(Reading time: 21 - 42 minutes)

தை கேட்டவளுக்கோ மனம் சற்று இலகிதான் விட்டது..சரி சார் அஸ் பெர் த ரூல் இதெல்லாம் தப்பு இவரை பாக்க பாவமாயிருக்கேநு தான் நா இதை பண்றேன் என்றவாறு கம்பூயூட்டரை தட்டினாள்..அதற்குள் தன் மொபைலில் வீடியோவை ஆன் செய்தவன் அவளின் அருகில் எதிர்புறம் திரும்பி நின்றவாரு கம்பூயூட்டரை வீடியோ எடுக்கலானான்..ஒரு பெண்ணின் புகைபடத்தோடு அவளின் விவரங்கள் திரையில் மிளிர்ந்தன..சார் போன் நம்பர் சொல்லுங்க என்று உறுதிபடுத்திக் கொள்ள வினவினாள்..நம்பரை சரி பார்த்தவள் ஆமா சார் நீங்க சொல்றது இவங்கநு தான் நினைக்குறேன் நம்பர் மேட்ச் ஆகுது என்றவாறு திரையை காட்டினாள்..

தேங்க் காட் வி காட் ஹெர்டா பரணி..இனியாவது சந்தோஷமா இருடா நீ..என்று ஆர்பரித்தான் ராம்…பரணியோ இல்லாத கண்ணீரை துடைப்பதாய் தன் நண்பனின் தோளில் சாய்ந்து கொண்டான்..சிஸ்டர் அவங்க அட்ரெஸ் மட்டும் தறீங்களா ப்ளீஸ் இவன் மேல இருக்குற கோவத்துல வீட்டை மாத்திட்டா..பாருடா உன்னால இவகங்களுக்கு எவ்ளோ கஷ்டம்நு ரியலி சாரி சிஸ்டர்..

பரவாயில்லை நோட் பண்ணிக்கோங்க என அட்ரெஸை அளித்தாள்..காலில் விழாத குறையாக அவளிடம் நன்றி கூறிவிட்டு வெளியே வந்தனர் இருவரும்..தங்கள் அறைக்கு வந்தவுடன் விழுந்து விழுந்து சிரித்தான் ராம் என்னடா பரணி உன் கேள் ப்ரெண்ட்டோட சண்டையா?

அருகிலிருந்த தலையனையை தூக்கி எறிந்தான் பரணி..கொல்ல போறேன்டா உன்ன நீ பாட்டுக்கு இஷ்டத்துக்கு அடிச்சு விடுற..ACPட்ட அந்த நம்பர் வாங்கும் போதே டவுட் ஆனேன் நீ எதோ ப்ளான் பண்ணுவனு…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

டேய் சத்தியமா அப்போ நா எதுவுமே நினைக்கலடா..ஹாஸ்பிட்டல்ல அந்த பொண்ணுட்ட பேசுற அப்போ தான் ஆன் தி ஸ்பாட்ல தோணிச்சு..-ராம்..

சரி சரி அடுத்து என்ன அந்த அட்ரெஸ்ல போய் பாப்போமா?

இல்லடா இப்போ வேணாம் நைட் போகலாம் அதான் சேவ்..-ராம்…

அக்காவின் குரல் கேட்டு தன் சிந்தனையிலிருந்து கலைந்தவன்..அவளோடு பேசியவாறே உணவருந்தச் சென்றான்..

இவ்வாறாக நாட்கள் நகர மகியின் அம்மா சென்னை வரும் நாளும் வந்தது..அன்று இரவு ராமுடன் பேசுகையில்,

குட்டிமா அம்மா கிளம்பிட்டாங்களா?தனியா மேனேஜ் பண்ணிடுவாங்களா??

ம்ம்ம் வந்துருவாங்கப்பா..

என்னாச்சுடா??வாய்ஸ்ஸே சரியில்ல..

