(Reading time: 32 - 63 minutes)

ஹே... தேவா...நீங்க எப்ப வரீங்க?? 

...

அவங்களா??? எதுக்கு கேட்கறீங்க?? 

.........

இல்ல நல்லா இருக்காங்களா?? 

.....

ஓ.. சூப்பரா! 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

......

ஓகே ஓகே! 

.......

ஹம்.. முக்கியமான ஆள் தான்... நான் அப்புறமா உங்ககிட்ட பேசவா?' என்றுவிட்டு வைத்தாள்.

சரி..சரி.. எனக்கு இப்போ உங்களை பத்தி சொல்லுங்க.... நீங்க எல்லாரையும் அம்மானு கூப்பிடுறீங்க??? யாரோட பிள்ளைங்க நீங்க எல்லாம்??' என்று கேள்வி மேல் கேள்வி கேட்டாள் ப்ரீத்தி.

உங்களுக்கு எப்படி வேணும்... லார்ஜ் ஸ்கீரின்ல வேணுமா... ஸ்மால் ஸ்கீரின்லயா?? இல்ல யூனிட் லேவல்ல வேணுமா??' என்றாள் கயல்.

அப்படின்னா??' என்று திகைத்தாள் ப்ரீத்தி.

எங்களை பத்தினா...யூனிட் லேவல்! எங்க அப்பாஸ் பத்தினா...ஸ்மால் ஸ்கீரின்! எங்க தாத்தா பாட்டினா...லார்ஜ் ஸ்கீரின்!

எல்லா லேவல்லையும் வேணும் ஆல் டீட்டைல்ஸ் ஐ வாண்ட் நௌ!

சரி... ஓகே! ஆல் டீட்டைல்ஸ் வேணுமா?? சரி தான்.... நீங்க தெரிஞ்சு கேட்கறீங்களா... இல்ல தெரியாம கேட்கறீங்களாநு புரியல... பட் இப்போவே கேட்டுகறீங்க பரவாயில்ல நல்லதுதான்!' என்று ப்ரீத்தியை பார்த்து ரகசியமாய் புன்னகைத்தவாறு சொன்னாள் சங்கமித்ரா.

எங்க வீட்டு வாசல்ல பார்த்திருப்பீங்க பேரு... தாமரை சூர்யபிரகாசம்னு... தாமரை எங்க பாட்டி.. சூர்யபிரகாசம் எங்க தாத்தா! அவங்களோட முதல் மகன் பேரு ராமநாதன்... இப்போ ஹாலில் பார்த்தீங்களே ராமு அப்பா அவருதான்! ராமு அப்பாவோட வைஃப்  தான் மல்லிகா அம்மா...எங்க மல்லிமா! அவங்களுக்கு நாலு பிள்ளைங்க!

இதுல யாரு ராமு அங்கிளோட பசங்க??

நாங்க யாருமேயில்ல!

என்னது? நீங்க யாருமேயில்லையா? அப்போ அவங்களாம் எங்க??

அவங்களுக்கு மூணு பசங்க..கார்த்திக் அண்ணா, சஞ்சய் அண்ணா, சந்தோஷ் அண்ணா...  ஒரு பொண்ணு... சித்ரா! அவங்கள பத்தி அப்புறமா விளா...வரியா பார்க்கலாம். அண்ணாங்க பிஸ்னஸ் பண்றாங்க... சித்ரா... ஐஐஸ்சி ல் பிஹேச்டி பண்றா..

ராமு அப்பாவுக்கு அடுத்து கலையரசி அத்தை...அவங்க ஹஸ்பண்ட் எங்க மாமா சரவணன். அவங்களுக்கு மூணு பிள்ளைங்க..

அவங்க இங்க இல்லையா? - ப்ரீத்தி.

இல்ல.. அவங்க கோவையில இருக்காங்க... சரோ மாமாவுக்கு சொந்த ஊரு அதுதான். தேன்மொழி, அன்புச்செல்வன், நறுமுகை.. இவங்க மூணு பேரும் அவங்க பசங்க..தேனு... கல்யாணம் முடிச்சு ஆஸ்த்ரேலியாவில் இருக்கா...அன்பு...சரோ மாமாவோட பிஸ்னஸ் பார்த்துக்கறாங்க...சாந்தி க்ரூப் ஆஃப் இண்டஸ்டரீஸ் நு... நமு... ஃபேஷன் டெக்னாலஜி மும்பைல படிக்கறா...

ஓஓ...!! நைஸ்!

அடுத்து லிங்கம் அப்பா... அவங்க மனைவி ரோஜா அம்மா...அவங்களுக்கு மூணு பசங்க...ஆதித்யன் அண்ணா நாங்க கயல்விழி அண்ட் மலர்விழி...டிவின் சிஸ்டர்ஸ்! ஆதி அண்ணா..மத்த மூணு அண்ணாஸோட சேர்ந்து பிஸ்னஸ் பார்த்துக்கறாங்க... கயல்விழி மெடிசன் ஹௌசர்ஜன் செய்யறா.. நான் மலர்விழி... லா படிக்கறேன்...

வாவ்!

அடுத்து கிருஷ்ணன் அப்பா... அவங்க மனைவி பங்கஜ் அம்மா... அவங்களுக்கும் மூணு பசங்க.. வியன்...சங்கமித்ரா..அப்புறம் நான் கவின் மலர்! வியன் அண்ணா பிளஸ்டூ எழுதப்போறான்.. சங்கு அக்கா டேன்த்... நான் சிக்ஸ்த் போக போறேன்

ஷப்பா... இப்போவே கண்ண கட்டுதே!!!' என்று மனதில் எண்ணிய ப்ரீத்தி, வெளியில் சகஜமாய் காட்டிக்கொண்டு.... உங்க அண்ணாஸ் என்ன பிஸ்னஸ் செய்யறாங்க?? தொடர்ந்து.. 'இப்போ பேசனீங்களே தேவானு...அவங்க...' என்றாள்.

ஐயோ...தேவானு...சத்தமா பேசாதீங்க ப்ரீத்தி... கொஞ்சம் மெதுவா...அவங்களை பத்தி சொல்லனும்னா எங்க லார்ஜர் ஸ்கேல் குடும்பத்தை பத்தி தெரிஞ்சுக்கனும்...பட்.. அது கொஞ்சம் சீக்ரட்டா தான் பேச முடியும்... எங்க அண்ணனுங்க காதுல விழுந்துச்சு.. அவ்வளவுதான்...அதுக்கு உங்களுக்கு நேரமிருக்கா??

அவர்கள் பேசும் போதே லிங்கமும் வியனும் பேசிக்கொண்டே உள்ளே வந்தார்கள். அவர்களை ப்ரீத்திக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். லிங்கம் உள்ளே சென்றுவிட வியன் மட்டும் சற்று பின் தங்கினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.