(Reading time: 21 - 42 minutes)

ம்மா…

ஆன்ட்டி நடுல பேசுறேன்னு தப்பா நினைக்காதீங்க..நாதான் என் மனசுல இருந்தத சொன்னேன் அப்போவே அவ தெளிவா சொல்லிட்டா உங்க முடிவு ரொம்ப முக்கியம்நு..என்னால அவ இல்லாத லைப்அ நினைச்சு கூட பாக்க முடியாது..உங்களுக்கு புரியும்நு நம்புறேன்..

இதுக்கு எப்படி ரியாக்ட் செய்யனும்னு எனக்கு தெரிலப்பா..ஆனா கண்டிப்பா இத மகிட்ட எதிர்பாக்கல..என் குடும்பத்துல எத்தனையோ பேரோட எதிர்ப்பை மீறி தான் அவளை இங்க வேலைக்கு அனுப்பினேன் இவளோட ஆசைக்காக இவ மேல இருந்த நம்பிக்கைனால…அதுக்கு அவ தந்துருக்குற பரிசு தான் இது..

அம்மா……..

கண்களில் நீர் கட்டியிருந்தது மகிக்கு..ராமிற்கோ தன்னவளை மிகவும் வருத்துகிறோமே என்று இருந்தது..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தங்கமணி சுவாமினாதனின் "கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது..." - பெரியவர்களுக்கான மந்திர, மாயாஜாலங்கள் நிறைந்த வரலாற்று கதை...

படிக்க தவறாதீர்கள்...

நா இன்னும் முடிக்கல மகி..நீங்க யாருனே தெரியாது,பாத்து 10 நிமிஷம் தான் ஆகுது,உங்க பாமிலி பேக்ரவ்ண்ட் என்ன இப்படி எதுவுமே தெரியாம நா என்ன பதில் தம்பி சொல்றது..முதல்ல உங்க வீட்டுல இதுக்கு என்ன சொல்லுவாங்க???

எங்க வீட்ல சொல்லிட்டேன் ஆன்ட்டி அவங்களுக்கு முழு சம்மதம்..நீங்க அவங்களை மீட் பண்ணணும்நாலும் சொல்லுங்க அரேண்ஜ் பண்றேன்..இல்ல என்ன பத்தி விசாரிக்கனும்நு நெனைச்சாலும் விசாரிங்க..

இல்லப்பா இது சரி வராது..

ஏன் ஆன்ட்டி??

நீங்க இவ்ளோ தூரம் பேசுறீங்கனா மகி சம்மதம் இல்லாம இருக்காது..சோ நேரடியாவே சொல்றேன்..மகியோட அப்பா போனப்புறம் அவளை ரொம்பவே கஷ்டப்பட்டு தான் வளர்த்தேன்..யாரும் அவளை ஒரு வார்த்தை தப்பா சொல்லிற கூடாதுநு கண்டிப்போட தான் இருந்தேன் அவகிட்ட நா சிரிச்சு பேசின நாளைவிட கண்டிப்பா இருந்ததுதான் அதிகம்..இப்படி சின்ன சின்ன விஷயத்துக்கும் அடுத்தவங்களுக்கு பயந்து வாழ்றதுக்கு காரணம் பெண் பிள்ளை இருக்குறதுதான்,எங்களுக்குநு பேசுறதுக்கு மகிக்கு அப்பாவோ இல்ல அண்ணா தம்பியோ இருந்திருந்தா நா யாரை பத்தியும் கவலை படவேண்டியதில்லை..ஆனா ஆம்பளையில்லாத வீடுப்பா சொந்தபந்தமாவே இருந்தாலும் ஆயிரம் பேசும்..என் பொண்ணுக்கு அப்படி ஒரு நிலைமை வர வேண்டாம்ப்பா..அத தாங்கிக்குற சக்தி எனக்கு இல்லை..புரிஞ்சுப்பீங்கநு நம்புறேன்..

