(Reading time: 32 - 63 minutes)

ன்னடீ சங்கு... படிக்கனும்னா மட்டும் காலையில எழும்ப முடியாது... இந்த வேலைனா மட்டும் முடியும்மில்ல?? ம்ம்ம்... சீக்கிரமா கைவேலையை முடிச்சிட்டு போய் படிக்கிற வழிய பாரு! விடிஞ்சதுக்கு அப்புறம் கல்யாண மாப்பிள்ள பொண்ணு வந்திட்டாங்கனா உன்னை கையிலேயே பிடிக்க முடியாதே... போ.. போய் படிக்கிற வழியபாரு!' என்றபடி செல்லமாய் கடிந்துக்கொண்டவள் ரோஜா ராமலிங்கம். பூஞ்சோலையின் இரண்டாவது மருமகள்! இவங்க தமிழ்காரங்க தாங்க... ஆனா இவங்களதும் காதல் கல்யாணம் தான்! நம்ம லிங்கம் சாரோட அண்ணியோட தங்கச்சி! ஹி..ஹி... இருங்க யாரு அந்த அண்ணினு தானே கேட்கறீங்க...வரேன்...வரேன்...

பாருங்க பிள்ளைங்களா...ரொம்ப குளிருது... சீக்கிரமா உள்ளே போங்க காலையிலேயே பூஜையிருக்குனு நினைவிருக்கா? அதுக்கு வேற ரெடியாகனுமே... நம்ம மாப்பிள்ள பொண்ணு வேற வந்திருவாங்க.... சரியா... மாரி அண்ணா... மங்கா... கொஞ்சம் பார்த்து உள்ளே கூட்டிப்போங்க!' என்று வாஞ்சையாய் கூறியது மல்லிகா ராமநாதன். பூஞ்சோலையின் மூத்த மருமகள்! வெயிட்...வெயிட்... இவங்களதும் லவ் மேரேஜ் தானேனு கேட்கறீங்க... ஹூஹூம்... அதுதாங்க இல்ல...ராமநாதன் சாராவது காதல்ல விழறதாவது... வீட்டுல பார்த்து கல்யாணம் செய்து வெச்சதுதான்... அசல் தான்! ஆனா தம்பிங்க ரெண்டு பேரும் பொறாமை படற அளவுக்கு இருக்காங்க இந்த காதல் ஜோடி... பின்னே இருக்காதா?? மொத்தம் நாலு பிள்ளைங்க இவங்களுக்கு!

இவர்களிடம் பேசிவிட்டு BMW X5-யை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர் மூவரும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலை நோக்கி... மார்கழி முதல் நாள் சிறப்பு தரிசனத்திற்காக!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "தமிழுக்கு புகழென்று பேர்..." - நட்பும் காதலும் கலந்த தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

அவங்க கிளம்பிட்டாங்க...ம்ம்ம்ம்.. சீக்கிரமா உள்ளே போய் வேலையை முடிப்போம்.. அவங்க மூணு பேரும் திரும்பி வரர்துக்குள்ளே! இன்னைக்கு எப்படியாவது அவங்களை சம்மதிக்க வச்சிடனும்...ஓகேவா - என்றபடி வேகமாய் கோலமிட்டு உள்ளே விரைந்து ஓடினர் மூன்று பெண்களும்.

தாமரை சூர்யபிரகாசம் தம்பதியருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். பெரியவர் ராமநாதன், இரண்டாமவர் ராமலிங்கம், இளையவர் ராமகிருஷ்ணன். ஒரே ஒரு பெண்... பெயர் கலையரசி. பெரியவர் ராமநாதனுக்கு அடுத்து பிறந்தவர். லிங்கத்திற்கும் கிருஷ்ணனுக்கும் அக்கா! 

