(Reading time: 19 - 37 minutes)

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு சுசீயின் அருகே வந்தவன்..என்ன சுசீ ஊருலேர்ந்து எப்ப வந்த?வந்துட்டத சொல்லக்கூட மாட்டியா?ஏதாவது விஷயம் உண்டா?இந்த மொறையாச்சும் ஒங்கப்பன் ஏதும் சொல்லிச்சா?

அதெல்லாம் அப்பறம் சொல்ரேன்..ஒரு முக்கியமான விஷயம் ஒங்கிட்ட கேக்கணும்...

கேளு சுசீ...ஒனக்கு சொல்லாமலா..?

காளி..சோழ இளவரசர் கொலையுண்ட எடத்துலேர்ந்து தானே நீ வர?அங்கே என்ன நடந்திச்சு..கொஞ்சம் விரிவா சொல்லேன்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மனோஹரியின் "காதல் பின்னது உலகு" - கல்யாணமாம் கல்யாணம்…

படிக்க தவறாதீர்கள்...

சுசீ...செத்து சடலமாக் கிடந்த சோழ இளவரசரப் பாத்த மன்னர் அப்படியே கலங்கிப் போய்ட்டாரு.அவரு உடம்ப சகல மரியாதையோட சோழ நாட்டுக்கு அனுப்பிவெச்சிட்டு தளபதி மார்த்தாண்ட பூபதியையும் மந்திரிங்க சில பேரையும் கூடவே அனுப்பிவெச்சாரு.அடுத்தாப்புல அங்கே மயங்கிக் கிடந்த  இதோ வண்டியில கெடுக்குறானே இந்த கொலகாரப் பாவிகிட்ட வந்த ஒடனேயே வாள எடுத்துக்கிட்டு ஓரே வெட்டா இவன வெட்டுரேன்னு போனாரு..அப்பரம் என்ன நெனச்சாரோ மயக்கமா இருப்பவன வெட்டுரது கோழத்தனம்..இவனுக்கு சிகிச்ச கொடுத்து பொழைக்கவெச்சு இவன் சோழ இளவரசர ஏங்கொன்னான்?

உண்மைலயே இவந்தான் கொன்னானா?அப்பிடின்னு விசாரண பண்ணணும்.அதுவர இவன சிறையில அதுவும் கொடுமையான தனிமை சிறையில அடைக்க உத்தரவு போட்டிருக்காரு.சிறையிலேயே இவனுக்கு

சிகிச்சை தர உத்தரவு போட்டிருக்காரு மன்னர்.இவனுக்கு சிகிச்சை முடிந்து இவன் பூரணமா கொணமானதும் இவனுக்கு மரண தண்டனை கொடுத்து கழுவிலேற்ற இருப்பதாகவும் சொன்னாரு.மன்னர் கொடுக்கவிருக்கும் தண்டனை மிகவும் சரியானதுதான் இந்தப் பாவிக்கு.இந்தக் கொலைகாரனுக்கு என்றான் காளி.

ஐயோ..தனிமைச் சிறையா?மிகவும் கொடுஞ்சிறை தண்டனையாயிற்றே அது..?..என நினைத்த சுசீ மதியை நினைத்துக் கலங்கினாள்.

சரி சரி..வண்டி நகருது..சிறைக்குக் கொண்டு போறாங்க போலருக்கு..நான் கிளம்புறேன் சுசீ...இவளின் பதிலை எதிபார்க்காமல் ஓடினான் காளி..

ன்றிரவு மன்னர் அதிவீரனுக்காகட்டும் ராணி ருக்மாவுக்காகட்டும் இளவரசி மதிக்காகட்டும் ஏன் சுசீக்கும் கூட தூங்காத இரவாகவே கழிந்தது.

இரவெல்லாம் சிந்தித்து சிந்தித்து களைத்துப்போன ராணி ருக்மா ஏதோ ஒரு முடிவை எட்டியிருந்தார் என்பதை அவரின் உனர்ச்சியற்ற கல்போல் ஆகியிருந்த முகத்தைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் புரியும்.