டென்ஷனா இருக்கு ராம்..நம்ம விஷயத்த எப்படி எடுத்துப்பாங்களோ தெரில..

ஹே கவலபடாத மகி..நா தான் உன் கூடவே இருக்கேன்ல..நா பாத்துக்குறேன்..நாளைக்கு அவங்க வந்தவுடனே எதுவும் இதபத்தி பேசிக்காத..டே அஃவ்டர் அந்த மாலுக்கு கூட்டிட்டு வா மத்ததெல்லாம் நா பாத்துக்குறேன்..ஆல்சோ நீ வெளிய போறப்போ எல்லாம் என் ப்ரெண்ட் ஒருத்தன் உன்ன பாலோ பண்ணிட்டே தான் இருப்பான்..சோ நோ வொரீஸ்,

ம்ம்ம் சரிப்பா..

மறுநாள் அன்னையை பார்த்ததும் எல்லா கவலைகளையும் தாண்டி நிம்மதி பரவுவதை அவளால் தடுக்க முடியவில்லை..அன்று முழுவதும் தன் அன்னையோடு சந்தோஷமாக செலவிட்டாள்..பெசெண்ட் நகர் கோவில்,மைலாப்பூர் கபாலீஸ்வரர்,டீநகர் ஷாப்பிங் என சுத்தி வந்துவிட்டாள்..அம்மாவின் அருகிலேயே இருந்ததால் ராமிடம் பேசவே முடியவில்லை..மறுநாள் விடியல் மகியின் மனதில் ஆயிரமாயிரம் உணர்ச்சிகளை விதைத்திருந்தது..மாலுக்குச் சென்றவர்கள் சிறிது நேரம் சுத்திவிட்டு அங்கிருந்த காபி ஷாப்பில் அமர்ந்தனர்..மகி சுற்றும் முற்றும் பார்ப்பதை பார்த்துவிட்டு,

யாரை மகி தேடுற யாராவது வராங்களா?? என்றார் அவளின் அன்னை விஜி..

ஹாங்.,இல்லம்மா என் ப்ரெண்ட்ஸ் வரேன்னு சொல்லிருந்தாங்க அதான்..என்று அவள் கூறிக் கொண்டு இருக்கும் போதே ராம் பரணியுடன் அங்கு வந்து சேர்ந்தான்,மகியோ உச்சகட்ட படபடப்பில் இருந்தாள்..

அம்மா இவங்க என் கூட வொர்க் பண்ணாங்க இது ராம் இவரு பரணி அண்ணா..

வணக்கம் தம்பி உட்காருங்க ரெண்டு பேரும்…

மகி இவங்களுக்கும் சாப்பிட எதாவது ஆர்டர் பண்ணு ..

ஹா சரிம்மா என்று பயத்தோடே சென்றாள்..பத்து நிமிடம் பொதுவாக பேசிவிட்டு பரணி தன் மொபைலில் தானே ரிங்டோனை போட்டுவிட்டு கால் வந்திருப்பதாக கூறி எழுந்து சென்றுவிட்டான்..கிளம்பும் போது ராமிடம் ரொம்ப முக்கியமான கால்டா லேட் ஆனாலும் ஆகும் எனக்காக வெயிட் பண்ணாத என்று கூறிவிட்டுச் சென்றான்..

ராம் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்..ஆன்ட்டி மகிய நா கல்யாணம் பண்ணிக்கனும்நு ஆசை பட்றேன்..கண்டிப்பா உங்க சம்மதம் இருந்தா மட்டும் தான்..உங்க அளவுக்கு அவள என்னால பாத்துக்க முடியுமாநு தெரில ஆனா எந்த விதத்துலயும் ஒரு குறையும் இல்லாம பாத்துப்பேன்..

என்ன மகி இதெல்லாம்.??-விஜி அவரது குரலில் அப்பட்டமான அதிர்ச்சி இருந்தது..உன்னிடம் இதை எதிர்பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டும் தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.