(Reading time: 32 - 63 minutes)

01. இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா - நீலா

iruvar kannukkum ore nila

திகாலை மார்கழி பனிக்காற்று சில்லென்று உடலை தீண்டீ சென்றது. அந்த குளிர் புதுவித உற்சாகத்தை விதைத்து சென்றது. மனதிலும் உடலிலும் புதிய சிலிர்ப்பூட்டும் விதமாய்!

பூஞ்சோலை! மார்கழி ஒன்றாம் தேதி... அந்த இடமே விழாக்கோலம் பூண்டிருந்தது!

என்ன ஏதோ ஒரு கிராமத்தை பற்றி சொல்லறேனு நினைச்சுடீங்களா?? அதுதான் இல்லை!! 

பரபரப்புக்கு பஞ்சமில்லாத மத்திய சென்னையான மயிலாப்பூரில் இன்றும் எஞ்சியிருக்கும் பழைமை மாறாத சில இல்லங்களில் ஒன்றுதான் மேலே குறிப்பிட்ட இடம். 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

பூஞ்சோலை என்ற பெயர் பலகையையும் மற்றொரு புறம் திருமதி தாமரை சூர்யபிரகாசம் என்ற பெயர் பலகையையும் தாங்கிய அந்த இல்லம்... இல்லை அதை பங்களா என்றே சொல்ல வேண்டும். மிகவும் அழகாக இருந்த அந்த பங்களாவின் முன் புறத்தில் பல வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் பூந்தோட்டம் இருந்தது... வீடு சற்றே உட்புறமாக அமைந்திருந்தது. வாசலில் நுழையும் போதே மலர்கள் தங்கள் நறுமணத்தினாலும் கண்கவர் வண்ணத்தினாலும் மனதிற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே கொடுத்தன! அந்த பூந்தோட்டத்தை பார்க்கும் போது இந்த இடத்திற்கு பூஞ்சோலை என்ற பெயர் மிகவும் சரி தானே என்றே தோன்றும்! ஆனால் அந்த பெயருக்கு இது மட்டுமா காரணம்... இல்லையே! 

அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தனர் நான்கு பெண்கள். என்னதான் நடக்குதுனு பார்ப்போமே.. வாங்க!

ஏய் மலர்! சீக்கிரமா இதுல எல்லாம் கலர் பொடி நிறப்பு! - என்றது கயல்விழி

ஏய் கயல்! சமையா குளருதுடீ! சொன்னா கேட்கறியா?? பாரு இவளுங்க கூட எப்படி நடுங்கறாங்க?சங்கு...கவின்... உங்களால முடியலைனா உள்ளே போங்க... நாங்க பார்த்துக்கறோம்...' என்று அவர்களை கிளப்பிவிட அருகில் இவர்களுக்கு உதவி செய்யவேன்று நின்றிருந்தவரை பார்த்து

மங்கா மா... இவளுங்க ரெண்டு பேரையும் உள்ளே தள்ளிக்கிட்டு போங்க... நாங்க பார்த்துக்கறோம்! அதான் துணைக்கு நம்ம வேல் அண்ணாவும் டைகரும் இருக்காங்களே! - என்றாள் மலர்விழி. அந்த வீட்டில் இருக்கும் அனைவருக்கும் செல்லமான அந்த டைகர் - லாப்ரடார் வகையை சார்ந்தது. அந்த வீட்டில் யாரும் டைகரை 'நாய்' என்று தப்பி தவறியும் வாய்மொழியாய் சொல்லவும் மாட்டார்கள்...ஏன் அப்படி நினைக்ககூட மாட்டார்கள். டைகரும் வீட்டு காவலாளி வேலனும் துணைக்கு நின்றிருந்தார்கள்.

ஆனால் அவர்கள் இருவரும் அசைவதாய் இல்லை! அதற்குள் உள்ளேயிருந்து 'சோட்டூ...சோட்டூ...' என்று குரல் கொடுத்து பதறியபடி ஓடி வந்தவரை முறைத்து பார்த்தவாறு 'என்ன டங்கா மாரி??' என்றாள் கவின் என்றழைக்கப்படும் கவின் மலர் - வீட்டின் கடைக்குட்டி.