பார்த்தீங்களா... தாமரை, மல்லிகா, ரோஜா, பங்கஜ்... எல்லாமே பூக்களோட பேரு தான்..இப்படி பூக்கள் வசிக்கிற இடங்கிறதாலகூட இது பூஞ்சோலை தானே! எப்புடி நம்ம கண்டுபிடிப்பு! இத்தனை பேரா ஒரு குடும்பத்துலனு வாயை பிளந்துறாதீங்க...வெயிட்! இன்னும் இருக்குங்க லிஸ்ட்! நினைவு வெச்சிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்...

திகாலை திவ்விய தரிசனத்தை கண்டுவிட்டு...பார்த்தனின் அன்பில் உறைந்து... குடும்பத்துடன் அவன் வீட்ரிருக்கும் அழகினில் நெகிழ்ந்து... நாலாயிர திவ்வியபிரபந்தத்தை கேட்டு கரைந்து அமர்ந்திருந்தனர். 

நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்திருந்தவர்களை பார்த்தவாறு வந்தார்கள் ஒரு வயதான மாமியும் அவர்களுடன் இரு பெண்களும்!

டீ மல்லி... எப்படிடீ இருகே.... சௌக்கியமாடீ! - என்றாள் அந்த வயதான மூதாட்டி!

அலமூ மாமி! எப்படி இருக்கேள்? நாங்கோ நன்னா இருக்கோம் - என்றாள் மல்லிகா.

எத்தனை வருஷமாச்சு உன்னை பார்த்து? ஊருக்கு வந்தா செத்த ஆத்துப்பக்கம் வந்துட்டு போலாமோலியோ?' - அலமூ.

எங்க மாமி? ஊருக்கு வந்தா காலில வென்னீய கொட்டிண்டா மாதிரி பறக்க வேண்டியதிருக்கு? நீங்க எப்படி சென்னையில... யாரு இவா ரெண்டு பேரும்? - மல்லிகா.

ஏண்டீ மறந்து போச்சா? இது தான் என் மாட்டுபொண்ணு காயத்ரி.. அது அவ பொண்ணு... என் பேத்தி ஷ்ரவந்திகா! இவா இங்க தான் இருக்கறா... அதான் கொஞ்ச நாள் இவாளோட இருக்கலாம்னு வந்தேன்...இனைக்கு மார்கழி ஒண்ணுனோனோ அதுதான் இவாளை அழச்சிண்டு பெருமாளை செவிக்கலாம்னு வந்தேன்... 

நங்கநல்லூர்லியே நிறைய கோவில் இருக்கு மல்லிகா.. மாமி சொன்னா கேட்கமாட்டேனுட்டா... அதான் அழச்சுண்டு வந்தோம்! நீங்க எப்படி இருக்கேள்? ஆத்துல எல்லாரும் சௌக்கியமா?' என்றார் காயத்ரி. 

நா நன்னா இருக்கேன் காயத்ரி... பாத்து எத்தனை வருஷமாச்சு! இங்க சென்னையிலேயே இருந்துட்டு பாக்கவே முடியல பாருங்க... இத்தனை வருஷத்துல உங்களை அடையாளமே தெரியல பாருங்க எனக்கு! 

பேசியவாறே வெளியே வந்தனர். டீ மல்லி ஒரு நா ஆத்துக்கு வாயேன்?

வரேன் மாமி... ஆனா இன்னைக்கு நீங்க எல்லாம் எங்க ஆத்துக்கு கண்டிப்பா வரனும்... எங்க ஆத்துல இன்னைக்கு பூஜையிருக்கு.. நீங்க நிச்சயமாய் கலந்துக்கனும்' என்று அழைப்பு விடுத்தார் மல்லிகா.

ஆமா உன் மாமா மாமி எங்க இருக்கா? உன் மச்சினர்லாம் எப்படி இருக்கா? உன் தங்கையைதானே லிங்கம் கல்யாணம் பண்ணிண்டான்? உன் குழந்தைங்க எப்படி இருக்கா? நீ எங்க இருக்க... அவாலாம் எங்க இருக்கா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.