(Reading time: 9 - 17 minutes)

01. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

நீல நிற வானத்தில், அங்கங்கே சிவப்பு ரேகைகளாய் பொன்னிற கதிரவனின் உதயம் நிகழ,  வானத்தில் திரண்டு அவ்வபோது நகர்ந்து கொண்டிருந்த மேகத்தின் மீது அச்செந்நிறக்கதிர் பட்டு எதிரொலித்து விழ, அவள் முகமெங்கும் குங்குமப் பூச்சுகள்… அதில் சொக்கிப்போன அந்த நீலநிறத்தவன், அவளை அப்படியே அவனுக்குள் புதைத்து கொள்ள விழைய, அவள் தன்னவனின் கரங்களுக்கு அகப்படாமல் தப்பி நழுவிச் செல்ல, கடல் போல் பரந்திருந்த அவனின் நெஞ்சமும் அவளைப் பின் தொடர்ந்தது சிந்தை மயங்கி தன்னவள் போகும் பாதை எங்கும் தான் கொண்ட நிகரில்லாத தீராத மருவக் காதலோடு….

“தைஜூ….” என சமையலறையிலிருந்து வந்த உரத்த அழைப்பில் சட்டென விழித்துக்கொண்டவள் எழுந்து மணி பார்த்த போது அவளையும் அறியாமல், “6 மணி ஆகிடுச்சா???... கடவுளே… நான் இன்னைக்கு அவ்வளவுதானா?... கடவுளே என்னை எப்படியாவது காப்பாத்துப்பா…” என கை கூப்பி வேண்டிக்கொண்டிருக்க,

“ஹேய்… நீ இன்னும் கட்டிலை விட்டு கீழே இறங்கலையா?... இரு நான் கீழே போய் சொல்லிக்கொடுக்கிறேன்…” என்ற மிரட்டலோடு அவளது அன்னை காதம்பரி வர,

“அய்யோ… அம்மா…” என்றபடி எழுந்தவள், அவரிடத்தில்,  

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தங்கமணி சுவாமினாதனின் "கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது..." - பெரியவர்களுக்கான மந்திர, மாயாஜாலங்கள் நிறைந்த வரலாற்று கதை...

படிக்க தவறாதீர்கள்...

“நீ என் செல்ல அம்மால்ல… கீழே போய் மாட்டி எல்லாம் கொடுக்கக்கூடாது… நல்ல அம்மால்ல…” என்று கொஞ்ச,

“ஓ… சொல்லிக்கொடுக்கலைன்னா நான் நல்ல அம்மா, அப்போ சொல்லி கொடுத்தா நான் கெட்ட அம்மாவா?...” என்று அவர் முறைக்க,

“அச்சச்சோ… அம்மா…. நான் எப்போ அப்படி சொன்னேன்… நீயா எதாவது கற்பனை பண்ணி அதுக்கு என்னை பொறுப்பு ஆக்காத….” என்றாள் அவள் முதலில் கொஞ்சம் கெஞ்சலுடனும் பின்னர் கொஞ்சம் குரல் உயர்த்தியும்…

“ஓ….. நானா கற்பனை பண்ணிக்கிறேனா?... அப்போ கீழே நான் பார்த்துட்டு வந்தது கூட கற்பனை தானோ?...” என அவர் வெகு இயல்பாக கேட்க,

“என்னது?????????????????????................” என மொத்தமாக அரண்டு போனாள் அவள்…

“எதுக்குடீ இப்படி கத்துற?... நீ கத்துற கத்தலுக்கு கீழே இருந்து ஆள் மேல வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல…” என்று அவர் சொல்லவும்,

“அம்மா… ப்ளீஸ்… உன் திருவாயால அப்படி ஒரு வார்த்தையை சொல்லாத… நான் போய் ரெடி ஆகிடுறேன்… சீக்கிரம்…” என்றாள் அவள் அவசரமாய்…