'பாப்பா....' என்று அவர் இழுக்க 'நான் ஒன்னும் பாப்பா இல்ல... சோட்டூவும் இல்ல...முதல்ல இப்படி கூப்பிடுறத நிறுத்துங்க...மாரி....நான் ரொம்ப வேற மாரி...' என்றாள் பதிலுக்கு ராகத்துடன்.

ஏய்! ஏன் டீ காலையிலேயே அவரை வம்புக்கு இழுக்கற... நீங்க சொல்லுங்க 'மாரி' பா என்றாள் 'சங்கு' என்கிற சங்கமித்ரா.

மலரை பார்த்து..'கண்ணம்மா...சோட்டூவ அம்மா கூப்பிடறாங்க....இந்த பனி பாப்பாவுக்கு ஒத்துக்காதுல மா... அம்மா கண்டுபிடிச்சிட்டாங்க பாப்பா இங்க இருக்கறதை... அவங்கதான் கூட்டிவர சொன்னாங்க... வீசிங்க் வந்தா எல்லாருக்கும் யாரு பதில் சொல்றது... அமேரிக்கா... துபாய்..னா கூட பரவாயில்ல... நம்ம நாட்டிலேயே காஷ்மீர்லயிருந்து குமரி வரைக்கும் சோட்டூவ கேட்டு எல்லா இடத்துலயிருந்து வர ஃபோன் காலுக்கு யாரு பதில் சொல்றது?? எல்லா ஊரிலையும் தான் பாப்பாவுக்கு சொந்தகாரங்க நிறைய பேர் இருக்காங்களே....பாப்பா.. தயவு செஞ்சு உள்ளே வந்திடம்மா...' என்றார் படப்படப்புடன் நின்ற மாரி என்கிற மாரியப்பன்!

உங்களுக்கு உங்க கஷ்டம் தானே பெரிசா போச்சு... நான் எவ்வளவு ஆசையா கோலம் போட வந்தேன்... முன் எச்சரிக்கையா எல்லாத்தையும் போட்டுகிட்டு தானே வந்தேன்...இரு டங்கா மாரி... இதோ இந்த கலரை போட்டு முடிச்சிடுறேன்... அப்புறம் இருக்கு உங்களுக்கும்... பிங்கிக்கும்.... பிங்கி....'என்று பற்களை கடிக்க

பாப்பா... சின்னம்மா கூப்பிடல... பெரியம்மா... மல்லிமா தான் கூப்பிட்டாங்க...

அச்சசோ... என்ன மாரி பா... இதை முன்னமே சொல்லமாட்டீங்களா?? அக்காஸ் பை... நான் உள்ளே போறேன்...' என்றபடி எழுந்த கவின் "ஹே.. டாங்கா மாரி... ஊதாரி... புட்டுகின நீ நாரி..." என்று பாடிக்கொண்டே உள்ளே ஓடினாள்.

அவள் உள்ளே சென்ற ஐந்து நிமிடத்தில் உள்ளேயிருந்து BMW X5 வண்டி வெளியே வந்தது. கேட்டின் வெளியே ஓரம்கட்டி நிறுத்திவிட்டு காரைவிட்டு இறங்கினர் அந்த மூவரும்.

என்ன கண்ணம்மா?? கோலமேல்லாம் பிரமாதமாய் இருக்கு! ம்ம்ம்... கலக்கு...கலக்கு...' என்றவாறு சில பரிந்துறைகளை செய்தவள் காரினை ஓட்டிக்கொண்டு வந்த 'பிங்கி' என்கிற பங்கஜ் ராமகிருஷ்ணன். பூஞ்சோலையின் கடைசி மருமகள்! 'பிங்கி' என்கிற பங்கஜ்... பங்கஜம் இல்ல...பங்கஜ் தான்! நீங்க நினைக்கறது 100 சதவிகிதம் கரக்ட் தான்...ஆமாங்க அவங்க நார்த் இண்டியன்... பாதி உத்தர் பிரதேஷ்... பாதி பெங்காலி...! நம்ம கிருஷ்ணன் சாரை லவ் செய்ய வெச்சு கல்யாணமும் செய்துகிட்டாங்க! இருங்க இருங்க... அவங்க காதல் கதையை கொஞ்சம் பொருமையா சொல்லறேன்! இப்போ இங்க ஒருத்தர் பேசறாங்க வாங்க...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.