(Reading time: 19 - 37 minutes)

ன்ன நடந்தது சொல்லுங்கள்..

மகாராணி...சோழ இளவரசர் விமலாதித்தன் கொலை செய்யப்பட்டுள்ளார்...

ஐயோ இதென்ன விபரீதம்..?இதென்ன கொடுமை..?இது எப்படி நேர்ந்தது..?யார் இந்த கொடுமையைச் செய்தது..?சோழ மன்னனுக்கு இதை எப்படித் தெரிவிப்பது..?மகன் கொலையுண்டான் என அறிந்தால் அவன் என்ன செய்வான்..இந்த பாண்டிய நாட்டுக்கு என்ன கேடு விளையப்போகிறதோ?தெய்வமே..என்ன செய்வது இனி..பெரும் அபகீர்த்தி ஏற்பட்டுவிட்டதே..?இனி என் மகளின் வாழ்க்கை என்னாகும்?.திருமணத்திற்காக 

நிச்சயிக்கப்பட இருந்தவன் மாண்டு போனால் அவள் மீது துடைக்கவொண்ணா பழி வந்து சேருமே..?இக்கொடுமையை என் மகள் கேட்க நேர்கையில் அவள் மனம் என்ன பாடு படும்?அவள் மனம் கலங்கிப் போகுமே..?அவளை எவ்வாறு நான் தேற்றுவேன்..?அவள் முகம் வாட அதை என்னாலும் அவளின் தந்தையாலும் காண இயலாதே..?இதோ போகிறென்..இதோ போகிறேன் என் மகளைக்காண..மதிவதனி..

மதிவதனி என் செல்லமே..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "தமிழுக்கு புகழென்று பேர்..." - நட்பும் காதலும் கலந்த தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

ளவரசி..இளவரசி..மதி...மதி..பதை பதைப்போடு சப்தமிட்டுக்கொண்டே உள்ளே ஓடி வந்த சுசீயை நிதானமாகப் பார்த்தாள் மதிவதனி..இவள் என்ன சொல்லிவிடப்போகிறாள்..விமலாதித்தனோடு நடக்கவிருக்கும் நிச்சயதார்த்தத்தைப் பற்றிப் பேச தன்னைப் பார்க்க தந்தையும் தாயும் வருகிறார்கள் என்று சொல்ல இப்படி ஓடி வருகிறாள் போலும் என நினைத்தாள் மதிவதனி.அதன் காரணமாய் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாது அமர்ந்திருந்தாள்.

மதி...நடக்கக் கூடாதது நடந்து விட்டது மதி..பெருங்க் கொடுமை நிகழ்ந்து விட்டது..ஆம் மதி..சொல்லவே நெஞ்சம் நடுங்குகிறது..ஆனாலும் சொல்லித்தானே ஆகவேண்டும்..

என்னடி பெரிதாய் பீடிகை போடுகிறாய்..என்னை பதைக்கவைக்கும் நிகழ்வு இனி என்ன இருந்துவிடப் போகிறது..ஒரு வேளை நாளையே எனக்கும் விமலாதித்தனுக்கும் திருமணம்  செய்ய முடிவு செய்து விட்டாரோ என் தந்தை..?அவ்வாறாயின் அவர் அதைச் செய்து முடிக்கும் முன்னரே என் உயிர் போயிருக்கும்.அப்படியொரு முடிவு அவர் எடுப்பாராயின் என் உயிரை மாய்த்துக்கொள்வேன் நான்.

இளவரசி வேண்டாம் இந்த விபரீதப் பேச்சு..அப்படி இல்லை..வேறொன்று நடந்து விட்டது..மதி..

என்ன நடந்து விட்டது சொல் சுசீ..

மதி...சோழ இளவரசர்...

ஏன் அவருக்கென்ன..?என்னைப் பார்க்க வேண்டுமாமா..?அது நடக்காது..

அவசரப்படாதீர்கள் மதி...உங்களைப் பார்க்க அவர் வர விரும்பினாலும் அவரால் வரமுடியாது இளவரசி.

ஏன் ..நாடு திரும்பிச் சென்று விட்டாரோ?..

இல்லை இளவரசி..சோழ இளவரசர் விமலாதித்தன் கொலை செய்யப்பட்டுவிட்டார்..

என்ன கொலை செய்யப்பட்டுவிட்டாரா..?நொடிக்கும் குறைவான நேரம் மதிவதனியின் குரலிலும் முகத்திலும் மகிழ்ச்சியின் சாயல் வந்து சென்றார்ப்போல் இருந்தது சுசீக்கு.ச்சே..அப்படி யிருக்காது என நினைத்துக்கொண்டாள் அவள்.ஆனாலும் அதுதான் உண்மை என்பது பாவம் அவளுக்குத் தெரியாது.

ச்சே..இதென்ன கொடுமை நாம் இப்படி மகிழ்ச்சி கொள்வது தவறல்லவா?எனத் தன் மனதைக் கடிந்து கொண்டாள் மதி.பதட்டம் அவள் குரலிலும் ஒட்டிக்கொண்டது...

என்ன சொல்கிறாய் சுசீ..இதென்ன கொடுமை..?ஏன் இப்படி நிகழ்ந்தது..?யார் விமலாதித்தனைக் கொன்றிருப்பார்கள்..?இவ்விஷயம் அறிந்து என் தந்தை என்ன பாடு பட்டிருப்பார்..?அவர் சோழ மன்னனுக்கு

என்ன பதில் சொல்வார்?அந்தப் பாவி கொலைகாரன் யார் என்பது தெரிந்து விட்டதா?அவனை..அவனை..

மதி அமைதியாய் இருங்கள் மதி..நான் மேற்கொண்டு சொல்லப்போவததைக்கேட்டு அதிர்ச்சி அடையாதீர்கள்..மனதைத் திடப்படுத்திக்கொள்ளுங்கள்..

இன்னும் என்ன மிச்ச்ம் இருக்கிறது சொல்ல..இந்தப் பாண்டிய நாட்டுக்குக் கேடு விளைவிக்க இந்த விஷயம் ஒன்றே போதாதா?..

இளவரசி..கொலைகாரன் யார் என்பது தெரிந்துவிட்டது...

தெரிந்து விட்டதா?யார் அவன் யார் அந்த கயவன்?நம் மண்ணில் வந்து இக்காரியத்தை ஏன் அவன் நிறைவேற்றினான்?பாவி..பாவி..

அந்தக் கொலைகாரன்..அந்தக்கொலைகாரன்...மத யானையை அடக்கிய குப்த ராஜ்ஜியத்து இளவரசர் ஹஸ்த குப்தனாம்.அவர்தான் கொலைகாரறாம்..அவரும் தோளிலும் இடுப்பிலும் கத்தியால் குத்தப்பட்டு மயங்கிய நிலையில் குத்துயிரும் குலையுயிருமாகக் கிடக்கிராறாம்....நேரில் பார்த்தவர்கள் மன்னரிடம் சொல்லுவதைக் கேட்டேன் இளவரசி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.