(Reading time: 13 - 25 minutes)

நீண்ட நேரத்திற்கு பின்,

"வீட்டுக்கு போகலாம் வா!"என்றான்.

"அண்ணா!"-அவள் வேண்டாம் என தலையசைத்தாள்.

கண்ணீர் ததும்ப அவளை தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டான் ராகுல்.

பேச்சில்லாமல் கௌதமை பார்த்தான் அவன்.அவன் கண்களின் கலக்கமே தவறு அவனுடையதல்ல என்பதை நிரூபித்தது!!!

"நான் கிளம்புறேன்!!!அனுவை ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க கௌதம்!அவளுக்கு ஒண்ணுன்னா என்னால தாங்க முடியாது!"-கௌதம் தலையசைத்தான் பேச்சிழந்தவனாய்!!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

தீக்ஷாவின் கனல் நிறைந்த பார்வையே கௌதமின் தவறை அவனுக்கு கூறியது!!!

நாம் சில நேரங்களில் செய்யும் மாபெரும் தவறு யாதெனின் நாம் பெரிய தியாகம் என்று ஆற்றும் சில தவறுகளே!!!நமக்கு தியாகம் என்று தோன்றும் செயல்கள் பலருக்கு வேதனைகளை விளைவிக்கலாம்!!!

சுயநலமில்லாமல்,பிறருக்காக ஆற்றுவதே தியாகம் எனப்படும்!!!நமது நிம்மதிக்காக ஆற்றப்படுவது தியாகமாகாது!!!

அகிலத்தின் நிதர்சனமான உண்மை அன்பு ஒன்று மட்டுமே!!!

அது என்றும் தோற்பதில்லை!நாம் சில நேரம் ஏமாற்றம் அடைந்ததால் அன்பு பொய்யாகி போகாது!மாறாக அது நமக்கு உரிதானதல்ல என்பதே உண்மை!!!அன்பை உணருங்கள்!!!அன்பை உணர எந்த ஒரு ஊடகமும் அவசியமானது அல்ல!!

வாரம் இரண்டு கழிந்தது!!!

"அனு!"

"ஆ..!"

"நாளைக்கு கொல்கத்தா கிளம்பணும்!ரெடியாகு!"

"இல்லை...நான் வரலைங்க!"

"நான் உன்னை வரீயான்னு கேட்கலை!கிளம்பு!கோபத்தை கிளப்பாதே!!"-அவன் சற்று கடுமையாக பேச ஆடிப்போனாள் அனு.

மௌனமாக தலையசைத்தாள்.

மறுநாள் கொல்கத்தாவில் இருந்தனர் இருவரும்!!

"நாளைக்கு ஈவ்னிங்!ஒரு பங்ஷன்!நீயும் கூட வா!"

"ம்...!"

"முக்கியமான விஷயம்!அந்த பங்ஷனுக்கு உன் பேவ்வரட் ரைட்டரும் வருகிறார்!"

"ம்..."

"என்ன நீ?எதுக்கெடுத்தாலும் 'ம்' தானா?"

".............."-அவள் மௌனம் சாதித்தாள்.கௌதம் பேசாமல் படுத்து உறங்க ஆரம்பித்தான்.எல்லாம் ஒரு இரவு மட்டும் தான்!!

அதன்பின் இந்த பிரிவு இருக்காது!!!

மறுநாள் மாலை....

பிரம்மாணடமாக அமைக்கப்பட்டிருந்தது அந்த மேடை!!!

பல முன்னணி எழுத்தாளர்கள் அங்கு திரண்டிருந்தனர்.

இவர்கள் உள்ளே நுழைந்ததும்,

"வெல்கம் மிஸ்டர்.அண்ட் மிஸஸ் கௌதம் என்று வரவேற்றனர் சிலர்!!!

"உங்களை பார்த்ததுல சந்தோஷம்!"

"தேங்க்யூ மிஸ்டர் சேகர்!"-இருவரும் முன்வரிசையில் அமர்ந்தனர்.

நடந்த ஏற்பாடுகளை எல்லாம் கண்டு குழம்பி போயிருந்தாள் அனு.

"உன் ஹார்டி ரைட்டரை பார்க்கணும்ல!வருவார் பாரு!!"என்று அவள் காதில் கிசுகிசுத்தான் கௌதம்.

"லேடிஸ் அண்ட் ஜென்டில்மென்!!இருபது வருஷமா கொல்கத்தாவுல இருக்கிற,'அகரம் அகாதமி'தமிழ் மொழியோட சிறந்த நூல்களை தேர்ந்தெடுத்து அதில் சிறந்த நூலுக்கு விருது தருது!இது ரொம்ப கௌரவமான விருதாகவே மதிக்கப்படுது!இருபது வருஷ சரித்திரத்துல,இந்த விருதை வாங்கினவங்க எல்லாரும் லெஜண்ட்ஸ் தான்! For the first time this precious award goes to a youngster Mr.Gawtham!"என்றார் தொகுப்பாளர்.

"கௌதம் அவர்கள் மேடைக்கு வந்து விருதை பெற்றுக்கொள்ள பணிக்கப்படுகிறார்!"-என்றார் முன்னணி கதாசிரியர்.

அரங்கமே அதிர்ந்தது!!!

அனுவின் பார்வை கூர்மையானது!!கௌதம் ஒரு புன்னகையோடு எழுந்து சென்றான்.

பணிவோடு விருதை வாங்கி,விருதை அளித்தவரின் பாதம் பணிந்தான்.

"மிஸ்டர்.கௌதம்!"உயிரோடு உறவாக!"நாவலுக்காக இந்த விருதை வாங்கி இருக்கீங்க!எல்லார் மனதிலும் பதிந்த நாவல் அது!how do u feel?"

"அனைவருக்கும் வணக்கம்!"-என்றதும்,மீண்டும் அரங்கம் அதிர்ந்தது.

"இது எனக்கு சொந்தமானதில்லை!இந்த விருது என் தமிழுக்கு சொந்தமானது!!எனக்கு வாழ்க்கையை போதித்த மொழி!அதன் மூலமா எழுந்த கதை,கதை மூலமாக எழுந்த பெருமை அதை உருவாக்கின தமிழுக்கு தான் சேரும்!இந்த இடத்துல பெருமையாகவே சொல்லலாம்!அந்த தமிழோட வாரிசுகளில் கௌதமும் ஒருத்தன்!"-அவன் பேச பேச ஆரவாரம் அதிகரித்துக்கொண்டே போனது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.