ராமோ வாயடைத்து போயிருந்தான்..காசு பணம் சாதி இவையெதையாவது காரணம் கூறியிருந்தால் எதிர்த்து வாதாடலாம்..இஇந்த தாயின் அன்பிற்கு எதிராய் என்ன பேசுவது..மகளுக்காக மட்டுமே யோசிக்கும் தாயின் முன் என்ன பேசுவது என்றே தெரியாமல் தான் நின்றான்..ஆனால் மகியோ உணர்ச்சி துடைத்த முகத்தோடு இருந்தாள்..கண்களில் கண்ணீர் இல்லை ஒருவித வலி தெரிந்தது..

ஆன்ட்டி நா என்ன சொல்ல வரேன்னா…

வேண்டாம் ராம்..நா பேசுறேன்..-மகி,

இப்படி ஒரு மகியை அவன் இதுவரை பார்த்ததில்லை..அப்படி ஒரு உறுதி அவள் வார்த்தைகளில்..முகம் பாறையாய் இறுகியிருந்தது..ஏதோ சரியில்லை என்று தோன்றியது,மகியின் தாய்க்கே ஆச்சரியமாய் இருந்தது..

அம்மா உங்க பொண்ணு வாழ்க்கைல முடிவெடுக்க வேண்டியது நீங்க தானே தவிர ஊர்ல இருக்குறவங்க இல்ல..இன்னும் எத்தனை நாளைக்கும்மா மத்தவங்களுக்கு பயந்துட்டு இருப்பீங்க,நீங்க சொல்ற சொந்தபந்தம் எல்லாம் நாம அப்பாவ தொலைச்சுட்டு நின்னப்ப எங்க போனாங்க???சொந்தம்ங்கிறது கஷ்டநஷ்டத்துல உதவ தானே தவிர நல்லது நடக்கும் போது கண்டத பேசுறதுக்கில்லை..போதும்மா இப்படி யார்யாருக்காகவோ என் சந்தோஷங்களை தொலைச்சது,அப்பா,அண்ணன் தம்பிநு யாருமே இல்லாம இருக்கிறது என் தப்பில்லம்மா..அப்படியிருக்கும் போது அதுக்காக இன்னும் எவ்ளோ தண்டனைகளை நா அனுபவிக்கனும்..இவரை உங்களுக்கு பிடிக்கல கல்யாணம் பண்ணித் தரமாட்டேன்னு சொல்லுங்க நா எந்த எதிர்பேச்சும் பேசாம நீங்க சொல்றத கேக்குறேன்..ஆனா அப்பவும் வேற யாரையும் நா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்…கல்யாணம்ங்கிற ஒண்ணே என் லைப்ல கிடையாது..லைப்ல நா நெனைச்தெல்லாம் கிடைச்சதில்ல என் அதிர்ஷடம் அவ்ளோதான்னு இப்பவும் நினைச்சுக்குறேன்…

மகி என்ன இதெல்லாம் நா ஆன்ட்டிட்ட பேசுறேன் நீ பொறுமையாயிரு..

இல்ல ராம் இதுக்கு மேல பேச ஒண்ணுமில்ல..இனி முடிவு பண்ண வேண்டியது எங்க அம்மா தான்..ஒருவேளை அவங்க முடிவுல எதுவும் மாற்றமிருந்தா நா உங்களுக்கு கால் பண்றேன் பை..போலாம்மா என்றவாறு திரும்பிகூட பார்க்காமல் சென்றுவிட்டாள்,விஜியோ சிறிய தலையசைப்போடு ராமிடம் விடைபெற்றுச் சென்றார்..ராமிற்கு இன்னும் ஒன்றும் புரியவில்லை..பரணியின் அழைப்பில் சிந்தனை கலைந்தவன் அவனை தான் இருக்குமிடத்திற்கு வர சொன்னான்..அவனிடம் நடந்ததை கூறியவன்..மகி இவ்ளோ பேசுவாநு நா நெனைக்கவேயில்லடா பரணி,அவங்க அம்மாநா அவளுக்கு உயிர் எனக்காக அவங்ககிட்டயே இவ்ளோ பேசிட்டாநு நெனைக்கும் போது கஷ்டமாயிருக்குடா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.