(Reading time: 32 - 63 minutes)

வர்கள் கார் உள்ளே வருவதை பார்த்துவிட்ட கவின் மலர் உடனே ஓடிச்சென்று வெளியில் அவர்கள் போட்ட கோலத்தை பார்த்தாள். வண்டி உள்ளே சென்ற தடையத்தினால் சிறிது கலைந்திருந்தது. பார்த்தவளுக்கு வண்டியை ஓட்டி வந்தவள் மீது கோபம் வந்தது. மல்லிகைப்பூ சூடியிருந்த தன் கூந்தலை முன்னே போட்டுக்கொண்டு அதன் நுனியில் இருந்த பட்டு குஞ்சலத்தை ஆட்டியபடி வந்தாள். மல்லிகா அவள் நடந்துவரும் அழகினை வாஞ்சையாய் பார்த்திருந்தார்.

என்ன சோட்டூ? வெளியில போய் என்ன பார்த்தீங்க?? என்றாள் பங்கஜ்.

மல்லிமா... இன்னிமே பிங்கிமாவை வண்டி எடுக்க வேணாம்னு சொல்லுங்க... நாங்க கோலம் போடறப்போ நிச்சயமா எடுக்கவேக்கூடாதுனு சொல்லுங்க.. அதுவும் இன்னைக்கு... எவ்வளவு ஆசையாய் போட்டோம் தெரியுமா?? நல்ல காலம் நீங்க வரர்த்துக்கும் முன்னாடியே அதுப்பக்கத்துல நின்னு செல்ஃவீ எடுத்தாச்சு... முதல் போட்டோ இதுவாதான் இருக்கனும்னு எவ்வளவு நாள் யோசிச்சி இந்த டிசைன் போட்டிருக்கோம்? அதை போய் கலச்சிட்டாங்க! என்று ஆதங்கப்பட்டாள் சிறுமி.

சாரிடா தங்கம்... அம்மா எவ்வளவு கவனமா ஓட்டினா தெரியுமா?? அதுவும் எங்க வீட்டு இளவரசி போட்ட கோலம் வேறயா?? எப்படி அதை கலைப்பா?? நீயே சொல்லு? அம்மா பாவம்ல!!

சரி மல்லிமா... ஓகே உங்களுக்காக விடறேன்! சரி சொல்லுங்க நான் நல்லா இருக்கேனா??? ஆமா யாரு இவங்க எல்லாம்?? இந்த அக்கா ரொம்ப அழகாயிருக்காங்க!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மனோஹரியின் "காதல் பின்னது உலகு" - கல்யாணமாம் கல்யாணம்…

படிக்க தவறாதீர்கள்...

மாமி... காயத்ரி... இவங்க தான் எங்க வீட்டோட கடைகுட்டி இளவரசி... கவின் மலர்!

ஹாய் கவின் மலர்! நான் இந்த காயத்ரி ஆண்ட்டியோட பொண்ணு ப்ரீத்தி ஷ்ரவந்திகா!

நைஸ் நேம்... ஆனா நான் உங்களை எப்படி கூப்பிடறது??? அக்கானு கூப்பிடவா?? இல்ல உங்க பேர் சேர்த்து கூப்பிடவா?? வீட்டுல எல்லாரும் எப்படிக்கூப்பிடுவாங்க உங்களை?? நேம் ரொம்ப நீளமா இருக்கு!' என்று விடாமல் கேள்வி கேட்டாள் கவின். 

ஏன் ?? உன் பேரு கூடதான் ரொம்ப அழகா இருக்கு உன்னை மாதிரியே! நீ என்னை அக்கானு கூப்பிட்டு எனக்கு வயசு அதிகமாக்கிடாத... பேர் சொல்லியே கூப்பிடலாம்... வீட்டுல எல்லாரும் ஷ்ரவன்...ஷ்ரவந்தி... அப்படிதான் சொல்லுவாங்க!

சரி... அப்போ நீங்க வந்திக்கா... பிரண்ட்ஸ்!!' என்றாள் கவின்.