மன்னர் அதிவீரனோ யாருடனும் பேசவே இல்லை.இனி என்ன நடக்குமோ?சோழனின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்குமோ என்ற சிந்தனையோடவே இருந்தது.ஹஸ்த குப்தனை எண்ணிஎண்ணி ஆத்திரப்பட்டது.

தனிமைச் சிறை எனும் கொடுஞ்சிறையில் அதிகம் வெளிச்சமோ காற்றோ மனித முகங்களோ தென்படாத தனிச் சிறையில் ஹஸ்த குப்தன் சிறை வைக்கப்பட்டு ஒரு வாரம் ஆகியிருக்கும்.தொடர்ந்து தரப்படும் தீவிர சிறப்பு சிகிச்சையாலும்,சத்து மிகுந்த பானங்களாலும் அவனது காயங்கள் ஆர ஆரம்பித்தன.உடலும் கொஞ்சம் கொஞ்சமாக தேற ஆரம்பித்தது.ஆனாலும் இன்னும் எழுந்து அமர முடியாத நிலை.அவன் முதல் முதலாய் மயக்கத்திலிருந்து கண் விழித்ததுமே தான் சிறை வைக்கப்பட்டிருப்பதை அறிந்து கொண்டான்.

சோழ இளவரசர் விமலாதித்தனைக் கொன்றது தாம்தான் என்று அறியப்பட்டிருக்கிறோம் என்பதையும் அதனால்தான் சிறைபட்டிருக்கிறோம் என்பதையும் புரிந்து கொண்டபோது அவனுக்கு என்ன செய்வதென்ற தவிப்பு ஏற்பட்டது.விமலாதித்தன் கொலை செய்யப்படும் நேரத்தில் நடந்த நிகழ்வுகள் மனக் கண் முன்பு தோன்றி மறைந்தன.தான் குத்தப்பட்டு மயங்கும் நேரத்தில் கடைசியாய் காதில் விழுந்த கோஷம் நினைவு வந்தது.என்ன கோஷம் போட்டார்கள்? விமலாதித்தனைக் கொன்று தன்னைக் குத்திக் காயப்படுத்தியவர்கள்?சேர இளவரசர் மாறவர்மன் வாழ்க..சேர இளவரசர் மாறவர்மன் வாழ்க என்றல்லவா கோஷமிட்டார்கள்.அப்படியானால் விமலாதித்தனைக் கொன்றது மாறவர்மன் ஆட்களல்லவா?ஆக விமலாதித்தன் கொலைக்குக் காரணம் மாறவர்மனல்லவா?விமலாதித்தனைக் காப்பாற்றச் சென்ற நம்மீதல்லவா கொலைப் பழி வீழ்ந்துள்ளது?நான் நிரபராதி..குற்றமற்றவன் என்பதை எப்படி நிரூபிப்பது?ஐயோ..மதிவதனி நம்மைப் பற்றி என்ன நினைத்திருப்பாள்?கொலைகாரனென்றல்லவா நினைத்திருப்பாள்?பொறாமையால் விமலாதித்தனைக் கொன்றதாக நினைத்திருப்பாளோ?அவளிடம் நான் குற்றமற்றவன் என்று எப்படிச் சொல்லுவேன்?அவளைச் சந்திக்க முடிந்தாலல்லவா சொல்வதற்கு?இளவரசி..இளவரசி..என்னை நம்புங்கள் என்னை நம்புங்கள்..நான் கொலைகாரன் இல்லை..நான் கொலைகாரன் இல்லை..சப்தமாய்க் கத்திச் சொல்லவும் கூடத்  தெம்பில்லாமல்  தீனமாய்ப் புலம்பும் அவன் கூற்றைக் கேட்க அங்கே எப்பொழுதாவது வந்து செல்லும் காற்றுக்குக்கூட காதில்லையோ?

மிகப் பெரிய குப்த ராஜ்ஜியத்தின் இளவல்...வெகு தூரம் வந்து..கொலைப் பழி சுமந்து பாண்டிய நாட்டின் தனிமைச் சிறையில் அடைபட்டுக் கிடப்பது விதியின் விளையாட்டல்லாது வேறென்ன?

நன்றி....

தொடரும்...

Episode 16

Episode 18

{kunena_discuss:956}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.