“சொல்லுறியே தவிர, செஞ்ச மாதிரி தெரியலையே எனக்கு…” என அவர் கிண்டலாக பேசவும்,

“போதும் போதும்… இங்க இருந்து என்னை கிண்டல் செஞ்சது… போய் முதலில் அப்பாவுக்கு ஒரு காபி கொடுத்து உங்க கடமையை ஸ்டார்ட் செய்யுங்க… அப்புறம் வந்து என்னை கேலி பண்ணுங்க… சரியா?...” என வாய் பேசியவாறு நின்று கொண்டிருந்தவளை முறைத்தவர்,

“நீ எல்லாம் ஒருநாளும் திருந்தமாட்டடீ…” என சொல்ல,

“அய்ய்யயோ… அப்பப்பா…. அப்புறம்???….” என கேள்வி கேட்டாள் அவள்…

“உனக்கு மனசுல சமந்தான்னு நினைப்பா?.... சும்மா அவ சொல்லுற டையலாக் எல்லாம் சொல்லிகிட்டு…… போடி....…”

“இதோடா… வயசுப்பொண்ணு நான் சமந்தா தான்… பட் நீங்க அந்த சமந்தாவையே பெத்தெடுத்த முத்து தாயல்லவோ…..” என அவரின் கன்னம் பிடித்து அவள் முத்தம் கொடுக்க,

“சீ….. எடுடி… கைய… எத்தனை நாள் சொல்லியிருக்குறேன்… குளிக்காம என்னை தொடாதன்னு… இந்த லட்சணத்துல இன்னும் பல்லு கூட விளக்காம முத்தம் வேற… சீ… விடுடி… என்னை…” என்றவாறு அவர் அவளை விலக்கிவிட்டார்…

“அம்மா…. ரொம்ப பண்ணாத சரியா?... இப்போ வேண்டான்னு சொன்ன நீதான் அம்மாவுக்கு ஒரு முத்தம் கொடுடா… ஒன்னே ஒண்ணு கொடுடான்னு எங்கிட்ட கெஞ்சியிருக்க… அது நியாபகம் இருக்கட்டும் சொல்லிட்டேன்….” என அவள் கோபமாக சொல்ல,

“அது அப்போ நீ சின்னப்பிள்ளை… இப்போதான் எருமை மாடு மாதிரி வளர்ந்திருக்குறியே இன்னும் என்ன முத்தம் கித்தம் எல்லாம்?...” என்றார் அவரும்….

“எந்த ஊருல இப்படி எருமை அழகான நைட்டியில சூப்பரா அம்சமா இருக்குது உனக்கு?...” என அவள் எதிர்கேள்வி கேட்க

“எது… அம்சமாவா?... அது யாருடீ?.. என் கண்ணுக்கு எருமை மட்டும் தான தெரியுது… அழகு, அம்சம் எல்லாம் என் கண்ணுக்கு தெரியலையேடீ ராசாத்தி….” என அவர் சிரித்துக்கொண்டே சொல்ல,

“நீயா பேசியது…… என் அம்மா…. நீயா பேசியது?..........................” என அவள் சோகமே உருவாக பாடினாள்…

“சகிக்கலைடீ… காலையிலேயே ஏண்டி இப்படி என் காதுல ரத்தம் வர வைக்குற?... காதம்பரின்னு பேரு வச்ச பாவத்துக்கு உன் பாட்டை கேட்டு நான் காதில்லாம இருக்கணுமா?... வேணாம்டி… பாடாத… ப்ளீஸ்...” என்றதும்,

“நீ கூட வர வர என்னை வச்சு காமெடி பண்ண ஆரம்பிச்சிட்டல்லம்மா…. எல்லாம் கீழ இருக்குற என் விதி பண்ணுற வேலை…” என நொந்து கொண்டாள் அவள்…

“என்னடி… இப்படி சட்டுன்னு மாத்தி சொல்லுற?... நான் இத்தனை நாள் வேறல்ல நினைச்சேன்… அப்போ அது விதியா?... சதி இல்லையா?....” என்றதும், அவரின் வாயைப்பொத்தியவள், அவருக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு,

“காதம்பரி தாயே… போதும்… இதோட நிப்பாட்டிக்கலாம்….” என்றபடி குளியலறைக்குள் புகுந்து கொள்ள, காதம்பரியோ விழுந்து விழுந்து சிரித்தார்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.