பிரண்ட்ஸ்!' என்று கை குலுக்கினாள் ஷ்ரவந்திகா. வாங்க மாமி உள்ளே போகலாம்! என்று அழைத்து சென்றார் மல்லிகா.

மாம்பழ நிற பாவாடை தாவணியில் மலர்விழியும், அடர் பச்சை பாவாடையில் கயல்விழியும், தேன் நிற பாவாடையில் சங்கமித்ராவும் வலம் வந்தனர். பன்னீர் ரோஜா நிற பாவாடை சட்டையில் இருந்தாள் கவின் மலர்.

உள்ளே அழைத்து அவர்களை அமரவைத்து உபசரித்தார்கள். இவர்களுக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள் மலர். அவள் உள்ளே செல்லவும் கயல் தோட்டத்தில் இருந்து உள்ளே வந்தாள். அவர்களுக்கு ஜூஸ் கொடுக்கும் படி ரோஜா குரல் கொடுக்க ஜூஸ் எடுத்து வருவதற்கு உள்ளே சென்றாள் கயல். அதற்குள் மலர் ஜூஸ் டம்ளர்களுடன் வெளியே வந்துவிட்டாள்.

மலரை பார்த்த ஷ்ரவந்திகாவுக்கு மயக்கம் வராத குறை ஒன்று தான். அவளது சந்தேகத்தை கேட்டும்விட்டாள்! எப்படிங்க உள்ளே போயிட்டு வெளிய வரும் போது பாவாடை தாவணிய மாத்திட்டு வரீங்க??? அதுவும் அஞ்சு நிமிஷத்துல?? இத்தன முறை??

என்னது பாவாடைய மாத்தினேனா?? - மலர்.

ஆமாங்க..இப்போ  மாம்பழ கலர்ல போட்டிருக்கீங்க... ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி பச்சை கலர்ல போட்டிருந்தீங்க?? வெளியல கவின் கூட நின்னு செல்ஃவீ எடுத்தீங்களே??

மெல்ல சிரித்துக்கொண்டே பெரியவர்களை பார்க்க அவர்களும் சிரித்தனர். ஏன் ஆண்ட்டீ சிரிக்கறீங்க?? நான் என்ன தப்பாவா கேட்டுட்டேன்?

இல்லமா... ஒரு நிமிஷம் இரு..' என்றவர் டேய் பசங்களா இங்க வாங்க' என்று குரல் கொடுத்தார் பங்கஜ்.

வந்து நின்ற கயல்விழியை பார்த்து வாயடைத்து நின்றாள் ஷ்ரவந்திகா. 'நீங்க ட்வின்ஸா??' என்றாள் இருவரையும் பார்த்து.

ஆமாங்க...ஆமாம்! எல்லாரும் குழம்பறா மாதிரி நீங்களும் குழம்பிட்டீங்க? நான் மலர்விழி என்று ஜூஸை கொடுத்திவிட்டு அவ கயல்விழி என்று அறிமுகப்படுத்தினாள்.

இவ எங்க வீட்டு இன்னோரு இளவரசி சங்கமித்ரா!' என்று அவளையும் அறிமுகம் செய்துவைத்தார்கள். அதற்குள் ராமநாதன் குளித்து முடித்து பூஜைக்கு தயாராய் கீழே இறங்கி வந்தவர் அலமூ மாமியை பார்த்த ஆனந்ததில் அவருடன் அமர்ந்து உரையாடினார்.

எங்கடா ராமா உன் பசங்களை எல்லாம் எங்க காணோம்??' என்று கேட்டார் அலமூ மாமி.

மல்லிகா.. எங்கமா பிள்ளைங்க??

கிருஷ் அப்பாவும் ஆதி அண்ணாவும் ஏர்போர்ட் போயிருக்காங்க... லிங்கஸ் அப்பாவும் வியன் அண்ணாவும் சஞ்சு அண்ணாவோட வாக்கிங் போனாங்க... சந்து அண்ணா விளையாட போனாங்கனு நினைக்கறேன்.... சிவா அண்ணாவ தான் காணல... நான் காலையில இருந்து பாக்கல ராமு பா!' என்றாள் கவின்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.