(Reading time: 32 - 63 minutes)

ந்த சாலையில் போகின்றான்

மீசை வைத்த பையன் அவன்

ஆறடி உயரம் அழகிய உருவம்

ஆப்பிள் போலேயிருப்பானே!!

என்று தான் பாட தோன்றியது ப்ரீத்திக்கு! ச்சே.. என்ன இது புதுசா ஒருத்தரை பார்த்ததுமே இப்படி வர்ணிக்கறேன்?? ஹும்ம்ம் ப்ரீத்ஸ் நீ சரியில்லையே!' என்று தன்னையே நொந்துக்கொண்டாள்.

ஆறடி உயரம் வெள்ளையும் தங்கமும் சேர்ந்து குழைத்தார் போல நிறம்... மயில்கண் பட்டு வேட்டி.. இளம் சிவப்பு நிறத்தில் முழுக்கை சட்டை... முட்டிவரை மடித்துவிடப்பட்டு இருந்தது...நெற்றியில் விபூதிக்கீற்று... அதற்கு மேல் திருமண் என்று இட்டிருந்தான்... அடர்ந்த தலைமுடி...அளவான மீசை.. இறங்கி வருவதிலேயே ஒரு ஆளுமை தெரிந்தது...உணர்ச்சிகளற்ற ஒரு முகம்...ஆனால் கடினமில்லை!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

இறங்கி வந்தவனை பார்த்த சித்ரா... தாத்தாவிடமிருந்து விலகி  வேக நடையுடன் சென்று 'சிவாண்ணா...' என்று கூறியபடி அணைத்துக்கொண்டாள்.

நவிமா...' என்ற அவனும் ஆதரவாய் அணைத்தான்.

இவர்தான் எங்க பெரியண்ணா... கார்த்திக் சிவநாதன்... எங்க எல்லோருக்கும் தல!' என்றபடி ப்ரீத்தியின் காதை கடித்தாள் கயல். 

ஹப்பா.. அவ்வளவுதானா...இதுக்கு மேலையும் இருக்கா?? 'என்பது போல் முகத்தினை வைக்க... அவள் எண்ணமோ... 'டேய்... விஷ்வா... உனக்கும் மூணு அண்ணன்னு சொன்னல... தங்கச்சிங்க இத்தனை பேரு இருப்பாங்களாடா உங்க வீட்டுல???... அப்போ உன் வீடும் இப்படிதான் எங்க ஊரு சந்தை மாதிரி கச கச நு இருக்குமா?? இந்த ஆண்ட்டி வீட்டிலேயாவது பரவாயில்ல.. ரிச் பீப்புள்..அதுவும் இல்லாம இவங்க கசின்ஸ் தான்... ஆனா உங்க வீட்டுல வசதி குறச்சல் தானே...இந்த அளவுக்கு வசதி கிடையாதே... அண்ணன்களே மூணு பேருனு சொன்னியேடா...நான் எப்படிடா சமாளிப்பேன்?? உங்க அண்ணன்கள் ஒத்துண்டாலும் எனக்கே இப்போ பயமா இருக்கே! பெருமாளே கொஞ்சம் கருணை வை என் மேலே! கல்யாணம் பண்ணிண்டு முதல் வேலையா உன்னை உங்க ஆத்துல இருந்து தனியா அழச்சிண்டு வந்திடனும்... பெருமாளே... எனக்கு துணையா இரு!' என்று வேண்டிக்கொண்டாள்.

அவளுக்கு தெரியாது...அவளின் தனிக்குடித்தன ப்ளான் என்றைக்குமே நடக்க போவதில்லை என்று!

அண்ணன் தங்கை இருவரும் அன்பில் கட்டுண்டு இருக்க....இரண்டு நிமிடம் அமைதி நிலவியது அங்கே! யாருக்கும் எதுவும் பேச மனமற்று அமர்ந்திருந்தனர்!

ச்சே... என்ன ஒரு அருமையான சீன்... இதை பார்க்க இவ்வளவு லேட்டா வந்திட்டேனே! ரீப்ளே ப்ளீஸ்!' என்று வாசலில் இருந்து சத்தம் வர எல்லோரது கவனமும் அங்கே திரும்பியது.

சிரித்துக்கொண்டே வந்தவன்  உள்ளே இருந்தவர்களை பார்த்த மாத்திரமே கால்கள் வேகத்தை குறைத்துக்கொண்டது... அவனது முகம் அதிர்ச்சியை அப்பட்டமாய் காட்டியது!

இன்னுமா? எத்தனை பேருடா வருவீங்க? என்ற சலிப்புடன் 'புதுசா யாருடா அது??? என்று திரும்பிய ப்ரீத்தியும் அப்படியே அதிர்ச்சியில் உரைந்துவிட்டாள்.

விச்சு.....' என்று சித்ரா அவன் கரம் பற்ற பார்வை மட்டும் வீட்டில் இருந்த புதியவளிடம் இருந்தது.

தொடரும்...

Episode # 02

{kunena_discuss:1000}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.