(Reading time: 21 - 42 minutes)

ரி விடு ராம் எல்லாம் நல்லதுக்குநு நெனைப்போம்..பட் மகி உணர்ச்சி வசப்பட்டு அப்படி பேசினாமாறி தெரிலடா..தப்புனவுடனே மனசுல பட்டத மறைக்காம பேசிட்டாநு தோனுது..உங்கிட்ட சொல்லனும்நு நெனைச்சேன் லாஸ்ட் வீக் அப்ரைசல் டிஸ்கஷன் ஒன் டு ஒன் இருந்தது..நம்ம மேனேஜர் பத்திதான் உனக்கு தெரியுமே பொண்ணுங்ககிட்ட எப்படி வழியுவான்னு..சேவர் சைட்க்கு மகிய எனக்கு கால் பண்ண சொல்லி அவ உள்ள போகும் போது லைன்லயேயிருந்தேன்..கடைசில அவன் நிலைமைதான் பரிதாபமா இருந்தது,சரியான ரேட்டிங் குடுக்கலநு காட்டு காட்டுநு காட்டிட்டா..அவன் நொந்துட்டான்..வெளிய வரும் போது அவன் மூஞ்சிய பாக்கனுமே வேர்க்க விருவிருக்க விட்டா போதும்நு ஓடியே வந்தான்..எதுக்கு சொல்றேன்னா அவன் மேனேஜர்ங்கிற பயம் கொஞ்சம் கூடயில்லாம தன்னக்கு தேவையானத வாங்க போராடினா...அதே மாறிதான் அவங்க அம்மா அப்படி பேசினதும் கோவப்பட்ருக்கா..ப்ரீயா விடுடா எல்லாம் சரி ஆய்டும்..என்றபடியே இருவரும் கிளம்பினர்..

மகியோ ஹாஸ்ட்டல் போகும் வரை வாயே திறக்கவில்லை..விஜியும் அவளிடம் பேச முயற்சிக்கவில்லை..இருவருக்குமே அந்த அமைதி தேவைப்பட்டது..இரவு உணவை முடித்துவிட்டு மகி படுத்துவிட்டாள்..தற்செயலாக மொபைலைப் பார்த்தவள் ராமிடமிருந்து வந்திருந்த மெசெஜை ஓபன் செய்தாள்,..

குட்டிமா ஏன்டா இப்படி பேசிட்ட,ஹவ் ஆர் யு அண்ட் அம்மா நவ்??சாரிடா நா உன் லைப்ல வராமயிருந்திருந்தா பல ப்ரச்சனைகளை தடுத்திருக்கலாம்..ரொம்ப கில்டீயா இருக்கு மகி..சாரி ஃபார் எவ்ரித்திங்..இத தவிர வேற என்ன சொல்றதுநு தெரில..டேக் கேர்..எனி டைம் எனி ஹெல்ப் கால் மீ டா..படித்தவளோ லேசாக சிரித்துவிட்டு,டோண்ட் டாக் அண்ட் திங்க் ரப்பிஷ்..எல்லாம் கூடிய சீக்கிரம் சரி ஆய்டும்..குட் நைட் டேக் கேர்..என்று பதிலளித்துவிட்டு உறங்கியும் போனாள்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நீலாவின் "இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

காலை எழுந்தவுடன் தாயை தான் முதலில் தேடினாள்..பக்கத்து கட்டிலில் அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருந்தார்..இவளை பார்த்து புன்னகைத்தவர்..மகி ரெடி ஆயிட்டு வா டிபன் சாப்ட்டு பக்கத்துல எங்கியாவது போய்ட்டு வருவோம் என்றார்,ஹம்ம்ம் சரிம்மா என்றவாறு குளிக்கச் சென்றாள்…அதன்பின் இருவரும் அருகிலிருந்த காபி ஷாப்பிற்குச் சென்றனர்..

மகி ராம்க்கு கால் பண்ணி குடுக்குறியா கொஞ்சம் பேசனும்-விஜி…

ஆச்சர்யமாய் ஒரு பார்வை பார்த்தவள் வேறு எதுவும் பேசாமல் கால் செய்து தாயிடம் நீட்டினாள்..

ஹலோ நா மகியோட அம்மா பேசுறேன்..

…………..

நேத்து நா பேசினத எதுவும் மனசுல வச்சுக்காதீங்க தம்பி..

……………

நாங்க இங்க பக்கத்துல காபி ஷாப்ல இருக்கோம் உங்களால இப்போ வர முடியுமா?

………………

சரி தம்பி வச்சுட்றேன்,

இந்தா மகி..10 நிமிஷத்துல வரேன்னு சொன்னாரு..அவருக்கும் வேணா காபி ஆர்டர் பண்ணிடேன்..

இல்ல வேண்டாம்மா இந்த டைம்ல அவரு காபி சாப்பிட மாட்டாரு என்றாள் தயக்கமாய்..அவளை பார்த்து சிரித்தவர்..ஹம்ம்ம் இவ்ளோ தெரிஞ்சு வச்சுருக்கியா மாப்ளைய பத்தி..

ம்மாமாமாமா…

அவள் கையை அழுந்தப்பிடித்தவர்..உன் சந்தோஷத்தை விட எனக்கு வேற எதுவும் முக்கியம் இல்லடா..உனக்காக அவர் என்கிட்டகூட உன்ன விட்டுகொடுக்காம பேசின விதத்திலேயே தெரிஞ்து அவர் உன் மேல எவ்ளோ அன்பு வச்சுருக்காருநு..அதையும் மீறி என்னோட பயம்தான் அப்படி பேச வச்சுது,ஆனா நீ பேசினத கேட்ட அப்பறம் தான் நா நமக்காக யோசிக்க ஆரம்பிச்சேன்..இத்தனை வருஷத்துல நீ என்ன எதிர்த்து பேசினதே கிடையாது..அப்படிபட்ட நீயே இவ்ளோ பேசிட்டனா அவர் உனக்கு எவ்ளோ முக்கியம்நு புரிஞ்சுகிட்டேன்..நீ சந்தோஷமா இருக்கனும்டா அது மட்டும் போதும் எனக்கு,யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை..

ரொம்ப ரொம்ப தேங்ஸ்மா..

பேசிக் கொண்டிருக்கும் போதே ராம் அங்கு வந்தான்,மகியின் முகமே ஆயிரம் விஷயங்களை உணர்த்தின..இருந்தும் அமைதி காத்தான்..

தம்பி.,சாரி மாப்ள இனி மகி உங்க பொறுப்பு என்றார் விஜி மகிழ்ச்சியோடு…

கேட்டவனுக்கோ வானத்தில் பறப்பது போல் இருந்தது,என் மகி எல்லோர் சம்மதத்தோடும் எனக்கு கிடைத்துவிட்டாள்..அவளது ஆசை நிறைவேறிவிட்டது..இனி என்றுமே இவள் என்னவள்..மகியும் அதே உணர்வில்தான் இருந்தாள்..தன்னவனை காதலோடு நோக்கினாள்..

ரொம்ப தேங்ஸ் ஆன்ட்டி எங்களை புரிஞ்சுகிட்டதுக்கு..இனி மகியபத்தி கவலையே படாதீங்க..என் கண்ணுக்குள்ள வச்சு பாத்துப்பேன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.