(Reading time: 19 - 37 minutes)

17. கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - தங்கமணி சுவாமினாதன் 

Koncham periya kuzhanthaigalukkana kathai ithu

செழித்து வளர்ந்திருந்த புல்தரையில் பரக் பரக் என்று புற்களைப் பற்களால் பற்றி இழுத்து மேய்ந்து கொண்டிருந்தது ஹஸ்தனின் குதிரை.என்ன தோன்றியதோ மேய்வதை நிறுத்தி விட்டு சுற்றும் முற்று பார்த்தது.சட்டெனத் திரும்பி ஹஸ்தன் தங்கியிருந்த இடம் நோக்கி ஓடிவரத் தொடங்கியது.அது என்ன நினைத்து ஓடிவந்ததோ அதுவே நடந்து விட்டதாக எண்ணியதோ என்னவோ ஹஸ்தன் விழுந்து கிடந்த இடம் வந்ததும் சத்தமாய் கனைத்தது.மயங்கிக் கிடந்த ஹஸ்தனைச் சுற்றிச் சுற்றி வந்து அவனை முகர்ந்து முகர்ந்து பார்த்தது.பின்னர் மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியை நோக்கி ஓடியது.

தெருவில் வேகமாய்க் குரலெழுப்பிக் கனைத்துக்கொண்டே இங்கும் அங்கும் ஒடியது குதிரை.இதென்ன இக்குதிரை ஏன் இப்படிக் கனைப்பதும் இங்குமங்குமாக ஓடுவதுமாக இருக்கிறது?இது ஏதும் சொல்ல நினைக்கிறதோ?என்று தோன்றியது அத்தெருவாசிகளுக்கு.அப்போது இரு குதிரைகளில் இரண்டு வீரர்கள் அவ்வழியாக வர அவர்களும் குதிரை இவ்வாறு கனைப்பதும் இங்குமங்கும் ஓடுவதுமாக இருக்கக் கண்டு சட்டென தங்கள் குதிரையிலிருந்து கீழே இறங்கி ஹஸ்தனின் குதிரையைத் தொட்டு அதைத் தடவிக் கொடுக்க குதிரை அவ்வூரின் அருகாமையில் அமைந்திருக்கும் ஹஸ்தன் மயங்கிக் கிடக்கும் காட்டுப் பகுதியை நோக்கி துரிதமாய் நடக்கலாயிற்று.அவ்விரு வீரர்களும் அக்குதிரையைப் பின்தொடர்ந்தனர் அக்குதிரை அழைத்துச் செல்லும் இடத்தில் தாங்கள் காணப்போகும் காட்சி எத்தனை கொடுமையான தாக பாண்டிய நாட்டின் விதியை நிர்ணயிக்கப் போவதாக இருக்கப் போகிறது என்பதை அறியாதவர்களாக.

தன் மந்திரிப் பிரதானிகளுடனும் தளபதி மற்றும் அரண்மனை ஜோதிடர்கள்,ராஜ குரு மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களோடு மிக மிகிழ்ச்சியோடு மதிவதனி-விமலாதித்தன் திருமண நிச்சயதார்த்தத்திற்கான நாளைக் குறிப்பது பற்றியும் சோழ நாட்டோடு பாண்டிய நாட்டுக்கு ஏற்படப்போகும் இந்த திருமணத் தொடர்பால் எத்தகு நற்பலன்கள் விளையும் என்றும் தன் மகளின் வாழ்க்கை எப்படியொரு மகோன்னத நிலையை அடையும் என்றும் பேசிக்கொண்டிருந்த மன்னர் அதிவீரன் மகள் மதிவதனியைக் காணப்புறப்பட எண்ணினார்.போட்டிகளில் விமலாதித்தன் ஜெயித்தபிறகு அவனுக்கு வாழ்த்து தெரிவித்து இளவரசி மதிவதனிக்கும் சோழ இளவரசர் விமலாதித்தனுக்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறும் என அறிவித்தபிறகு மகளோடு பேசும் சந்தர்பம் கிடைக்கவில்லை.தந்தையே தந்தையே என தன்னைச் சுற்றி வரும் மகள் நீண்ட நேரமாகியும் தன்னை ஏனோ தேடி வரவில்லை..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நீலாவின் "இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

ஒருவேளை திருமணம் என்றதும் வெட்கமாகிவிட்டதோ?இந்தப் பெண்களே இப்படித்தானோ?திருமணமே வேண்டாம் என்பார்கள்..பிடிவாதம் பிடிப்பார்கள்..அழுவார்கள் உங்களையெல்லா எப்படிப் பிரிவதென்று?..நிச்சயம்  என்று ஆகிவிட்டால் நாணம் வந்துவிடுமோ?மனதிற்குள் சிரித்துக் கொண்டார் அந்த பாசம் மிக்க தந்தை.ம்ம்ம்..போறேன் போறேன் என் மகளை எப்படியெல்லாம் பரிகாசம் செய்கிறேன் பார் என்று மனதில் நினைத்தவாறு கிளம்பியவரை..

மன்னா..மன்னா..அரசே..அரசே என்ற கத்திக்கொண்டே ஓடிவரும் வீரன் ஒருவனின் குரல் தடுத்து நிறுத்தியது.கத்திக் கொண்டே ஓடிவரும் வீரனின் பின்னே இன்னொரு வீரனும் பதைபதைப்போடு ஓடிவந்தான்.

மன்னா..மன்னா..அரசே..நாம் மோசம் போனோம் மன்னா..நடக்கக்கூடாதது நடந்து விட்டது மன்னா...

அடேய்..நிறுத்து..ஏன் இப்படி அபசகுணமாகப் பேசுகிறாய்..இளவரசியின் திருமணம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கு இச் சுப வேளையில் இதென்ன...அபத்தமான வார்த்தைகள்..?

இல்லை மன்னா..இல்லை இல்லை..மன்னிக்க வேண்டும் அரசே...உண்மையில் கேடு நடந்து விட்டது மன்னா..

என்ன சொல்கிறாய் நீ..?என்ன கேடு விளைந்து விட்டது..?ஏதாவது யானையோ பூனையோ இறந்து விட்டதா?..பெரிதாகச் சொல்ல வந்துவிட்டாய்..

இல்லை மன்னா..அதை எப்படி மன்னா நான் சொல்லுவேன்..மன்னாதி மன்னா அரசர்க்கரசே...என் உடல் நடுங்குகிறது..கண்ட அந்த கொடுமையைச் எப்படிச் சொல்வேன் மன்னா..?

என்ன கொடுமையைக் கண்டுவிட்டாய் சொல்..

சோழ இளவரசர் கொலையுண்டார் மன்னா..

என்னடா சொல்கிறாய்..?இப்படிச் சொல்ல உனக்கு என்ன தைரியம்..?உன் நாவை அரிந்து விடுவேன்..

ஆம் மன்னா இவ்வீரர் சொல்வது உண்மைதான் மன்னா..சோழ இளவரசர் விமலாதித்தன் கொலை செய்யப்பட்டு காட்டுப்பகுதியில் உயிரற்ற சடலமாய்க் கிடக்கிறார் மன்னா..இரண்டாவது வீரரும் விமலாதித்தன் கொலையுண்ட விஷயத்தை உறுதிப்படுத்த...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.