(Reading time: 19 - 37 minutes)

ஆ..ஐயோ...என்ன சொல்கிறாய்..?ஹஸ்தகுப்தன் விமலாதித்தனைக் கொலை செய்தாரா?இல்லை..இல்லை..அப்படி இருக்கவே இருக்காது..இது பொய்..யாரோ சோழ இளவரசரைக் கொன்றுவிட்டு பழியை குப்த இளவரசர் மீது போடுகிறார்கள்..அவர் கொலை செய்யக்கூடியவர் அல்ல.நான் இதை சிறிதும் நம்பமாட்டேன்..அதோடு நீ என்ன சொன்னாய்?அவர் தோளிலும் இடுப்பிலும் குத்தப்பட்டுக் கிடக்கிறாறா? குற்றுயிரும் குலையுயிருமாக உள்ளாறா?ஐயோ..இதென்ன கொடுமை..இதென்ன கொடுமை..சுசீ நான் உடனே ஹஸ்தனைப் பார்க்கவேண்டும்..பார்க்க வேண்டும்..அவருக்கு ஏதாகிலும் ஆகிவிட்டால் அவரின் உயிருக்கு தீங்கு ஏதும் ஏற்பட்டுவிட்டால் என்னை உயிரோடு பார்க்கமுடியாது.அவரோடு நானும் போய் விடுவேன்.அவரின்றி என்னால் வாழ முடியாது..அப்படி வாழ்வதில் பயனுமில்லை.சுசீ இப்போது நான் என்ன செய்வேன்..என்ன செய்வேன்..முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள் மதிவதனி.

அழும் இளவரசியை எப்படித் தேற்றுவது என்பதறியாது சிலையென அம்ர்ந்திருந்தாள் சுசீ.

களைப் பார்ப்பதற்காக வந்த ராணி ருக்மா மதிவதனியின் அறைவாசலில் நின்றபடி மகளுக்கும் சுசீக்கும் இடையே நடந்த உரையாடலை ஒன்று விடாமல் கேட்டவுடன் அப்படியே தலை சுற்றுவது போல் இருந்தது அவருக்கு.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

ஐயோ..இதென்ன விபரீதம்? இவள்..மதிவதனி என்ன பேசுகிறாள்?..ஏன் இப்படியெல்லாம் பேசுகிறாள்? என்னவாயிற்று  இவளுக்கு?விமாலாதித்தன் கொலை செய்யப்பட்டு இறந்தான் என்பதைக்கேடடு எந்த நிலைமைக்கு ஆளாவாளோ எனப் பயந்து அவளை எப்படித் தேற்றுவது என நினைத்து வந்தால் குப்த இளவரசன் அவன் பெயர் என்ன?ஹஸ்த குப்தன்..ஹஸ்த குப்தன்..அவனைப் பற்றியல்லவா கவலைப் படுகிறாள்?அவனுக்கு ஒன்றென்றால் தன்னால் தாங்க முடியாது என்கிறாளே..அவன் உயிருக்கு ஆபத்தென்றால் தானும் இறப்பேன் எங்கிறாளே?மதிவதனி இப்படி பேசுவதன் பொருள் என்ன?ஒரு வேளை மதி அவனை..அவனை..இருக்காது இருக்காது...ஏன் இருக்காது?

அப்படித்தான் இருக்கும்..இல்லாவிட்டால் இவள் ஏன் ஹஸ்த குபதனைப் பற்றிக் கவலைப்படப் போகிறாள்?

ஐயோ இதென்ன கொடுமை?இதெப்படி சரிவரும்?அவன் யாரோ?அவன் குப்த ராஜியத்து இளவரசனாகவே இருக்கட்டும்.மொழி இனம் மதம் கலாசாரம் பழக்க வழக்கம் அனைத்திலும் மாறு பட்டவன்.நம்மோடு சிறிதும் பொருத்தமில்லாதவன்.அதோடு கூட அவன் ஒரு கொலைகாரன்..இவை அனைத்தையு மதி அறிவாள்தானே?அப்படியிருக்க இவளின் புத்தி ஏன் இப்படி ஒரு முடிவை எடுக்கிறது?இவளின் தந்தைக்கு

மன்னருக்கு இவள் ஹஸ்த குப்தனை விரும்புவது தெரிந்தால் அவர் எப்படி நடந்து கொள்வார்?விமலாதித்தனைக் கொலை செய்ததன் மூலம் பாண்டிய நாட்டுக்கு தீராப் பழியையும் பகைமையையும் தேடிக்கொடுத்த குப்தனை தண்டிப்பாரா?மாறாக மகளுக்காக அவனை மன்னிப்பாரா?மன்னிப்பதென்பது ஒரு காலும் நடக்காது.இதென்ன சோதனை?இப்பாண்டிய நாட்டுக்கு வந்துள்ள வேதனை?

