகற்றவில்லை,சில நிமிடங்கள் இப்படியே கழிய இருவரின் கண்களும்  ஒரே நேரத்தில் சந்தித்து கொண்டன..மகி சட்டென பார்வையை அகற்றிக் கொண்டாள்..

குட்டிமா ரியலி சாரிடா,.இதுக்கு தான் உன் பக்கமே திரும்பாம வந்தேன்.…சத்யமா நா சந்தோஷத்தோட உச்ச கட்டத்தில இருக்கேன்..எனக்கு தெரியும் நீ பேச ஆரம்பிச்சா நா கன்ட்ரோல் இழந்துடுவேன்னு..நா பாவம்டா ப்ளீஸ் மன்னிச்சுடேன்..

அவன் கூறிய விதத்தில் தன்னையும் மீறி சிரித்துவிட்டாள் மகி..

ஷப்பா..சிரிச்சுட்டியா ம்ம்ம் இந்த 30 நாள்ல உன்ன அடிக்கடி பாக்காம இருக்குறதுதான் எனக்கு நல்லது..அவள் ஹாஸ்டல் வாசலில் நிறுத்தியவன் அவள் இறங்கும் நேரம் அழைத்தான் என்னவென்று கண்ணால் கேட்டவளிடம்,பேசாம இப்போவே நம்ம வீட்டுக்கு வந்துட்றியா என்றான் குழந்தையாய்,அவன் தலையை வருடியவள்,குட்டி பாப்பா மாறி பிகேவ் பண்றீங்க ராம் நீங்களா எப்படி டிடெக்டிவ் ஜாப்ல இருக்கீங்க..

ஹலோ வேலைல நாங்க ரொம்ப ஸ்ரிக்ட் தெரிஞ்சுக்கோ..பொண்டாட்டிகிட்ட மட்டும் தான் இப்படி என்றான் வருடி கொண்டிருந்த அவள் கையில் தலை சாய்த்தவாறு..

லவ் யு சோ மச் ராம் என்று கூறிவிட்டு திரும்பி பார்க்காமல் ஓடிவிட்டாள்..வீட்டிற்கு வந்ததும் மகியின் உரையாடல்களே நினைவில் நின்றது..”நீங்கல்லாம் எப்படி தான் டிடெக்டிவ்வா இருக்கீங்களோ..”

நினைவுகள் அதுவாகவே பின்னோக்கி நகர்ந்தது..

உங்கள மாறி ஒருத்தர்தான் ராம் இந்த அஸைன்மென்ட்க்கு தேவை…

தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:952}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.