ஏற்கனவே நடந்துவிட்ட விபரீதத்தால் மனம் நொந்திருக்கும் மன்னனாகிய நம் கணவர் தங்கள் மகள் ஒரு கொலைகாரனை விரும்புவதை அறிந்தால் அதனை எப்படித் தாங்குவார்?அதனை எப்படி ஏற்பார்?அக்கம் பக்கத்து நாடுகள் இதை எப்படிப் பார்க்கும்?கேவலமாய் நினைக்காதா?இந்த சூழ்னிலையை எப்படிக் கையாள்வேன்....நான் என்ன செய்வேன்?மகளுக்காக கணவரிடம் வாதாடுவேனா?

இல்லை கணவரின் கௌரவத்திற்காக மகளிடம் மன்றாடுவேனா?முதலில் மதிவதனியின் காதலை நான் ஏற்கிறேனா?இல்லை..இல்லை..என் மனம் இதனை ஏற்காது.பலவாறாக சிந்தித்துக்கொண்டே மதிவதனியின் அறைக்குள் செல்லாமலே அவரையும் அறியாமல் நடந்து வந்து தன் அறையை வந்தடைந்தார் ராணி ருக்மா..

ரண்மனனை வாசலில் ஒரே சப்தமாகக் கேட்டது. ..நிறைய பேர் சேர்ந்து ஏதோ சப்தமிடுவது மதிவதனியின்  அறைவரை சென்று ஒலிக்கவே..மதி வாசலில் ஏதோ சப்தம் கேட்கிறது..நான் சென்று பார்த்துவிட்டு வருகிறேன் என்றபடி அறையைவிட்டு வெளியே வந்த சுசீ வாசலுக்கு வந்தாள்.  

மன்னர் அதிவீரனும் மற்றவர்களும் துன்பம் தோய்ந்த முகத்தோடு அமைதியாய் குதிரையில் வர பின்னால் ஒரு திறந்த வண்டியில் ஒருவனைப் படுக்கவைத்து எடுத்து வந்தார்கள் சில வீரர்கள்.அரண்மனை வாசலில் வந்து நின்ற வண்டியில் கிடந்தவனைப் பார்த்தாள் சுசீ.அவன் மயங்கிக் கிடப்பதுபோல் இருந்தான்.உடல் முழுதும் ரத்தம் பரவி காய்ந்துபோய இருந்தது.மார்பு மட்டும் கொஞ்சம் உயர்வது தாழ்வதுமாய் இருந்ததால் அவன் உயிரோடுதான் இருக்கிறான் என்பதை உறுதிப் படுத்திக்கொள்ள முடிந்தது.அவன் முகத்தைப் பார்த்த சுசீ இவந்தான் குப்த ராஜ்ஜியத்து இளவரசன் ஹஸ்த குப்தனாய் இருக்க வேண்டும் என எண்ணினாள்.

ஆஹா.. இவன்தான் எத்தனை அழகாக உள்ளான்.இவன் மதியின் மனதைக் கவர்ந்ததில் வியப்பொன்றுமில்லை.ஆனாலும் இவ்வளவு பெரிய பிரர்ச்சனையில் மாட்டிக்கொண்டு விட்டானே?கொலைப்பழி என்பது அதுவும் ஒரு நாட்டு இளவரசனைக் கொன்ற பழி என்பது சும்மாவா?இவன் அப்பழியிலிருந்து எப்படி எவ்வாறு விடுபடுவது..நம் இளவரசியின் விருப்பம் எப்போது நிறைவேறுவது?மதியின் காதல் கைகூடுவது எங்கனம் என்று சிந்தித்தவாறு கவலையோடு நின்றவளின் கண்களில் பட்டான்

வீரர்களில் ஒருவனான காளி.

காளீ...ரகசியமாய்க் கூப்பிட்டாள் சுசீ..

சட்டெனத் திரும்பிப்பார்த காளியின் முகம் இவளைப் பார்த்ததும் மலர்ந்தது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.